"கை" வைத்த ஸ்டாலின்.. "கப்சிப்" மோடுக்கு போன அதிமுக.. எகிறும் டென்ஷனில் எடப்பாடியார்.. என்னாச்சு?

திமுக குறித்த ரிப்போர்ட்களை கேட்டு எடப்பாடியார் டென்ஷன் ஆகி வருகிறாராம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: தினம் தோறும், ஒவ்வொரு தொகுதிகளில் இருந்தும் வந்து கொண்டிருக்கும் ரிப்போர்ட்களை பார்த்து, எடப்பாடியாருக்கு டென்ஷன் எகிறியபடியே இருக்கிறதாம்.. இதற்கு முக்கிய காரணம், கொங்குவிலும் "கை" வைத்து விட்டதாம் திமுக...!

தேர்தல் முடிந்த நிலையில், ரிசல்ட்டை நோக்கி மக்கள் காத்திருக்கிறார்கள்.. இந்த இடைப்பட்ட நாட்களில், வாக்குப்பதிவு விகிதங்களை கொண்டு சில கருத்துக்கள் பரிமாறப்பட்டு வருகிறது.. தேர்தலுக்குப் பின் ஒவ்வொரு கட்சியும் தங்களுக்கு வெற்றி வாய்ப்பு எப்படி இருக்கிறது என்பதை ஆலோசித்தும் வருகிறது.

ஆனால் திமுக தரப்பு மட்டும் சற்று தெம்பாக உள்ளதாக தெரிகிறது.. அடுத்தடுத்த வேலைகளிலும் ஜரூராக இறங்கிவிட்டது.. இந்நிலையில், அதிமுக தரப்பு என்ன செய்கிறது? என்று ஒருசிலரிடம் நாம் பேசினோம். அவர்கள் சொன்னதாவது:

 டென்ஷன்

டென்ஷன்

"கையில் கிடைத்து வரும் ரிப்போர்ட்கள் எல்லாமே எடப்பாடியாரை டென்ஷன் தரக்கூடியதாகவே இருக்கிறது.. அதிமுகவுக்கு குறைவான தொகுதிகளிலேயே வெற்றி வாய்ப்பு என்று ஆரம்பம் முதல் அவருக்கு சொல்லப்பட்டு வருகிறது.. மற்றொரு புறம் திமுக கொங்குவில் கை வைத்துவிட்டதாக தகவல் பறந்தது.. இதுவும் அவருக்கு டென்ஷனை கூட்டி உள்ளது.

 டென்ஷ்ன்

டென்ஷ்ன்

"கையில் கிடைத்து வரும் ரிப்போர்ட்கள் எல்லாமே எடப்பாடியாரை டென்ஷன் தரக்கூடியதாகவே இருக்கிறது.. அதிமுகவுக்கு குறைவான தொகுதிகளிலேயே வெற்றி வாய்ப்பு என்று ஆரம்பம் முதல் அவருக்கு சொல்லப்பட்டு வருகிறது.. மற்றொரு புறம் திமுக கொங்குவில் கை வைத்துவிட்டதாக தகவல் பறந்தது.. இதுவும் அவருக்கு டென்ஷனை கூட்டி உள்ளது.

 லிஸ்ட்

லிஸ்ட்

எனவே, தேர்தலுக்கு பிந்தைய நிலவரத்தை பல்வேறு தரப்பு மூலம் தினமும் கேட்டு கேட்டு பெற்று வருகிறார்.. மற்றொருபுறம், தேர்தல் பணிகளை யாரெல்லாம் சரிவர செய்யாத நிர்வாகிகள், என்ற லிஸ்ட்டும் கேட்டுள்ளார்.. அதேபோல, எங்கெல்லாம் வெற்றி வாய்ப்பு பறிபோகும் தொகுதிகள், அந்த தொகுதிகளின் பொறுப்பாளர்கள் யார் யார் என்ற லிஸ்ட்டும் கேட்டுள்ளார் போலும்.

 180+

180+

திமுகவுக்கு 180+ என்றுதான் ஆரம்பம் முதலே சொல்லப்பட்டு வருகிறது.. தேர்தல் முடிந்த பிறகு 200+ என்ற பேச்சு எழுந்து வருகிறது.. எனவே, தேர்தலுக்கு முன்பாக நடத்தப்பட்ட கருத்துகணிப்புகள் வரை அதிமுகவுக்கு ஓரளவுக்கு இருந்த நம்பிக்கை இப்போது குறைந்து கொண்டே போகிறது..

 அமைச்சர்களே

அமைச்சர்களே

அதுமட்டுமல்ல, தேர்தல் முடிவுக்குப் பிறகு பல மூத்த அமைச்சர்களே தோல்வியைத் தழுவ வாய்ப்பிருக்கிறது என்று சுட்டிக்காட்டியதையும் நாம் நினைவுகூர வேண்டி உள்ளது. அதனால்தான், சீட் தரலைன்னா, யாரும் இறங்கி வேலை பார்க்க மாட்டீங்களா என்று முக்கிய தொகுதிகளின் பொறுப்பாளர்களை எடப்பாடியார் போனை போட்டு கடிந்து கொண்டு வருகிறார்.. அதற்கேற்றார்போல அமைச்சர்களும் எந்த பேட்டிகளையும் தராமல் ஒதுங்கியே இருக்கிறார்கள்.. இப்போதைக்கு அதிமுக கப்சிப் டிராக்கில் சென்று கொண்டிருக்கிறது" என்றனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+