இப்படிப்பட்டவரா விஜய்? இதுக்கு பேர்தான் "சொந்த காசில் சூனியம்"! ரகசிய சர்வேயால் திமுக அதிர்ச்சி!
சென்னை: கரூரில் நடந்த தவெக தேர்தல் பிரச்சாரத்தில் 41 பேர் பலியான நிலையிலும் விஜய்க்கு மக்களிடம் செல்வாக்கு இருக்கிறது என்பதையே திமுக எடுத்த சீக்ரெட் சர்வேயில் தெரிகிறது. விஜய் மீது ஆளும் கட்சி என்னதான் விமர்சனங்களை முன் வைத்தாலும் அது மக்களிடம் எடுபடவில்லை என்பதையே இது காட்டுகிறது.
தி பிரிண்ட் எனும் ஆங்கில செய்தி நிறுவனம்தான் இந்த சர்வேயை எடுத்துள்ளது. ஒரு தொகுதிக்கு 1245 பேர் வீதம் 2.91 லட்சம் பேரிடம் இந்த கணிப்பு நடத்தப்பட்டது. அப்போது அவர்களிடம் என்டிஏ கூட்டணியில் தவெக இணைவது குறித்தும், அவ்வாறு இணையாமல் தனித்து போட்டியிடுவது குறித்தும் கேட்கப்பட்டது.

தேசிய ஜனநாயக கூட்டணியில் பாஜக , அதிமுக ஆகிய முக்கிய கட்சிகள் இணைந்துள்ளன. இந்த சூழலில் தவெகவும் இணைந்தால் என்னவாகும் என சர்வே நடத்தப்பட்டது. ஒரு வேளை என்டிஏ கூட்டணியில் தவெக இணைந்தால், திமுகவுக்கு 50 சதவீத வாக்குகளும் என்டிஏ கூட்டணிக்கு 35 சதவீத வாக்குகளும் சீமானுக்கு 12 சதவீத வாக்குகளும் கிடைக்கும் என கணிக்கப்பட்டுள்ளது.
பிரகாசமான வாய்ப்பு
அதாவது அதிமுக + பாஜக + தவெக ஏற்பட்டால் திமுக கூட்டணிக்கு வெற்றி வாய்ப்பு பிரகாசமாக இருப்பதாகவே கருதப்படுகிறது. ஒரு வேளை தவெக, என்டிஏ கூட்டணிக்கு செல்லாமல் தனித்து போட்டியிடுவதாக அறிவித்தால் அதிமுக+ பாஜக கூட்டணிக்கு 22 சதவீத வாக்குகளும் விஜய் கட்சிக்கு 23 சதவீத வாக்குகளும் நாம் தமிழர் கட்சிக்கு 5 சதவீத வாக்குகளும் கிடைக்கும் என கணிப்புகளில் வெளியாகியுள்ளது.
திமுக கூட்டணிக்கு வெற்றி
இது திமுக கூட்டணி வெற்றிக்கு பெரும் சவாலை ஏற்படுத்தும். இந்த சர்வேயில் இருந்து நாம் புரிந்துக் கொள்வது என்னவெனில் கரூர் கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் பலியான பிறகும் விஜய்க்கு மக்கள் மீது கோபமே இல்லை என்பதுதான்.
பிரச்சார கூட்டம்
கடந்த செப்டம்பர் 27-ஆம் தேதி கரூரில் தவெக சார்பில் பிரச்சார பொது கூட்டம் நடத்தப்பட்டது. அப்போது கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் பலியாகிவிட்டனர். 100-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.
சென்னை வந்த விஜய்
இந்த சம்பவம் நடந்ததும் விஜய் அங்கேயே இருக்காமல் அவசர அவசரமாக சென்னை கிளம்பிவந்து விட்டார் என்ற விமர்சனம் எழுந்தது. பிரச்சாரத்திற்கு செல்வதற்கு அத்தனை மணி நேரம் எடுத்துக் கொண்ட விஜய், வீட்டிற்கு மட்டும் எப்படி ஒரு மணி நேரத்தில் வந்தார் என்ற கேள்வி எழுந்தது.
தனி விமானம்
மேலும் குறிப்பிட்ட நேரத்தில் தனி விமானம் பயணிக்க முன்கூட்டியே அனுமதி பெறப்பட்டிருந்த நிலையில் திடீரென நேரத்தை மாற்றி திருச்சியில் இருந்து சென்னைக்கு விஜய் தனி விமானத்தில் சென்றது எப்படி, அவருக்கு அனுமதி கொடுத்தது யார் என்றெல்லாம் கேள்விகள் எழுந்தன.
கரூர் கோர சம்பவம்
இந்த கரூர் கோர சம்பவம் நடந்த போது அதிமுக, தேமுதிக, பாமக, நாம் தமிழர், மக்கள் நீதி மய்யம் உள்ளிட்ட கட்சிகள் ஒன்றிணைந்து உதவிய நிலையில் தவெக மட்டும் தப்பியோடியதாகவே விமர்சிக்கப்பட்டது.
