லாட்டரி வித்தவங்க.. ப்ளாக் டிக்கெட் வித்தவங்க எல்லாம் அமைச்சர்! வைகோவின் விஸ்வாசம்! பரந்தாமன் சுளீர்
சென்னை: லாட்டரி விற்றவர்கள், சினிமா ப்ளாக் டிக்கெட் விற்றவர்கள் தான் அமைச்சரவையில் இருப்பதால், அமைச்சர் ஆதவ் போன்றவர்கள் SIR நடவடிக்கையை முட்டாள் நடவடிக்கை என்று தான் கூறுவார்கள் எனவும், கம்யூனிஸ்ட் கட்சியில் இருக்கும் மூத்த தலைவர்களே த.வெ.க பணம் கொடுத்தார்கள் என பேசி இருக்கிறார்கள் என திமுக செய்தித் தொடர்பாளர் பரந்தாமன் கூறியுள்ளார்.
சென்னை தேனாம்பேட்டையில் உள்ள அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்களை மதுராந்தகம் மற்றும் தாராபுரம் உள்ளிட்ட இரண்டு சட்டமன்ற தொகுதிகளில் திமுக சார்பாக போட்டியிட்ட வேட்பாளர்களான பரந்தாமன் மற்றும் சுகன்யா ஆகியார் சந்தித்தனர்.
உடன் இரண்டு தொகுதிகளின் மாவட்ட செயலாளர்கள் முன்னாள் அமைச்சர்கள் மற்றும் நிர்வாகிகளும் திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை சந்தித்தனர். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த பரந்தாமன," திணிக்கப்பட்ட தேர்தல் நடந்து முடிந்து இருக்கிறது.

பரந்தாமன்
திமுக அரசியல் ஜனநாயகத்தில் வெற்றி பெற்று இருக்கிறோம். அதிகாரபலம் கொண்டு த.வெ.க இந்த இடைத்தேர்தலை சந்தித்து இருக்கிறது. மதுராந்தகம் தொகுதி வாக்காளர், பரப்புரை செய்த கூட்டணி கட்சியினர் அனைவருக்கும் இந்த நேரத்தில் நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். அதை போல கட்சியின் முன்னாள் அமைச்சர்கள், நிர்வாகிகள் என அனைவருக்கும் நன்றிகள். திமுக வின் வாக்கு வங்கி வலிமையாக இருக்கிறது என உறுதி செய்துள்ளோம்.
ஆதவ் அர்ஜூனா
கூட்டணி வைத்து நாங்கள் வெற்றி பெற்றதாக அமைச்சர் ஆதவ் அர்ஜூனா பேசினார். இந்த இடைத்தேர்தலில் எங்கள் வாக்கு வங்கியை தெரிந்து கொள்ளலாம். தலைமைச்செயலகத்தில் முதல்வர் அறைக்கு சென்று அமைச்சர்கள் செய்கை செய்து, தேர்தல் வெற்றியை கொண்டாடுகின்றனர். வெற்றி தோல்வியை திமுக பார்ப்பதில்லை, இந்த தேர்தலில் எங்களுக்கு வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிக்க இருக்கிறோம்.
கம்யூனிஸ்ட்
இந்த இடைத்தேர்தலில் தவெக பணம் கொடுக்காமல் வெற்றி பெற்று உள்ளது என மதிமுக பொதுச்செயலாளர் வைகோ பேசியுள்ளார். கம்யூனிஸ்ட் கட்சியில் இருக்கும் மூத்த தலைவர்களே த.வெ.க பணம் கொடுத்தார்கள் என பேசி இருக்கிறார்கள். இதை வைகோ பார்க்க வேண்டும். போன இடத்திற்கு வைகோ விசுவாசமாக இருக்கிறார். இன்னும் 15 இடத்தில் தேர்தல் வரும் என ஆதவ் அர்ஜூனா எப்படி பேசுகிறார்? அதிமுகவை உடைக்க த.வெ.க செயல்படுகிறது.
SIR நடவடிக்கை
அவர் வாய் கொழுப்பில் பேசுகிறார். SIR நடவடிக்கைகள் முட்டாள் என்று எப்படி பேச முடியும். மறைமுக கூட்டணி சில கட்சிகளை த.வெ.க வைத்துள்ளது. லாட்டரி விற்றவர்கள், சினிமா டிக்கெட் விற்றவர்கள் தான் அமைச்சரவையில் இருப்பதால் ஆதவ் போன்றவர்கள் முட்டாள் என்று தான் பேசுவார்கள். இது முட்டாள் அமைச்சரவை தான்.
த.வெ.க
பா.ஜ.க, திமுகவை டார்க்கெட் செய்யும் வகையில் த.வெ.க வை மறைமுகமாக இயக்கி வருகின்றனர். திராவிட இயக்கம் சித்தாந்தம் சிதைக்க செயல்படுத்தி வருகின்றனர். த.வெ.க வெற்றி பெற்ற பின்னர் தான் விசிக அங்கு சென்றது. இதில் திமுக வாக்கு பலம் என்ன என்பது தெரிந்து இருக்கிறது" என தெரிவித்தார்.




Click it and Unblock the Notifications
