காலம் வேகமாக சுழல்வது பார்த்தீங்களா? திமுக, அதிமுக இரண்டுமே.. இப்படி நடக்கும்னு நினைச்சிருக்காது
சென்னை: 2026 தமிழக சட்டமன்றத் தேர்தல் நெருங்கும் வேளையில், மாநிலத்தின் அரசியல் களம் முன்னெப்போதும் இல்லாத ஒரு விசித்திரமான சூழலைச் சந்தித்து வருகிறது. கடந்த ஐந்து ஆண்டுகளாக சிதறிக்கிடந்த தேசிய ஜனநாயகக் கூட்டணி (NDA) தற்போது ஒரு வலுவான சக்தியாக ஒருங்கிணைந்து நிற்கிறது. அதே சமயம், கடந்த ஐந்து ஆண்டுகளாக இரும்புக்கோட்டையாகத் திகழ்ந்த திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி (SPA), தொகுதிப் பங்கீடு மற்றும் கொள்கை முரண்பாடுகளால் தள்ளாடி வருகிறது.

ஒருங்கிணைந்த அதிமுக - பாஜக கூட்டணி
கடந்த 2021 தேர்தலுக்குப் பிறகு, அதிமுகவும் பாஜகவும் நீண்ட காலம் பிரிந்தே இருந்தன. குறிப்பாக, எடப்பாடி பழனிசாமி தலைமையில் அதிமுக பாஜக இல்லாமல் தனி கூட்டணி அமைத்து போட்டியிடும் முடிவை எடுத்திருந்தது. பாமகவின் அன்புமணி ராமதாஸ் மற்றும் டி.டி.வி. தினகரனின் அமமுக ஆகிய கட்சிகளும் இந்தக் கூட்டணியில் இடம்பெறாமல் தள்ளி நின்றன.
ஆனால், தேர்தல் நெருங்கும் வேளையில் காட்சிகள் மாறியுள்ளன.
அதிமுக - பாஜக மீண்டும் கைகோர்ப்பு: பல கட்டப் பேச்சுவார்த்தைகளுக்குப் பிறகு, எடப்பாடி பழனிசாமியை முதல்வர் வேட்பாளராக ஏற்றுக்கொண்டு பாஜக மீண்டும் கூட்டணியில் இணைந்துள்ளது.
பாமக மற்றும் அமமுக வருகை: இந்த ஆண்டு தொடக்கத்தில் அன்புமணி ராமதாஸ் தலைமையிலான பாமகவும், தினகரனின் அமமுகவும் கூட்டணியில் அதிகாரப்பூர்வமாக இணைந்தன.
வாக்குகள் சிதறாமல் தடுப்பு: ஆளும் கட்சிக்கு எதிரான வாக்குகளைப் பிரிக்காமல், "ஒற்றை அணியாக" களம் காண்பதே இவர்களின் முக்கிய வியூகமாக உள்ளது.
விரிசல் விழும் திமுக கூட்டணி
மற்றொரு பக்கம், 2019 முதல் 2024 வரை அனைத்துத் தேர்தல்களிலும் பெரும் வெற்றிகளைக் குவித்த திமுக கூட்டணிக்குள் தற்போது புயல் வீசத் தொடங்கியுள்ளது.
காங்கிரஸின் பிடிவாதம்: கடந்த முறை 25 இடங்களில் போட்டியிட்ட காங்கிரஸ், இந்த முறை 50 இடங்கள் வரை கேட்கிறது. மேலும், "ஆட்சியில் பங்கு" (அமைச்சரவையில் இடம்) வேண்டும் என்ற கோரிக்கையை டெல்லி மேலிடம் தீவிரமாக வலியுறுத்துகிறது. இதனை திமுக தலைமை ஏற்க மறுப்பதால் இரு கட்சிகளுக்கும் இடையே கடும் உரசல் ஏற்பட்டுள்ளது.
விசிக - பாமக விவகாரம்: பாமக ராமதாஸ் தரப்பு திமுகவுடன் பேச்சுவார்த்தை நடத்துவதாக கூறப்படுவதும் விசிக தலைவர் திருமாவளவனை அதிருப்தி அடையச் செய்துள்ளது. பாமகவின் கொள்கைகளை எதிர்க்கும் விசிக, அந்தத் தரப்பைக் கையாள்வதில் திமுக மற்றும் காங்கிரஸ் காட்டும் மென்மையான போக்கை விமர்சித்து வருகிறது.
