இஸ்லாமியர்கள் குறித்து இழிவான விமர்சனம்- வருத்தம் தெரிவித்த திமுக பேச்சாளர் சிவாஜி கிருஷ்ணமூர்த்தி!

Subscribe to Oneindia Tamil

சென்னை: இஸ்லாமியர்கள் குறித்து இழிவாக பேசியதால் பெரும் கொந்தளிப்பும் போராட்டமும் வெடித்த நிலையில் தமது விமர்சனத்துக்கு திமுகவின் தலைமை கழகப் பேச்சாளர்களில் ஒருவரான சிவாஜி கிருஷ்ணமூர்த்தி வீடியோ மூலம் பகிரங்கமாக வருத்தம் தெரிவித்துள்ளார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவரான நடிகர் விஜய் அண்மையில் ரம்ஜான் இஃப்தார் நோன்பு நிகழ்ச்சியில் பங்கேற்றார். இஃப்தார் விருந்தில் பங்கேற்ற நடிகர் விஜய், அனைவருடனும் சேர்ந்து தொழுகை நடத்தினார். பின்னர் அனைவருக்கும் இஃப்தார் விருந்து வழங்கப்பட்டது.

dmk Shivaji Krishnamurthy

இந்த நிலையில் சென்னை வண்ணாரப்பேட்டையில் திமுக தலைவரும் தமிழக முதல்வருமான மு.க.ஸ்டாலினின் 72-வது பிறந்த நாள் பொதுக் கூட்டம் நடைபெற்றது. இந்த பொதுக் கூட்டத்தில் திமுகவின் தலைமை கழகப் பேச்சாளர்களில் ஒருவரான சிவாஜி கிருஷ்ணமூர்த்தி பங்கேற்றார்.

சிவாஜி கிருஷ்ணமூர்த்தி பேசுகையில், நடிகர் விஜய் வழங்கிய இஃப்தார் விருந்தை விமர்சித்தார். அப்போது இஸ்லாமியர்கள் குறித்து இழிவான ஒரு சொல்லைப் பயன்படுத்தினார். இந்த இழிவான விமர்சனத்துடனான சிவாஜி கிருஷ்ணமூர்த்தியின் வீடியோ சமூக வலைதளங்களில் பகிரப்பட்டது.

மேலும் பல்வேறு இஸ்லாமிய அமைப்புகளும் போராட்டத்தில் குதித்தன. இந்த போராட்டங்களுக்கு அதிமுகவும் ஆதரவு தெரிவித்தது; சிவாஜி கிருஷ்ணமூர்த்தியை கைது செய்ய கோரி நடத்தப்பட்ட இந்தப் போராட்டங்கள் திமுக தலைமைக்கு கடும் நெருக்கடியை கொடுத்தது.

வருத்தம் தெரிவித்து வீடியோ வெளியிட்ட சிவாஜி கிருஷ்ணமூர்த்தி

இந்த நிலையில் தற்போது சிவாஜி கிருஷ்ணமூர்த்தி தாம் பேசிய பேச்சுக்கு வருத்தம் தெரிவித்து வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், ராயபுரம் மேற்கு பகுதியில் நடந்த பொதுக் கூட்டத்தில் கருணாநிதி, இஸ்லாமிய மக்களுக்கும் இஸ்லாமிய சொந்தங்களுக்கும் என்ன என்ன சாதனைகள், உதவிகளை செய்திருக்கிறார் என பட்டியலிட்டுப் பேசினேன். அப்போது முஸ்லிம் மக்களை எப்படி எல்லாம் ஏமாற்றி, முஸ்லிம்களால் எனக்கு ஆபத்து இருக்கிறது என பாதுகாப்பு கேட்ட நடிகர் விஜய் அவர்களை தோலுரித்து காட்டும் முகமாக நான் பேசும் போது, முஸ்லிம் மக்களை நான் ஏதோ இழிவுபடுத்திவிட்டதாக கருதிக் கொள்கின்றனர். அதை சில பேர் இட்டுக்காட்டி பரப்புரை செய்கின்றனர். நான் வாழுகின்ற பகுதி முஸ்லிம்கள் நிறைந்த பகுதி. என் வீட்டில் அருகே இருப்பது மசூதி., எனக்கு ஓட்டுநராக, கண்காணிப்பவர்களாக முஸ்லிம் மக்களே இருக்கின்றனர். முஸ்லிம் மக்கள் மீது எனக்கு எந்த காழ்ப்புணர்ச்சியும் வெறுப்பும் இல்லை. நான் ஆதங்கத்தில்தான் பேசினேன்; அதில் வார்த்தை தடுமாறி இருந்தால் அதற்காக என் வருத்தத்தைப் பதிவு செய்கிறேன் என சிவாஜி கிருஷ்ணமூர்த்தி தெரிவித்துள்ளார்.

அதிமுக ஜெயக்குமார் கண்டனம் என்ன?

முன்னதாக சிவாஜி கிருஷ்ணமூர்த்திக்கு கண்டனம் தெரிவித்து அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் அறிக்கை வெளியிட்டிருந்தார். அதில், இராயபுரம் பகுதியில் நடைபெற்ற திமுக பொதுக்கூட்டத்தில் திமுகவின் அதிகாரப்பூர்வ ஆபாச பேச்சாளரான சிவாஜி கிருஷ்ணமூர்த்தி என்பவர் இஸ்லாமியர்களை இழிவுபடுத்தும் விதமாக பேசியுள்ளார்!

இது இஸ்லாமிய மக்களை மட்டுமின்றி மத நல்லிணக்கத்தை பின்பற்றும் அனைத்து தரப்பட்ட மக்களையும் அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. திமுகவின் போலி முகத்திரை ஒவ்வொரு நாளும் கிழிந்து வருவதை மக்கள் உற்று நோக்கத் தொடங்கி விட்டனர்.

இஸ்லாமிய மக்களின் வாக்குகளுக்காக தேர்தல் நேரத்தில் மசூதிகளின் வாசலில் நின்று மன்றாடியதை இராயபுரம் தொகுதியின் திமுக சட்டமன்ற உறுப்பினர் மறந்து விட்டாரா? சமீபத்தில் தனக்கு எதிராக போராடினார்கள் என்பதற்காக பேசட்டும் என தன் வன்மத்தை தீர்த்துக் கொண்டாரா? ஆபாச பேச்சாளர்களை பேச விட்டு அழகு பார்ப்பது தான் இஸ்லாமிய மக்களுக்கு நீங்கள் காட்டும்‌ நன்றியா?

இதனை கண்டித்து இராயபுரத்தில் இஸ்லாமிய சகோதரர்களும்-இஸ்லாமிய அமைப்புகளும்‌ போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இது குறித்து வண்ணாரப்பேட்டை காவல் நிலையத்திலும் புகார் அளித்துள்ளனர்.

திமுக அந்த பேச்சாளர் மீதும் சட்டமன்ற உறுப்பினர் மீதும் எந்த நடவடிக்கையும் எடுக்காது என்பது அனைவருக்கும் தெரியும். ஆனால் காவல்துறை கைது நடவடிக்கை எடுக்கவில்லை என்றால்,இதற்கெல்லாம் பதில் சொல்ல வேண்டிய சூழலும்-காலமும் விரைவில்‌ வரும் என்பதை நினைவு படுத்துகிறேன் என தெரிவித்திருந்தார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+