என்னது கொ.ப.செ.வா? திமுகவினரை அதிர்ச்சியில் உறைய வைத்த தங்க தமிழ்ச்செல்வன்!
Recommended Video
சென்னை: திமுகவின் கொள்கை பரப்பு செயலாளர்களில் ஒருவராக தங்க தமிழ்ச்செல்வன் நியமிக்கப்பட்டதால் அக்கட்சியில் பலரும் அதிர்ச்சி மற்றும் ஆச்சரியத்தில் உறைந்து போயுள்ளனர்.
திமுகவின் கொள்கை பரப்புச் செயலாளர்களாக திருச்சி சிவா மற்றும் ஆ. ராசா ஆகியோர் இருந்து வருகின்றனர். இந்த இருவரும் திராவிடர் இயக்கத்தின் நூற்றாண்டு கால வரலாறு குறித்து பல மணிநேரங்கள் இடைவிடாது வகுப்பு எடுக்கும் வல்லமை கொண்டவர்கள்.

பல்வேறு அறிஞர்களின் நூல்களை கற்றறிந்து சமூக நீதி சித்தாந்தத்தின் அத்தனை முகங்களையும் இந்துத்துவாவின் அத்தனை கோர முகங்களையும் பல்லாயிரம் ஆண்டுகால தமிழர் வரலாற்றை பாமரர்களுக்கும் எளிதில் புரியும்வகையில் பாடம் எடுக்கும் திறமையாளர்கள். மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியால் கொள்கை பிரசார பீரங்கிகளாக திமுகவினருக்கு அடையாளம் காட்டப்பட்டவர்கள் ராசாவும் சிவாவும்.
இந்த இருவருடன் இப்போது தங்க தமிழ்ச்செல்வனையும் கொள்கை பரப்பு செயலராக நியமித்துள்ளனர். அதிமுக, அமமுகவில் இருந்து வருகின்றவர்களுக்கு ஏதோ ஒரு பதவி, மாவட்ட அளவில் பொறுப்பு கொடுப்பது என்பது தவிர்க்க முடியாததுதான். கருணாநிதி காலத்தில் இருந்து இன்றுவரை திமுகவில் பல முக்கிய பொறுப்புகளில் இருப்பவர்கள் பெரும்பாலும் அதிமுகவில் இருந்து கட்சி தாவியவர்கள்தான்.
ஆனால் கட்சியின் கொள்கை பரப்பு செயலாளர் போன்ற மிக முக்கிய பதவிகளை அவர்களுக்கு கருணாநிதி ஒருபோதும் தூக்கி தந்தது இல்லை. அதுவும் திராவிட என்கிற பெயரையே வைக்க விரும்பாத கட்சியாக அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தை உருவாக்கினார் தினகரன்.
திராவிட என்கிற பெயரையே ஒவ்வாமையாக கொண்ட அமமுகவின் கொள்கை பரப்பு செயலாளராக இருந்தவர்தான் தங்க தமிழ்ச்செல்வன். அப்படி திராவிட ஒவ்வாமை கட்சியின் கொபசெவுக்கு திராவிடர் இயக்கத்தின் அசல் முகமான திமுகவில் கொள்கைபரப்பு செயலாளர் பதவி கொடுக்கப்பட்டிருக்கிறது. இதுதான் திமுகவினரை மட்டுமல்ல எல்லோரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.
அதிமுக, அமமுகவை போல ஓட்டு அரசியல் கட்சியாக மட்டும்தான் நாங்கள் இனி செயல்படுவோம் என்பதைத்தான் தங்க தமிழ்ச்செல்வனை கொள்கை பரப்புச் செயலாளராக கொண்ட திமுக சொல்கிறதா? என்பதுதான் அக்கட்சியில் கொள்கை கொள்கை என பேசி பேசியே காலத்தை தொலைத்தவர்களின் ரத்தக் கண்ணீருடனான கேள்வி.
-
"திமுக இல்லாதது கவலையளிக்கிறது.." ரொம்பவே வருத்தப்பட்டு பேசிய திருமாவளவன்.. என்ன மேட்டர்? -
2029க்கு டார்கெட் செய்யும் விஜய்.. எப்படியாவது உள்ளே நுழைய வேண்டும்.. திமுக கொடுத்த கேப்.. ராகுல் முடிவு என்ன? -
“திமுக கூட்டணியில்தான் தொடர்கிறோம்.. தவெக அரசுக்கு வெளியில் இருந்து ஆதரவு”.. CPI வீரபாண்டியன் உறுதி! -
“திமுக தயவில்தான் தவெக ஆட்சி நடக்கிறது.. நான்தான் வழியனுப்பி வைத்தேன்”.. ஸ்டாலின் ஓபன் டாக்! -
உதயநிதியின் தவறுக்கான தண்டனைதான்.. திமுகவின் தோல்வி! ராகுல் காந்தியை இழுக்காதீங்க - மாணிக்கம் தாகூர் -
“தனது தலையில் தானே மண் அள்ளிப் போட்டுக் கொண்டுள்ளார் ராகுல்..” முரசொலி சரமாரி விமர்சனம்! -
யார் எம்எல்ஏ, யார் அமைச்சர் என்று முதல்வருக்கே தெரியாத ஆட்சி நடக்கிறது.. உதயநிதி ஸ்டாலின் விமர்சனம்! -
நேற்று பெய்த மழையில் இன்று முளைத்த விஷக்காளான் நீங்க! விஜய் குறித்து திமுக ஐடி விங்க் விமர்சனம் -
திமுக நாசமா போக காரணமே நாமதான்..ஒரிஜினல் திமுககாரன வளர்த்து விடுங்க! மேடையில் வெடித்த மாஜி மூர்த்தி! -
தாத்தா காலத்து பாலிடிக்ஸ் வேலைக்கு ஆகாது! உதய் போடும் மாஸ்டர் ப்ளான்! இனி Gen Z ஸ்டைல் தானாமே! -
"இது அதுல்ல?.. ஜனநாயகத்தை சிதைப்பதில் பாஜகவும் தவெகவும் ஒண்ணு” - திமுக சரமாரி அட்டாக்! -
“ஒரு இயக்கம்.. இன்னொரு இயக்கத்தின் சின்னத்தில் போட்டியிடக்கூடாது” - துரை வைகோ!












Click it and Unblock the Notifications