திருச்சி சிவா எம்.பி. மீது திமுக பேச்சாளர்கள் அதிருப்தி..!
திமுக கொள்கை பரப்புச் செயலாளராக உள்ள திருச்சி சிவா மீது அக்கட்சியின் சொற்பொழிவாளர்கள் அதிருப்தியில் உள்ளார்களாம்.
தமிழகத்தில் பேசி, பேசியே பேச்சாளர்களால் வளர்க்கப்பட்ட கட்சி திமுக. அண்ணா தொடங்கி உதயநிதி ஸ்டாலின் வரை மக்களின் நாடித்துடிப்பை அறிந்து பொதுக்கூட்டங்களில் முழங்குவது அந்தக் கட்சிக்கு கைவந்த கலை. இப்படி பேச்சாளர்களால் வளர்க்கப்பட்ட கட்சியின் சொற்பொழிவாளர்கள் பிரிவில் தற்போது கோஷ்டிப்பூசல் வெடித்துள்ளது.

தலைமை அனுமதி பெறாமல் நிதி வசூல்
நீலகிரி இயற்கை பேரிடருக்காக திமுக சார்பில் நிவாரணப் பொருட்கள் சென்னையில் இருந்து அனுப்பி வைக்கப்பட்டது அனைவரும் அறிந்த செய்தி. இந்நிலையில் தலைமையின் அனுமதி பெறாமல், அதுவும் ஸ்டாலின் கேட்காமலேயே சொற்பொழிவாளர்களும் நிதி தர வேண்டும் என ஒப்பிலாமணி என்ற பேச்சாளர் கட்டாயப்படுத்தியுள்ளார்.
நிதிக்கு எங்க்கே போவோம்?
நிதி வசூல் தொடர்பாக மூத்த திமுக சொற்பொழிவாளர் ஒருவரை நாம் தொடர்பு கொண்ட பேசிய போது, மாவட்டச் செயலாளர்கள் பேச்சாளர்களில் குறிப்பிட்ட சிலரை மட்டுமே கூட்டங்களுக்கு அழைத்து, அவர்களின் சட்டைப்பையை நிறைத்து அனுப்புகின்றனர். அதுவும் மத்திய மாவட்டத்தில் உள்ள ஒரு மாவட்டச்செயலாளர் தனது சொந்தப்புராணத்தை கட்சியினர் மத்தியில் புகழ் பாடுபவர்களுக்கு மட்டுமே அடிக்கடி வாய்ப்பு வழங்குவார். பல பேச்சாளர்கள் ஏழ்மையில் தான் உள்ளனர். அவர்களிடம் நிதி கொடுக்கச் சொன்னால் எங்கிருந்து தருவார்கள் எனக் கேட்கிறார்.
சிவா மீது அதிருப்தி
சொற்பொழிவாளர்கள் பிரச்சனையில் திருச்சி சிவா தலையிடுவதில்லை என்றும், திமுக கொள்கை பரப்புச் செயலாளர் என்ற முறையில் தொடர்பு கொள்ள முயற்சித்தால் கூட ஆளை பிடிக்கமுடியவில்லை எனவும் அக்கட்சியின் பேச்சாளர்கள் மத்தியில் அதிருப்தி குரல் ஒலிக்கிறது.
-
எபோலா வைரஸ்: உகாண்டாவில் இருந்து பெங்களூர் வந்த பெண்.. மத்திய சுகாதாரத்துறை ரிப்போர்ட்! -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
வெறும் 10 நிமிடங்கள்தான்.. உடனே வெளியே வந்த விஜய்! மோடி உடனான சந்திப்பில் இப்படி நடந்ததே இல்லை! -
“காங்கிரஸ், கம்யூனிஸ்ட்களை விமர்சிக்க அவர்களுக்கு துணிச்சல் இல்லை”.. திருமாவளவன் அட்டாக்! -
டோட்டலாக தனிமைப்படுத்தப்பட்ட திமுக! உச்சக்கட்ட ஹேப்பியில் பாஜக.. தவெக விஜய் அரசுக்கு சிக்கலா? -
மோடி, நிர்மலா சீதாராமன் சந்திப்பின்போது.. கூடவே போன ஜோசியர்! சலசலப்பை கிளப்பிய விஜய்! -
97 ரன்களில் அவுட்.. ஒட்டுமொத்த மைதானமும் சோகம்.. உலக சாதனையை தவறவிட்ட வைபவ் சூர்யவன்ஷி! -
முதல்வர் விஜய்யை சந்திக்க நேரம் ஒதுக்காத அமித் ஷா.. என்ன நடந்தது? -
பிரதமர் மோடிக்கு நன்றி சொன்ன முதல்வர் விஜய்.. அதைவிட முக்கியம் 4 மேஜர் கோரிக்கைகள் -
"ஆர்.எஸ்.எஸ் பேரப்பிள்ளையாக மாறிய விசிக".. திருமா மீது பொன்.ராதாகிருஷ்ணன் கடும் தாக்கு! -
நிர்மலா சீதாராமனும் விஜய் கிட்ட அதையே சொல்வாரோ? 118 மேஜிக் நம்பர்.. தவெகவை அசைக்க முடியாத பின்னணி? -
ஒரே சீசனில் 61 சிக்ஸ்.. கெய்ல் சாதனையை 15 வயது சிறுவன் முடிச்சிட்டான்! தெறிக்கவிட்ட வைபவ் சூர்யவன்ஷி












Click it and Unblock the Notifications