Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

பாருங்க.. இதுதான் மத்திய அரசின் அலர்ட்.. குண்டு பற்றி எங்கே? பொய்யா பேசுறீங்க அண்ணாமலை: திமுக பதிலடி

Subscribe to Oneindia Tamil

சென்னை: கோவை கார் சிலிண்டர் வெடிப்பு தமிழ்நாடு முழுவதும் பரபரப்பாக பேசப்பட்டு வரும் நிலையில், இந்த சம்பவத்தை மையப்படுத்தி திமுக மீது பாஜகவினர் தொடர்ந்து விமர்சனம் வைத்து வருகின்றனர்.

இந்நிலையில், இந்த சம்பவம் குறித்து ஏற்கெனவே மத்திய உளவுத்துறை எச்சரித்திருந்த போதும் ஏன் உரிய பாதுகாப்பு நடவடிக்கை எடுக்கவில்லையென? பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கேள்வியெழுப்பி இருந்தார்.

இதற்கு தற்போது திமுகவின் ராஜீவ் காந்தி பதிலளித்துள்ளார். அதாவது மத்திய உளவுத்துறையின் அறிக்கையில் இந்த குண்டு வெடிப்பு தொடர்பான எச்சரிக்கை எங்கே இடம் பெற்றிருக்கிறது என அறிக்கையை பகிர்ந்து கேள்வியெழுப்பியுள்ளார்.

 கார் சிலிண்டர் வெடிப்பு

கார் சிலிண்டர் வெடிப்பு

கடந்த 23ம் தேதி அதிகாலை 4.05 மணியளவில் கோவை உக்கடம் பகுதியில் கோட்டை ஈஸ்வரன் கோயில் முன்பு மாருதி 800 ரக கார் ஒன்று தீப்பற்றி எரிந்துள்ளது. காரை ஓட்டி வந்தவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். ஆரம்பத்தில் இது தீ விபத்து என்று சொல்லப்பட்டாலும், சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் கார் வெடித்து சிதறியது என்று கூறினார். பின்னர் இதனை காவல்துறை உறுதி செய்தது. மட்டுமல்லாது சம்பவம் நடந்த இடத்தில் இரும்பு குண்டுகளும், ஆணியும் இருந்துள்ளது. இது இந்த சம்பவம் சதி செயலாக இருக்கலாம் என்கிற சந்தேகத்தை கிளப்பியது.

 கைது

கைது

இதனையடுத்து விசாரணையை தீவிரப்படுத்திய காவல்துறை காரை ஓட்டி வந்தது ஜமேஷா முபின் என கண்டுபிடித்தது. நிலைமையின் தீவிரத்தை உணர்ந்த காவல்துறை சம்பந்தப்பட்டோரை கண்டுபிடிக்க தனிப்படைகளை அமைத்தது. பின்னர் அடுத்த 24 மணி நேரத்திற்குள் 6 பேர் கைது செய்யப்பட்டனர். மேலும், சிலிண்டர் வெடித்ததில் உயிரிழந்த முபினின் வீட்டில் சோதனை மேற்கொண்டதில் வெடிபொருள் தயாரிக்க பயன்படும் அமோனியம் நைட்ரேட், பொட்டாசியம், சல்பர் ஆகியவை 75 கிலோ கைப்பற்றப்பட்டன.

விசாரணை

விசாரணை

இதில் குறிப்பிடத்தக்க விஷயம் என்னவெனில் முபின் ஏற்கெனவே என்ஐஏ-வால் விசாரணைக்கு உள்ளாக்கப்பட்டவர் என்பதுதான். இதனையடுத்து முபினின் செல்போன் உள்ளிட்டவற்றை ஆய்வு செய்ததில் அவர் 'புனித போர்' தொடர்பான வீடியோக்களை சமூக வலைத்தளங்களில் பதிவேற்றியுள்ளார் என்பதும், டெலிகிராம் ஆப் மூலமாக மத அடிப்படைவாதிகள் பலருடன் தொடர்பில் இருந்துள்ளார் என்பது கண்டுபிடிக்கப்பட்டது. விசாரணை தீவிரமடைந்த நிலையில், இந்த வழக்கை என்ஐஏ வசம் ஒப்படைக்க வேண்டும் என பாஜகவினர் தொடர்ந்து வலியுறுத்தி வந்தனர்.

 கேள்வி

கேள்வி

இதனையடுத்து சம்பவம் நடந்து 4 நாட்களுக்கு பிறகு வழக்கு என்ஐஏ வசம் ஒப்படைக்கப்படுவதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார். இவ்வாறு இருக்கையில், பாஜக மாநில தலைவர் அண்ணாமலை சில கேள்விகளை எழுப்பி இருந்தார். நேற்று முன்தினம் (அக்டோபர் 27ம் தேதியன்று) டிவிட்டரில், "அக்டோபர் 18ம் தேதியன்று, அதாவது கோவை சம்பவம் நடப்பதற்கு 5 நாட்களுக்கு முன்னர் மத்திய புலனாய்வு அமைப்பு தமிழக அரசுக்கு எச்சரிக்கை விடுத்திருந்தது" என்று கூறி, இது தொடர்பாக ஏன் முன்னெச்சரிக்கை பணிகள் மேற்கொள்ளப்படவில்லை என்று கேள்வி எழுப்பியிருந்தார்.

பொய்தானா

பொய்தானா

இந்த ட்வீட் சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவிய நிலையில், தற்போது இந்த கேள்விக்கு திமுகவின் செய்தி தொடர்பு இணைச் செயலாளர் ராஜீவ் காந்தி விளக்கமளித்துள்ளார். இந்த விளக்கத்தில் உளவுத்துறையின் அறிக்கையை பகிர்ந்து அண்ணாமலைக்கு கேள்வியெழுப்பியுள்ளார். ட்வீட்டில், "மத்திய அரசு அலர்ட் கொடுத்தது, அலர்ட் கொடுத்தது என்று அலட்டி கொள்ளும் Mr Ex officer அண்ணாமலை, வழக்கமாக கொடுக்கும் இந்த‌ அறிக்கையில் கோவையில் குண்டு வெடிக்கும்‌ என எங்கே இருக்கிறது? பொய்க்கு ஒரு அளவில்லையா...? வாயை திறந்தாலே பொய்தானா..?" என்று கேள்வியெழுப்பியுள்ளார். தற்போது இந்த அறிக்கை டிவிட்டரில் வேகமாக பகிரப்பட்டு வருகிறது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+