காங்கிரஸ் செய்த கழுத்தறுப்புகள்.. ஆசிர்வாதம் செய்த ராகுல் காந்தி! விடாத திமுக.. குதிக்கும் தலைகள்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: திமுக - காங்கிரஸ் இடையேயான அரசியல் மோதல் நாளுக்கு நாள் தீவிரமடைந்து வருகிறது. தேர்தலுக்குப் பிறகு கூட்டணி முறிவால் ஏற்பட்ட விரிசல் இன்னும் ஆறாத நிலையில், தற்போது ராகுல் காந்தியை நேரடியாக விமர்சித்து திமுகவின் அதிகாரப்பூர்வ நாளிதழான முரசொலியில் வெளியான கட்டுரை புதிய சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.இதனையடுத்து காங்கிரஸ் கட்சியினர் திமுகவை மிகக் கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.

தமிழக அரசியலில் ஒருகாலத்தில் பிரிக்க முடியாத கூட்டணியாக கருதப்பட்ட திமுக - காங்கிரஸ் உறவு, 2026 சட்டமன்றத் தேர்தலுக்குப் பிறகு முற்றிலும் வேறுவேறு திசையில் நகர்ந்து வருகிறது. தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு இரு கட்சிகளும் பிரிந்த நிலையில், ஒருவரை ஒருவர் விமர்சனம் செய்வதும் அதிகரித்துள்ளது.

DMK Congress Rahul Gandhi

இந்த நிலையில், திமுகவின் அதிகாரப்பூர்வ நாளிதழான முரசொலியில் வெளியான சமீபத்திய கட்டுரை காங்கிரஸ் வட்டாரங்களில் அதிர்வை ஏற்படுத்தியுள்ளது. அந்த கட்டுரையில் ராகுல் காந்தி மற்றும் காங்கிரஸ் கட்சியின் செயல்பாடுகள் குறித்து கடுமையான விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டுள்ளன.

குறிப்பாக, "திமுகவுடன் கூட்டணியில் இருந்தபடியே காங்கிரஸ் செய்த அரசியல் கழுத்தறுப்புகள் அனைத்தும் ராகுல் காந்தியின் ஆசீர்வாதத்துடனேயே நடந்தவை" என்று குறிப்பிடப்பட்டிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. முரசொலியில் வெளியாகியுள்ள கட்டுரையில், அண்மையில் நடைபெற்ற இந்தியா கூட்டணி ஆலோசனைக் கூட்டமும் குறிப்பிடப்பட்டுள்ளது. அந்த கூட்டத்தில் பல்வேறு கட்சிகள் காங்கிரஸ் கட்சியின் செயல்பாடுகள் குறித்து அதிருப்தி தெரிவித்ததாக கூறப்பட்டுள்ளது.

மேலும், மாநில வாரியாக இந்தியா கூட்டணியின் ஒற்றுமை சீர்குலைந்ததற்கு முக்கிய காரணம் ராகுல் காந்தியின் அரசியல் அணுகுமுறைகள்தான் என்றும் கட்டுரையில் குற்றம்சாட்டப்பட்டுள்ளது. திமுக வட்டாரங்களில் பேசப்படும் தகவல்களின்படி, கூட்டணியில் இருந்தபோதும் காங்கிரஸ் சில தொகுதிகளில் திமுகவுக்கு எதிரான நடவடிக்கைகளை மேற்கொண்டதாக நீண்ட காலமாக குற்றச்சாட்டுகள் இருந்து வந்தன.

தற்போது அவற்றை வெளிப்படையாக முன்வைத்துள்ளது இந்த கட்டுரை. 2026 தேர்தலுக்குப் பிறகு தமிழக அரசியல் களம் முற்றிலும் மாறியது. தமிழக வெற்றிக் கழகம் ஆட்சியை பிடித்த நிலையில், திமுக எதிர்க்கட்சியாக மாறியது. அதேசமயம், தேர்தலுக்குப் பிறகு காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள் உள்ளிட்ட கட்சிகள் திமுகவை விட்டு விலகி தவெக கூட்டணியிலும், பின்னர் அமைச்சரவையிலும் இணைந்தன.

முன்னதாகவும் முரசொலியில் ராகுல் காந்தியை விமர்சித்து கட்டுரைகள் வெளியாகியிருந்தன. அதற்கு காங்கிரஸ் தரப்பில் கண்டனங்கள் தெரிவிக்கப்பட்டிருந்தன. தற்போது மீண்டும் அதே விவகாரம் எழுந்திருப்பது இரு கட்சிகளுக்கும் இடையேயான உறவு மேலும் மோசமடைந்திருப்பதை காட்டுவதாக அரசியல் பார்வையாளர்கள் கூறுகின்றனர். தமிழக காங்கிரஸ் துணைத் தலைவர் விஜயன் வெளியிட்டுள்ள அறிக்கையில், ராகுல் காந்தியை தொடர்ந்து கொச்சைப்படுத்தும் வகையில் எழுதுவது திமுகவின் ஆணவத்தையும் அகங்காரத்தையும் வெளிப்படுத்துவதாக குற்றம்சாட்டியுள்ளார்.

மேலும், இரண்டு சட்டமன்ற உறுப்பினர்கள் மட்டுமே இருந்த ஒரு கட்சிக்கு கூட அமைச்சர் பதவி வழங்கிய முதல்வர் விஜயின் அரசியல் பெருந்தன்மையை எடுத்துக்காட்டியுள்ள அவர், அதனால்தான் முன்னாள் திமுக கூட்டணி கட்சிகள் பலவும் தற்போது தமிழக வெற்றிக் கழகத்துடன் இணைந்துள்ளன என்று தெரிவித்துள்ளார்.
இந்த பதில் அறிக்கை மூலம் திமுக மீது காங்கிரஸ் நேரடியாக தாக்குதல் நடத்தி இருப்பது குறிப்பிடத்தக்கது.

இந்த வெறும் அறிக்கை அரசியலாக மட்டும் பார்க்க முடியாது. எதிர்கால கூட்டணி, நாடாளுமன்ற - உள்ளாட்சித் தேர்தல் ஆகியவற்றின் பின்னணியிலும் இதை பார்க்க வேண்டிய அவசியம் இருப்பதாக அவர்கள் கூறுகின்றனர்.
குறிப்பாக, தேர்தலுக்குப் பிறகு எதிர்க்கட்சியாக திமுக தனது இடத்தை வலுப்படுத்த முயற்சி செய்து வரும் நிலையில், காங்கிரஸுடன் ஏற்பட்டுள்ள இந்த மோதல் மேலும் தீவிரமடைய வாய்ப்பு இருப்பதாகவும் அரசியல் வட்டாரங்களில் பேசப்படுகிறது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+