முதல்வர் வீட்டு இறை வழிபாடு அவரது ஆட்சிக்கு இயற்கையை இசைவாக்கியிருக்கிறது.. சொல்றது யார்னு பாருங்க!
சென்னை : அள்ளிவீசப்பட்ட தேர்தல் வாக்குறுதிகளில் கிள்ளி எடுக்கும் அளவுக்காவது அவற்றை நிறைவேற்ற முதல்வர் ஸ்டாலின் முன்வர வேண்டும், அதைவிடுத்து சனாதனம், ஆளுநர் என வெறுப்பு அரசியலை முன்வைத்தே காலத்தை கடத்தலாம் என்று நினைத்தால் மக்கள் மாற்று ஆட்சியை உருவாக்கி விடுவார்கள் என மருது அழகுராஜ் தெரிவித்துள்ளார்.
திமுக அரசு ஆட்சிப் பொறுப்பேற்று 2 ஆண்டுகளைக் கடந்துள்ளது. தேர்தல் வாக்குறுதிகளில் முக்கால்வாசியை நிறைவேற்றி விட்டதாகவும், மீதமுள்ளவற்றையும் விரைவில் நிறைவேற்றுவோம் என்றும் முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளார். ஆனால், எதிர்க்கட்சிகளோ, திமுக அளித்த தேர்தல் வாக்குறுதிகளை இன்னும் நிறைவேற்றவில்லை எனக் குற்றம்சாட்டி வருகின்றன.

ஓபிஎஸ் ஆதரவாளர் பதிவு : இதுதொடர்பாக ஓபிஎஸ் ஆதரவாளரான மருது அழகுராஜ் வெளியிட்டுள்ள ஃபேஸ்புக் பதிவில், "இரண்டாண்டு கால ஆட்சியில் விடியல் ஆட்சி செய்திடாத சாதனையை இயற்கை தாமாக முன்வந்து செய்து தமிழ்நாட்டை மகிழ்வித்து இருக்கிறது. அக்னி வெய்யில் ஆட்டத்தை கூட மாநிலம் எங்கும் பெய்து வரும் மழை குளிராக மாற்றியிருக்கிறது. மொத்தத்தில் முதலமைச்சர் வீட்டு இறை வழிபாடு அவரது ஆட்சிக்கு இயற்கையை இசைவாக்கியிருக்கிறது.
ஆனாலும் இயற்கையோடு சேர்ந்து எஞ்சியுள்ள காலத்திலாவது மக்களின் வேதனைகளை போக்கி விரல் நீட்டி சொல்வதற்கு ஏதேனும் சாதனைகளை செய்திட விடியல் நிறுவனம் முன்வர வேண்டும். குறிப்பாக அள்ளிவீசப்பட்ட தேர்தல் காலத்து வாக்குறுதிகளில் கிள்ளி எடுக்கப்பட்ட அளவுக்காவது அவற்றை நிறைவேற்ற முதல்வர் முன்வர வேண்டும்.

மக்கள் புத்திசாலிகள் : அதைவிடுத்து சனாதனம், ஆளுநர் என வெறுப்பு அரசியலை முன்வைத்தே காலத்தை கடத்தலாம் என்றும் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தில் உருவாகி இருக்கும் பிளவுகள் தங்களுக்கு தொடர் வாய்ப்புகளை தந்துவிடும் எனவும்.. கனா காண்பதை மக்கள் புரிந்து கொள்ள தொடங்கிவிட்டால்.. அவர்கள் தங்கள் மதிநுட்ப அரசியல் மற்றும் வாக்களிப்பின் மூலம் தி.மு.க.வுக்கு எதிரான மாற்று அரசியலையும் மாற்று ஆட்சியையும் உருவாக்கிவிடுவார்கள் என்பது நிச்சயம்.
இதனை முதல்வர் புரிந்து கொள்ள வேண்டும். 1967-ல் பேராயக்கட்சி என்ற பெருமையில் மூழ்கிக் கிடந்த காங்கிரஸ் ஆட்சிக்கு கல்லறை கட்டிவிட்டு திராவிட ஆட்சியின் தேரோட்டத்திற்கு வடம்பிடித்த வரலாற்றை நிகழ்த்திக் காட்டியவர்கள் தமிழக மக்கள் என்பதை தி.மு.க திரும்பிப் பார்த்து திருந்திவிடுவதும் தங்களை திருத்திகொள்வதும் நல்லது. ஏனெனில் தமிழக மக்கள் மிகவும் புத்திசாலிகள். என்ன நாஞ் சொல்றது" என அவர் தெரிவித்துள்ளார்.
-
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
தமிழகத்தில் 3வது குழந்தை பெற்றுக்கொண்டால் சலுகை? சுகாதாரத்துறை அமைச்சருக்கு விசிக கடிதம் -
உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட திமுக நிர்பந்தித்தது! ஜூன் 27ல் முக்கிய முடிவு! கொதித்து பேசிய வைகோ -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்.. என சொன்ன வள்ளுவர் சனாதனியா? ஆளுநர் மன்னிப்பு கோர வேண்டும் -சிபிஎம் -
Ilaiyaraja Birthday: ராஜாவின் ராஜாங்கம் தொடரட்டும்! இளையராஜாவுக்கு ஸ்டாலின் வாழ்த்து -
10ல் 1ல் மட்டுமே வெற்றி.. எனன் நடந்தது? தேமுதிக மா.செக்களை அழைத்து விசாரிக்கும் பிரேமலதா விஜயகாந்த் -
பிளான் A எடப்பாடி.. பிளான் B திருமா.. திமுக பிளான்.. புட்டு புட்டு வைத்த காதர் மொகிதீன் -
"திமுககாரன்னா திமிர் இருக்கணும்".. காரணம் சொல்லி ‘ஜென் ஸி' மீட்டப்பில் பேசிய டிஆர்பி ராஜா -
எதிர்காலம் நம்பிக்கையளிக்கிறது.. எனர்ஜி கூடுகிறது! ஜென் ஸி கூட்டம் குறித்து மு.க.ஸ்டாலின் நெகிழ்ச்சி -
ஆளுநரின் தனி செயலாளர் உட்பட.. தமிழகம் முழுவதும் ஐஏஎஸ் அதிகாரிகள் பலர் பணியிட மாற்றம்! -
Gen Z DMK Meetup.. விஜய் ஏற்படுத்திய ‘இன்ஸ்டா’ புயல்! இளைய தலைமுறையை நெருங்கும் திமுக! கைகொடுக்குமா?












Click it and Unblock the Notifications