விஜய்க்கு தலைமை பண்பு இல்லை
வேறு ஒரு வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி செந்தில் குமார், விஜய்க்கு தலைமை பண்பு இல்லை. எல்லா கட்சிகளும் கரூர் மருத்துவமனையில் இருக்கும் போது தவெக மட்டும் ஏன் இல்லை? தவெக ஒரு கட்சியா என்றெல்லாம் கேள்வி எழுப்பப்பட்டது.
வீடியோ கால்
எனினும் விஜய் கடந்த வாரம் 41 பேரின் குடும்பத்தினருடன் வீடியோ காலில் பேசினார். அப்போது யாருமே விஜய் மீது கோபப்படவில்லை என தெரியவந்தது. 41 பேரின் குடும்ப நிலையையும் இறந்த நபர் குறித்தும் விஜய் கண்ணீர் விட்ட போது கூட அந்த குடும்பத்தினர் ஆறுதல் தெரிவித்ததாகவும் சொல்லப்படுகிறது.
விஜய்க்கு எல்லாமே சிறப்பு
இப்படிப்பட்ட சூழலில் உச்சநீதிமன்றத்தில் தவெகவுக்கு சாதகமாக தீர்ப்பு வந்தது. இந்த நிலையில் விரைவில் கரூருக்கு விஜய் செல்கிறார் என தகவல்கள் வெளியானது. அந்த பாதிக்கப்பட்ட குடும்பத்தினரை வேலுச்சாமிபுரம் பகுதியில் உள்ள திருமண மண்டபத்திற்கு அழைத்து வர புஸ்ஸி ஆனந்த் தலைமையில் ஒரு குழு அமைக்கப்பட்டுள்ளது. கரூர் சம்பவத்திற்கு பிறகு விஜய்யின் அரசியல் எதிர்காலம் அவ்வளவுதான் என சொல்லப்பட்டது. ஆனால் தற்போது கருத்துக் கணிப்புகள் சொல்வதை பார்த்தால் விஜய்க்கு இன்னமும் மக்களிடம் செல்வாக்கு இருப்பதாகவே சொல்லப்படுகிறது. அவர்கள் மனதில் விஜய் எப்படிப்பட்டவர் என்பதையும் காட்டுகிறது. இந்த நிலையில் திமுக ரகசிய கருத்துக் கணிப்பால் விஜய்யின் செல்வாக்கு எப்படியிருக்கிறது என்பதை வெளிச்சம் போட்டு காட்டிவிட்டதாகவே பார்க்கப்படுகிறது.
-
அஸ்திவாரத்தை ஆட்டும் விஜய்.. அலற போகும் அறிவாலயம்! திமுக ‘மாஜி’ புள்ளிகளுக்கு செக்! களமிறங்கிய டீம்! -
"பன்றிக்கு நன்றி சொல்லி குன்றின் மேல் ஏறி".. மரியா வில்சனின் வெள்ளை அறிக்கையை விமர்சித்த திமுக -
இது வெள்ளை அறிக்கை அல்ல.. வெற்று அறிக்கை.. அமைச்சர் மரிய வில்சனை விளாசிய தங்கம் தென்னரசு! -
ஆட்டம் போடாதீங்க! சிறுபான்மை மக்களும் நிரந்தரமாக குட்பை சொல்லிடுவாங்க.. திமுகவை எச்சரித்த காங்கிரஸ் -
பெப்பே காட்டிய விஜய்.. விஷத்தை கடைந்த ராகுல்.. திமுக, காங்கிரஸ் பந்தம் டோட்டலாக க்ளோஸ் ஆயிருச்சே -
தவெகவை முடக்க இதுமட்டும்தான் ஒரே வழி.. திமுக பிடித்த ரூட்.. ஸ்டாலின் கையில் பிரம்மாஸ்திரம் -
காங்கிரஸ் செய்த கழுத்தறுப்புகள்.. ஆசிர்வாதம் செய்த ராகுல் காந்தி! விடாத திமுக.. குதிக்கும் தலைகள்! -
அண்ணா அறிவாலயத்தில் ஆட்டம் போட்ட மகளிரணி.. ரீல்ஸ் போடச் சொல்லும் ஸ்டாலின்! தவெகவைப் பார்த்து சூடு? -
ஆடிய ஆட்டமென்ன? குறுநில மன்னர்களாக அமைச்சர்கள்! அடங்காத மா.செ.க்கள்! ஆக்ஷனுக்கு தயாரான ஸ்டாலின்! -
2021ல் ஸ்டாலினின் திமுக வெள்ளை அறிக்கை vs 2026ல் விஜய்யின் தவெக வெள்ளை அறிக்கை.. ஒரு ஒப்பீடு -
தவெகவுக்கு முக்கியத்துவம்?.. மாங்குடியில் ப.சிதம்பரம் செய்த சம்பவம்..அதிருப்தியில் திமுக நிர்வாகிகள் -
சைலண்ட் கில்லரான ஸ்டாலின்.. அதிமுக நிர்வாகிகளுக்கு பறந்த அழைப்பு.. தவெகவுக்கு செக்











Click it and Unblock the Notifications