திமுகவின் 'தமிழகம் மீட்போம்' 3-வது கட்ட பொதுக்கூட்டம்... டிச.12 முதல் டிச.31 வரை 11 மாவட்டங்களில்..!
சென்னை: தமிழகம் மீட்போம் என்ற தலைப்பில் திமுக நடத்தி வரும் பொதுக்கூட்டங்கள் குறித்த 3-வது கட்ட விவரத்தை வெளியிட்டுள்ளது அக்கட்சியின் தலைமை.
தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கான பணிகளை பரபரவென கவனித்து வருகிறது திமுக. விடியலை நோக்கி ஸ்டாலின் குரல் என்ற தலைப்பில் ஒரு புறம் பிரச்சாரத்தை தொடங்கிய திமுக மற்றொரு புறம் தமிழகம் மீட்போம் என்ற தலைப்பில் மாவட்ட வாரியாக பொதுக்கூட்டங்களை நடத்தி வருகிறது.

ஏற்கனவே இரண்டு கட்டங்களாக காணொலி மூலம் ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற இந்த பொதுக்கூட்டங்களை தொடர்ந்து இப்போது மூன்றாவது கட்டமாக தமிழகம் மீட்போம் பொதுக்கூட்டங்கள் நடைபெறவிருக்கிறது.
டிசம்பர் 12-ம் தேதி தொடங்கி டிசம்பர் 31-ம் தேதி வரை இந்த பொதுக்கூட்டங்கள் நடைபெறவுள்ளன. அதன்படி டிசம்பர் 12-ம் தேதி ராமநாதபுரம், டிசம்பர் 14-ம் தேதி திண்டுக்கல், டிசம்பர் 17-ம் தேதி கடலூர், டிசம்பர் 19-ம் தேதி திருவள்ளூர், டிசம்பர் 23-ம் தேதி சிவகங்கை, டிசம்பர் 26-ம் தேதி தஞ்சை, டிசம்பர் 28-ம் தேதி நாகை மற்றும் திருவாரூர் மாவட்டம், டிசம்பர் 29-ம் தேதி திருவண்ணாமலை, டிசம்பர் 31-ம் தேதி அரியலூர் மற்றும் பெரம்பலூர் மாவட்டங்களில் தமிழகம் மீட்போம் பொதுக்கூட்டங்கள் நடக்கவுள்ளன.
இம்மாத இறுதியுடன் காணொலிக் கூட்டங்களுக்கு குட் பை சொல்லிவிட்டு ஜனவரி மாதம் முதல் நேரடியாக களத்திற்கு வரவுள்ளார் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின். பொங்கல் பண்டிகை முடிந்தவுடன் தமிழகம் தழுவிய அளவில் தனது சுற்றுப்பயணத்தை தொடங்கும் அவர் தேர்தல் வரை தீவிர பிரச்சாரத்தில் ஈடுபடவுள்ளார்.
அவருக்கு பக்கபலமாக அவருடைய தூதுவர்களாக உதயநிதி ஸ்டாலின், கனிமொழி தொடங்கி கட்சியின் பல்வேறு அணிகளின் நிர்வாகிகள் வரை சுமார் 20 பேர் பரப்புரை செய்யவிருக்கின்றனர்.
-
என்னப்பா அங்க சத்தம்.. ஆக்ஷனில் இறங்கிய ’ஷா’! சரண்டரான அதிமுக தலைகள்! பஞ்சாயத்து முடிந்தது எப்படி? -
தவெகவில் இணைவது உறுதி போலயே.. அமைச்சருடன் கோயிலுக்கு வந்த விஜயபாஸ்கர்.. அடுத்தது என்ன? -
தவெக குதிரை பேரம் தொடர்பாக சிபிஐ விசாரணை நடத்தவேண்டும்.. ஆளுநரை சந்தித்து அதிமுக நிர்வாகிகள் புகார் -
கர்நாடகா முதல்வராக தேர்வானார் டிகே சிவக்குமார்.. காங்., எம்எல்ஏக்கள் ஆதரவு.. பதவியேற்பு எப்போது? -
எடப்பாடி பழிவாங்குவார்.. ஜூட் விட ரெடியான விஜயபாஸ்கர்.. நேரம் எடுத்துக்கொள்ளும் சிவி சண்முகம்! -
1000% கன்ஃபார்ம்.. புதிய கட்சி ஆரம்பிக்கும் அண்ணாமலை! அடுத்த வாரம் இருக்கு கச்சேரி! பரபர பாஜக! -
திரிணாமுல் எம்பிகள் மீது தொடர் தாக்குதல்.. பாஜகதான் காரணமா? வெளியான ஷாக் தகவல்! -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
எடப்பாடி பழனிசாமி இந்த அதிர்ச்சியை தாங்குவாரா? மேலும் 3 அதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா? -
பெரிய திமிங்கலம்! அதிமுகவில் அடுத்த விக்கெட்? திருச்சி வரும் முதல்வர் விஜய்யை சந்திக்கும் சிவிஎஸ்? -
டெல்லியில் க்ளைமாக்ஸ்! நெருங்கும் மெகா பிளான்.. பிரதமர் மோடியின் மத்திய அமைச்சரவையில் அதிரடி மாற்றம் -
கொஞ்சம் பொறுமையா இருங்க ஜி! தனித் தவில் வாசிக்க தயாரான அண்ணாமலை! அமைதிப்படுத்த இறங்கிய அமித் ஷா?












Click it and Unblock the Notifications