விசிக பாலாஜி கண்டனம் மோதல்:
சமீபத்தில் தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு பேட்டி அளித்த செல்வப்பெருந்தகை பாமக - திமுக கூட்டணி பற்றி கூறி இருந்தார், பாமக நிறுவனர் ராமதாஸ், திமுக கூட்டணிக்குள் வருவதை திமுக தலைவர் தான் முடிவு செய்யவேண்டும். அவர்தான் கூட்டணிக்கு தலைவர். ராமதாஸும், விசிக தலைவர் திருமாவளவனும் நெருக்கமாக இருந்தவர்கள் தான். இருவருக்கும் இடையே இடைவெளி எல்லாம் இல்லை. அவருக்கு ஒன்று என்றால் இவர் பேசுவார். இவருக்கு ஒன்று என்றால் அவர் பேசுவார்.
விசிக கொடியை ராமதாஸ் ஏற்றியிருக்கிறார். வன்னியர் சங்க கொடியை திருமாவளவன் ஏற்றியிருக்கிறார். இவ்வாறு இணக்கமாக இருந்தவர்கள் தான் இருவரும். எனவே தேவை என்றால் ஒருவருக்கொருவர் சந்தித்து பேசி சரி செய்து கொள்வார்கள். அதை அவர்கள் தான் முடிவு செய்யவேண்டும் எனத் செல்வப்பெருந்தகை தெரிவித்திருந்தார்.
இதன் காரணமாக தி.மு.க தலைமையிலான கூட்டணியில் பாமக இணையக்கூடும் என்ற யூகங்கள் எழுந்துள்ளது. இப்படி இருக்க, அந்த வாய்ப்பை முளையிலேயே கிள்ளியெறிய விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் (VCK) திருப்போரூர் சட்டமன்ற உறுப்பினர் எஸ்.எஸ். பாலாஜி தீவிரமாக களமிறங்கியுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
எஸ்.எஸ். பாலாஜியின் இந்த திட்டங்களுக்குப் பின்னால் ஒரு முக்கியமான அரசியல் அச்சம் உள்ளது. கடந்த 2021 சட்டமன்றத் தேர்தலில் திருப்போரூர் தொகுதியில் போட்டியிட்ட பாலாஜி, தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட பா.ம.க வேட்பாளரை வெறும் 1,900 வாக்குகள் வித்தியாசத்தில் தான் தோற்கடித்தார்.
இந்த மிகச்சிறிய வாக்கு வித்தியாசம் தான் பாலாஜியின் தற்போதைய கவலைக்குக் காரணம். ஒருவேளை டாக்டர் ராமதாஸ் தலைமையிலான பா.ம.க, திமுக கூட்டணிக்குள் நுழைந்தால், தொகுதிப் பங்கீட்டின் போது திருப்போரூர் தொகுதி பா.ம.க-விற்குச் செல்ல வாய்ப்புள்ளது என்பதால் அவர் செல்வப்பெருந்தகை பேச்சை கடுமையாக விமர்சனம் செய்தும் வருகிறார். இதனால் விசிக - காங்கிரஸ் இடையிலும் மோதல் ஏற்பட்டு உள்ளது.
இப்படி தொகுதிப் பங்கீட்டில் ஒருமித்த கருத்து ஏற்படாததால், விசிக மற்றும் காங்கிரஸ் கட்சிகள் தனித்தனியாக ஆலோசனை நடத்தி வருவது திமுக தலைமைக்கு நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது.
2 கட்சிகளின் - கூட்டணி நிலைப்பாடு
2021 சட்டமன்றத் தேர்தலில் திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி மிகவும் கச்சிதமான தொகுதிப் பங்கீட்டை மேற்கொண்டிருந்தது. அப்போது காங்கிரஸ் கட்சிக்கு 25 இடங்கள் ஒதுக்கப்பட்டன, விடுதலைச் சிறுத்தைகள் கட்சி (விசிக) 6 இடங்களிலும், இடதுசாரி கட்சிகள் தலா 6 இடங்களிலும் போட்டியிட்டன. ஆனால் 2026 தேர்தலைப் பொறுத்தவரை, காங்கிரஸ் கட்சி தனது பலத்தை நிரூபிக்க சுமார் 50 தொகுதிகளைக் கோரி திமுகவிற்கு அழுத்தம் கொடுத்து வருகிறது; அதே சமயம் திமுக முந்தைய 25 இடங்களுக்கு மேல் தர வாய்ப்பில்லை என்று பிடிவாதமாக உள்ளது.
