கூடுதல் தொகுதிகள்.. கறார் கம்யூனிஸ்ட்.. அதிர்ச்சியில் அறிவாலயம்.. தொடரும் இழுபறி
சென்னை: தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் ஏப்ரல் 23 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஆட்சியை தக்க வைப்பதற்கு திமுக கூட்டணியும், ஆட்சியை பிடிப்பதற்கு அதிமுக - பாஜக கூட்டணியும் தீவிரம் காட்டி வருகிறார்கள். தவெக, நாம் தமிழர் கட்சியும் களத்தில் சுழன்று கொண்டிருக்கிறார்கள். திமுக பிரம்மாண்ட கூட்டணியுடன் தேர்தலை சந்திக்கிறது. ஆனால் அதிக கட்சிகள் இருப்பதே தொகுதி பங்கீட்டில் சிக்கலை உருவாக்கியுள்ளது. திமுக - மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் இடையே மூன்றாம் கட்ட பேச்சுவார்த்தை நடைபெற்றது. இதில் கூடுதல் தொகுதிகள் வேண்டும் என்று சிபிஎம் தங்களின் நிலைப்பாட்டை உறுதியாக சொல்லியுள்ளதால் திமுக தீர்வு எட்ட முடியாமல் திக்கு முக்காடி வருகிறது.
தமிழ்நாடு, புதுச்சேரி, கேரளா, மேற்கு வங்கம், அசாம் உள்ளிட்ட மாநிலங்களுக்கு சட்டமன்ற தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டிற்கு வருகிற ஏப்ரல் 23 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெறுகிறது. தொகுதி பங்கீடு, வாக்குறுதிகள், பிரச்சாரம் ஆகியவற்றால் அரசியல் களம் சூடுபிடிக்க தொடங்கியுள்ளது. திமுக கூட்டணி கட்சிகளுடன் தொகுதி பங்கீடு தொடர்பாக பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகிறார்கள். (DMK Seat Sharing)

திமுக - மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தொகுதி பங்கீடு
திமுக கூட்டணியில் கூடுதல் கட்சிகள் இணைந்திருப்பதால், கடந்தமுறை போட்டியிட்ட தொகுதிகளை விட குறைவான தொகுதிகளை பெற்று கொள்ள வேண்டும் என்கிற கோரிக்கை விசிக, கம்யூனிஸ்ட்கள் உள்ளிட்ட கட்சிகளிடம் வைத்து வருகிறார்கள். அதற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி எதிர்ப்பு தெரிவிக்கிறார்கள். காங்கிரஸ் கட்சிக்கு கூடுதல் தொகுதிகள் ஒதுக்கப்படுகிறது என்பதற்காக எங்களுக்கு குறைவான தொகுதியை ஒதுக்குவது ஏற்க முடியாது என கூறி வருகிறார்கள்.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியும் தொகுதி பங்கீடு தொடர்பாக ஆலோசனை நடத்தி வருகிறார்கள். திமுக - கம்யூனிஸ்ட்கள் இடையே ஏற்கனவே இரண்டு கட்ட பேச்சுவார்த்தை நடைபெற்றது. அதில் எந்த உடன்பாடும் ஏற்படவில்லை.சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக - மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் இன்று மூன்றாம் கட்ட பேச்சுவார்த்தை நடைபெற்றது.
மூன்றாம் கட்ட பேச்சுவார்த்தை
அதன் பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த சிபிஎம் மாநில செயலாளர் பெ. சண்முகம், "கடந்தமுறை போட்டியிட்ட தொகுதிகளை விட கூடுதல் இடம் என்று வற்புறுத்தியுள்ளோம். நிறைய கட்சிகள் இருப்பதால் பேச்சுவார்த்தை நிறைவு செய்வதில் சிரமம் இருக்கிறது. ஒவ்வொரு கட்சியுடனும் பேசி முடிவுக்கு வர வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர்.
எங்களது கோரிக்கை தொடர்பாக முதலமைச்சரிடம் பேசிவிட்டு இரவுக்குள் சொல்வதாக கூறியுள்ளனர். பேச்சுவார்த்தை தொடர்ந்து நடைபெறும். சுமூகமான முறையில் தொகுதி பங்கீட்டை இறுதி செய்ய திமுக - சிபிஎம் இருவரும் முயற்சி செய்கிறோம். அடுத்தகட்ட பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்படும் என்கிற நம்பிக்கை எங்களுக்கு இருக்கிறது. அடுத்த ஓரிரு நாட்களில் தொகுதி பங்கீடு தெளிவு பெறும்.
