சூரசம்ஹாரம் விழாவில் முதல்வருக்கு அரோகராவா.. ஆகம விதிகள் மீறல்! பாயிண்ட்டை பிடித்த சேகர் பாபு

Subscribe to Oneindia Tamil

சென்னை: நேற்று நடந்த திருச்செந்தூர் சூரசம்ஹாரம் நிகழ்வில், ஆகம விதிகள் அதிகப்படியாக மீறப்பட்டுள்ளன என்று முன்னாள் அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு விமர்சித்துள்ளார். மேலும், முருகனுக்கு அரோகரா என்று சொல்வதற்கு பதிலாக முதல்வருக்கு அரோகரா.. அறநிலையத்துறை அமைச்சருக்கு அரோகரா என்று சொல்கிறார்கள்.. என்றும் கூறியுள்ளார்.

திருச்செந்தூர் முருகன் கோவிலில் நேற்று சூரசம்ஹாரம் கோலாகலமாக நடந்தது. லட்சக்கணக்கான பக்தர்கள் சூரசம்ஹாரத்தை நேரில் கண்டுகளித்தனர். அப்போது முருகப்பெருமான் ஜெயந்திநாதர் சூரபத்மனை வேல் கொண்டு வதம் செய்தார். அப்போது முருக பக்தர்கள் வெற்றி வேல் வீர வேல்.. அரோகரா கோஷம் எழுப்பினர். அப்போது, திருச்செந்தூரில் சூரசம்ஹார நிகழ்வுக்காக அரசு ஏற்பாடு செய்திருந்த பாடல் குழுவினர், முருகனுக்கு அரோகரா.. என கூறியதோடு தமிழக முதல்வருக்கு அரோகரா.. இந்து சமய அறநிலையத்துறை அமைச்சருக்கு அரோகரா என கோஷம் எழுப்பினர்.

Sekar Babu Slams Tvk Govt Arohara for the CM in Tiruchendur Soorasamharam Accused agama rules not followed

ஆகம விதிகள் மீறப்பட்டுள்ளது

இந்நிலையில், திருச்செந்தூரில் இவ்வளவு நாட்கள் சூரசம்ஹார நிகழ்வு நடந்து இருக்கிறது. ஆனால் இப்படி யாரும் முதல்வருக்கு, அமைச்சருக்கு அரோகரா என கூறியதில்லை என திமுக, பாஜக உள்ளிட்ட கட்சிகள் தமிழக அரசு கண்டனங்களை தெரிவித்து வருகின்றன. முன்னாள் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபுவும் இதற்கு கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறியதாவது:-

ஆகம விதிகள் அதிகப்படியாக மீறப்பட்டுள்ளன. மனிதனை இறைவனுக்கு நிகராக நேற்று கொண்டாடி இருக்கிறார்கள். ஒரு இடத்தில் பார்த்தால், தெருக் கூத்தாடிகளை எல்லாம் அழைத்து சென்று, அங்கு முருகனுக்கு அரோகரா என்று சொல்வதற்கு பதிலாக முதல்வருக்கு அரோகரா.. அறநிலையத்துறை அமைச்சருக்கு அரோகரா என்று சொல்கிறார் ஒருவர்.

சட்டையின்றி தான் வாங்க வேண்டும்

இன்னொருவர் சொல்கிறார், வேலை வாங்கி எப்படி முருகன் பாலகனாக இருந்து எப்படி சூரனை வதம் செய்தாரோ அதே போன்று வேல் பெற்று வதம் செய்த கடவுள் தமிழக முதல்வர் என வர்ணிக்கிறார். அடுத்த துறையினுடைய அமைச்சர் வேலையும், சேவற்கொடியையும் இரண்டு கைகளில் வைத்திருக்கிறார்.

வேலை வாங்குபவர் சட்டையின்றி வெறும் உடம்போடு தான் வேலையும், சேவற்கொடியையும் வாங்க வேண்டும். வேலை வாங்குகின்ற ஆகமம் அங்கு எங்குமே இல்லை. வேலை பிடிப்பதும், அந்த வேலை கொண்டு சூரசம்ஹாரம் செய்வதும் அந்த திருக்கோயிலில் இருக்கும் அர்ச்சகர்கள், திருக்கோயிலுக்கு சொந்தமானவர்கள் தான் அந்த பணியில் ஈடுபடுவார்கள்.

முழுக்க முழுக்க ஆகம விதிகள் பின்பற்றப்படவில்லை

ஆனால் நேற்று இவர் கையில் வேலையும், சேவர்கொடியும் வைத்துக்கொண்டு இருக்கிறார். முழுக்க முழுக்க நேற்று ஆகம விதிகள் பின்பற்றப்படவில்லை. முழுக்க முழுக்க இது பக்தர்களுக்காக, பக்தர்களின் நன்மைக்காக கொண்டாடப்பட்ட சூரசம்ஹாரம் நிகழ்ச்சி இல்லை. ரீல்ஸ் ஆட்சிக்காக, ரீல்ஸ்க்காகவே நேற்று சூரசம்ஹாரம் கொண்டாடப்பட்டுள்ளது" என்று விமர்சித்துள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+