மறுபுறம், 2021-ல் அதிமுக கூட்டணியில் பாமக 23 இடங்களிலும், பாஜக 20 இடங்களிலும் போட்டியிட்டன. ஆனால் இடையில் கூட்டணி உடைந்திருந்த நிலையில், தற்போது 2026-க்காக மீண்டும் இணைந்துள்ள இந்த அணியில், அதிமுக சுமார் 170 இடங்களில் நேரடியாகப் போட்டியிடத் திட்டமிட்டுள்ளது. பாஜக மற்றும் பாமக ஆகிய இரு கட்சிகளுக்கும் தலா 20 முதல் 30 இடங்கள் வரை ஒதுக்கப்படலாம் எனப் பேச்சுவார்த்தைகள் நகர்கின்றன. கடந்த முறை தனித்துப் போட்டியிட்ட அமமுக போன்ற கட்சிகளும் இப்போது இந்த மெகா கூட்டணியில் இணைந்திருப்பதால், கடந்த முறையை விட இந்த முறை தொகுதிப் பங்கீடு மிகவும் சிக்கலானதாகவும் அதே சமயம் விறுவிறுப்பானதாகவும் மாறியுள்ளது.
-
200+ உறுதி.. சிதறிய எதிர்க்கட்சிகள்... ஜாலியாக 'ஸ்வீப்' செய்யும் திமுக? பாலி மார்க்கெட் பரபர கணிப்பு -
இந்த நாளுக்காகத் தான் வெயிட்டிங்! திருச்சியை திணற வைக்கும் திமுக! ஸ்டாலின் கையில் ‘மெகா’ அஸ்திரம்! -
திருச்சி திமுக மாநாட்டில் கமகமக்கும் பிரியாணி.. 10 லட்சம் பேருக்கு சுடச்சுட ரெடி! -
PTRக்கு எதிராக புரட்சிப் படை? பத்திகிட்டு எரியுது மதுரை! களத்துக்கு வந்த மாப்பிள்ளை! பரபர பாலிடிக்ஸ் -
பெரம்பூர் தொகுதி.. விஜய்யை எதிர்க்க தயாராகும் ஆளூர் ஷா நவாஸ்? சென்னையில் களமிறங்கும் விசிக! -
திடீரென மயங்கி விழுந்த கிரிஷ் சோடங்கர்.. கைத்தாங்கலாக தூக்கி வந்த காங்கிரஸ் நிர்வாகிகள்! -
காங்கிரஸ் போட்டியிடும் 28 தொகுதிகள் என்னென்ன? டெல்லி தலைகளுடன் சென்னையில் நடந்த முக்கிய ஆலோசனை! -
க்ளோஸ்.. சுள்ளென சுட்டெரிக்கும் உதயசூரியன்.. சூடான தேர்தல் களம்! அடுத்த கட்டத்துக்கு நகர்ந்த திமுக! -
கண்ணைக் காட்டிய உதயநிதி..அறிவாலயத்தில் குவிந்த வாரிசுகள்! 2026 தேர்தல் காத்திருக்கும் மெகா ட்விஸ்ட்! -
மீண்டும் சேப்பாக்கம் தொகுதியில் போட்டியிடுவீர்களா? உதயநிதி ஸ்டாலின் கொடுத்த சூசக பதில்! -
இதே திருச்சியில் பெண்களுக்கு ரூ.1000 அறிவிப்பை வெளியிட்டேன்.. திருச்சி மாநாட்டுக்கு ஸ்டாலின் அழைப்பு -
அர்ஜுன் டெண்டுல்கர் திருமணத்திற்கு கூட வரலையே.. சுப்மன் கில் - சாரா டெண்டுல்கர் பிரேக் அப்?











Click it and Unblock the Notifications