கூடுதல் தொகுதிகள் கறார்
மார்ச் 30 ஆம் தேதி தான் தமிழ்நாட்டில் வேட்புமனுத்தாக்கல் தொடங்குகிறது. எனவே போதிய அவகாசம் இருக்கிறது. கூட்டணியில் கூடுதல் கட்சிகள் இணைந்திருப்பதால் கடந்த முறை போட்டியிட்ட தொகுதிகளை குறைத்துக் கொள்ள வேண்டும் என்று அவர்கள் கோரிக்கை வைத்துள்ளனர். அதை நாங்கள் ஏற்க முடியாது. கடந்தமுறை போட்டியிட எண்ணிக்கையை உயர்த்த வேண்டும் என்று சொல்லியுள்ளோம்.
பல கட்சிகள் இருக்கும்போது இந்த நிலைமை தவிர்க்க முடியாது. அதை நாங்கள் உணர்ந்துள்ளோம். ஆனால் சிபிஎம் கட்சிக்கு கூடுதல் இடம் என்பதற்கான முயற்சியை தொடர்ந்து மேற்கொள்வோம். காங்கிரஸ் கட்சியுடன் எங்களுக்கு எந்த பிரச்சனையும் இல்லை. திமுகதான் எங்கள் கூட்டணிக்கு தலைமை. அவரவர் கட்சிகளுக்குள்ள பலத்தை பொருத்து இடங்களை கேட்டு பெறலாம்.
காங்கிரஸ் கட்சி கூடுதல் தொகுதியை பெற்றதில் எங்களுக்கு எந்த ஆட்சேபனையும் இல்லை. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பலத்துக்கேற்ப தொகுதி பங்கீடு செய்ய வேண்டும் என நாங்கள் வற்புறுத்துவோம். இதில் அவர்கள் வருத்தப்படுவதற்கு எதுவும் இல்லை. இதில் டெட்லாக் என்கிற பேச்சுக்கே இடமில்லை. கூடுதல் இடம் என்பதில் நாங்கள் உறுதியாக இருக்கிறோம். நான் மழுப்பாமல் தெளிவாக தானே பேசுகிறேன்" என்றார்.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
இதாம்லே ட்விஸ்டு.. துண்டை போட்ட உடன்பிறப்புகள்! நழுவிய தவெக நிர்வாகிகள்! விஜய் காதுக்கு போன மேட்டர்! -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
"திமுககாரன்னா திமிர் இருக்கணும்".. காரணம் சொல்லி ‘ஜென் ஸி' மீட்டப்பில் பேசிய டிஆர்பி ராஜா -
திருச்சியில் விஜய்யை சிரித்தபடி ஓடிச்சென்று வரவேற்ற மதிமுக துரை வைகோ! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
பிளான் A எடப்பாடி.. பிளான் B திருமா.. திமுக பிளான்.. புட்டு புட்டு வைத்த காதர் மொகிதீன் -
ஸ்டாலினே சொன்னா தான் உண்டு.. திமுக - அதிமுக கூட்டணி முயற்சி நடந்ததா? 30 நாளாய் நீடிக்கும் மர்மம்! -
எதிர்காலம் நம்பிக்கையளிக்கிறது.. எனர்ஜி கூடுகிறது! ஜென் ஸி கூட்டம் குறித்து மு.க.ஸ்டாலின் நெகிழ்ச்சி -
10ல் 1ல் மட்டுமே வெற்றி.. எனன் நடந்தது? தேமுதிக மா.செக்களை அழைத்து விசாரிக்கும் பிரேமலதா விஜயகாந்த் -
அதிமுகவிற்கு ஆதரவாக வந்த திமுக.. முதல்வர் விஜய்க்கு எதிராக வியூகம்.. கவனிச்சீங்களா -
பொதுச்செயலாளர் பதவியை விட்டு விலகுகிறார் திமுக துரைமுருகன்? ஸ்டாலினின் அடுத்த சாய்ஸ் அவர்?











Click it and Unblock the Notifications