பெரியார் படத்துடன் கிருஷ்ணஜெயந்தி வாழ்த்து- ஐ.டி.விங் டாக்டர் மகேந்திரன் மீது திமுக சீனியர்கள் காட்டம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: தந்தை பெரியார் படம் போட்டு கிருஷ்ணஜெயந்தி வாழ்த்துகள் தெரிவித்த திமுகவின் தகவல் தொழில்நுட்ப அணி இணைச் செயலாளர் டாக்டர் ஆர். மகேந்திரனுக்கு திமுகவில் கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது.

நடிகர் கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சியில் துணைத் தலைவராக இருந்தவர் டாக்டர் மகேந்திரன். பொள்ளாச்சியை சேர்ந்த டாக்டர் மகேந்திரன் அப்பகுதியில் தனிசெல்வாக்குடன் இருந்தார். 2019 லோக்சபா தேர்தலில் மக்கள் நீதி மய்யம் சார்பில் போட்டியிட்டு கணிசமான வாக்குகளைப் பெற்று திரும்பிப் பார்க்க வைத்தார்.

சட்டசபை தேர்தலில் கோவை சிங்காநல்லூர் தொகுதியில் போட்டியிட்டு தோல்வி அடைந்தார். டாக்டர் மகேந்திரன் இருக்கிறார் என்ற தைரியத்தில்தான் கமல்ஹாசனும் கோவை தெற்கு தொகுதியில் போட்டியிட்டார். ஆனால் கமல்ஹாசனும் தோல்வியைத் தழுவினார்.

திமுகவில் மகேந்திரன்

திமுகவில் மகேந்திரன்

சட்டசபை தேர்தலில் மக்கள் நீதி மய்யம் படுதோல்வி அடைந்த நிலையில் கமல்ஹாசனுக்கும் டாக்டர் மகேந்திரனுக்கும் இடையே பகிரங்க மோதல் வெடித்தது. இதனால் மக்கள் நீதி மய்யம் கட்சியில் இருந்து வெளியேறிய டாக்டர் மகேந்திரன், முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்தார். திமுகவில் அவருக்கு தகவல் தொழில்நுட்ப அணியின் இணைச் செயலாளர் பதவி வழங்கப்பட்டுள்ளது.

திமுக மரபு

திமுக மரபு

திமுகவைப் பொறுத்தவரை புராண கதைகள் அடிப்படையிலான பண்டிகைகளுக்கு வாழ்த்துகள் சொல்வது காலங்காலமாக தவிர்க்கப்பட்டு வருகிறது. இது இந்துக்களுக்கு எதிரானது என்கிற விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டாலும் இந்த மரபு திமுகவில் தொடர்ந்து கடைபிடிக்கப்பட்டு வருகிறது. திமுகவின் அடிப்படை கொள்கை ஒன்றே குலம் ஒருவனே தேவன் என்பதுதான் என பேரறிஞர் அண்ணா பிரகடனப்படுத்தி இருக்கிறார்.

கிருஷ்ண ஜெயந்தி வாழ்த்து

கிருஷ்ண ஜெயந்தி வாழ்த்து

இந்த நிலையில் கிருஷ்ணஜெயந்தியை முன்னிட்டு திமுக தகவல் தொழில்நுட்ப அணி இணைச் செயலாளரான டாக்டர் மகேந்திரன் அனைவருக்கும் வாழ்த்துகளைத் தெரிவித்திருந்தார். இந்த வாழ்த்து படத்தில் கடவுள் இல்லவே இல்லை என்று பகுத்தறிவு பேசிய தந்தை பெரியார் படம் இருந்தது; ஒன்றே குலம் ஒருவனே தேவன் என்ற அண்ணாவின் படம்; புராண கதை பண்டிகைகளுக்கு வாழ்த்து சொல்லாத கருணாநிதி படங்களும் இருந்தன. இது திமுக சீனியர்களை முகம் சுளிக்க வைத்திருக்கிறது.

திமுக தலைமையிடம் புகார்

திமுக தலைமையிடம் புகார்

மேலும் "யாராவது டாக்டர் மகேந்திரனுக்கு சொல்லுங்களேன்! அவர் இருப்பது திமுகவில்; மையத்தில் அல்ல. கிருஷ்ண ஜெயந்தி வாழ்த்து கூறுகிறார்!" என்கிற கொந்தளிப்பான பதிவுகளையும் சமூக வலைதளங்களில் பதிவிட்டிருக்கின்றனர் திமுக சீனியர்கள். இது விவாதப் பொருளாகவும் மாறி இருக்கிறது. இதனை கட்சித் தலைமையில் கவனத்துக்கு கொண்டு செல்ல இருப்பதாகவும் சில சீனியர்கள் தெரிவித்தனர். அதேநேரத்தில் பல்வேறு கட்சிகளில் இருந்து வகைதொகை இல்லாமல் வருவோர் போவோர் எல்லோரையும் திமுகவில் சேர்த்தால் இப்படி நீர்த்துப் போவது தவிர்க்க முடியாதது என்கிற குமுறலையும் சீனியர்கள் கொட்டுகின்றனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+