SIR: வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தம்! முதல்வர் ஸ்டாலின் தலைமையில் மாவட்ட செயலாளர்கள் கூட்டம்!
சென்னை: 2026 சட்டமன்ற தேர்தலுக்கு முன்னதாக தமிழகத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்த பணி மேற்கொள்ளப்படும் என தேர்தல் ஆணையம் அறிவித்த நிலையில், தற்போது அந்த பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் இது தொடர்பாக திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் இன்று திமுக தலைமையகமான அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்றது. இதில் சிறப்பு தீவிர திருத்த விவகாரத்தில் மாவட்ட செயலாளர்கள் எப்படி செயல்பட வேண்டும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளார்.
தேர்தல் ஆணையம் ஒவ்வொரு ஆண்டும் வாக்காளர் பட்டியலை புதுப்பித்து வெளியிடுகிறது. ஆனால் பல்வேறு நேரங்களில் அந்தப் பட்டியலில் பிழைகள் இடம்பெறுவது வழக்கம். ஒரே நபரின் பெயர் இரண்டு இடங்களில் இருப்பது, இறந்தவர்கள் பெயர் நீக்கப்படாமல் இருப்பது, புதிய வாக்காளர்கள் சேராமல் விடுவது போன்ற சிக்கல்கள் அடிக்கடி எழுகின்றன.

இந்த பிரச்சனைகளை தீர்க்கும் நோக்கில், இந்திய தேர்தல் ஆணையம் SIR (Special Intensive Revision) எனப்படும் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் என்ற புதிய நடைமுறையை அறிமுகப்படுத்தியுள்ளது. இதன் மூலம் அதிகாரிகள் வீடு வீடாகச் சென்று வாக்காளர்களின் விவரங்களைச் சரிபார்த்து, பிழைகள் இருந்தால் திருத்தி, புதுப்பிக்கப்பட்ட வாக்காளர் பட்டியலை உருவாக்குகிறார்கள்.
வாக்காளர் பட்டியல் தீவிர திருத்தம்
இந்தப் பணியில் ஒவ்வொரு வாக்குச்சாவடிக்கும் ஒரு பூத் லெவல் அதிகாரி (BLO) நியமிக்கப்படுகிறார். அவர்கள் நேரடியாக வாக்காளர்களைச் சந்தித்து குடியுரிமைச் சான்றிதழ்களைப் பரிசோதிப்பார்கள். தேர்தல் ஆணையம் வெளியிட்ட வழிகாட்டுதலின்படி, பிறப்புச் சான்றிதழ், கல்விச்சான்றிதழ், பாஸ்போர்ட் போன்றவை மட்டும் குடியுரிமை ஆதாரங்களாக ஏற்றுக்கொள்ளப்படும். ஆனால் ஆதார், பான், ரேஷன் கார்டு போன்றவை இதற்கான சான்றாக ஏற்றுக்கொள்ளப்படாது எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
தேர்தல் ஆணையம்
இதற்கெதிராக தமிழகத்தில் தி.மு.க. கட்சி ஆரம்பத்திலிருந்தே எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. சிறப்பு திருத்தத்தின் பெயரில் உண்மையான வாக்காளர்களின் பெயர்கள் நீக்கப்பட வாய்ப்பு இருப்பதாகக் திமுக குற்றம்சாட்டியுள்ளது. இதனையடுத்து திமுக தரப்பில் உச்சநீதிமன்றத்தில் வழக்கும் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. எதிர்ப்பு இருந்தபோதும் தேர்தல் ஆணையம் மாநிலம் முழுவதும் சிறப்பு திருத்தப் பணியை தொடங்கியுள்ளது. இதனால் உண்மையான வாக்காளர்கள் பட்டியலில் இருந்து தவறுதலாக நீக்கப்படக் கூடாது என்பதில் திமுக உறுதியாக உள்ளது.
திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்
இதற்காக முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் தமது கட்சி நிர்வாகிகளுக்கும் தொண்டர்களுக்கும் சிறப்பு அறிவுறுத்தல் வழங்கியுள்ளார். அதன்படி, கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் தங்கள் பகுதிகளில் வாக்காளர் பட்டியல் திருத்தப்பணியில் பங்கேற்று, வாக்காளர்களுக்கு தேவையான படிவங்கள் நேரம் தவறாமல் சென்றடையவும், சரியாக நிரப்பப்பட்டு பிஎல்ஓவிடம் (BLO) ஒப்படைக்கப்படவும் உறுதி செய்ய வேண்டும் என கூறப்பட்டுள்ளது.
முக ஸ்டாலின்
இந்த நிலையில், வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தம் குறித்து தி.மு.க. கட்சியின் முக்கிய ஆலோசனை கூட்டம் இன்று (ஞாயிற்றுக்கிழமை) நடைபெறும் திமுக பொதுச் செயலாளர் துரைமுருகன் அறிவித்தார். அதன்படி முதல்வர் மு.க. ஸ்டாலின் தலைமையில் இந்த கூட்டம் இன்று (நவம்பர் 9) காலை 10 மணிக்கு காணொலி காட்சி மூலம் நடைபெற்றம். இதில் மாவட்டச் செயலாளர்கள், எம்.பி., எம்.எல்.ஏ., தொகுதி பார்வையாளர்கள் என அனைவரும் கலந்து கொண்டனர். இந்தக் கூட்டத்தில் வாக்காளர் பட்டியல் திருத்தம் தொடர்பாக கட்சி மேற்கொள்ள வேண்டிய அடுத்த கட்ட நடவடிக்கைகள், மாவட்ட செயலாளர்கள் எப்படி செயல்பட வேண்டும் என்பது குறித்து விரிவாக ஆலோசனைகளை முதல்வர் ஸ்டாலின் வழங்கியுள்ளார்.
-
தேமுதிகவிற்கு 10 தொகுதிகள் ஏன்? பின்னணியில் 2 ஜாதிகளின் ஓட்டுகளுக்கு குறி.. ஸ்டாலின் போடும் கணக்கு -
காங்கிரஸ் மீது கடும் அப்செட்டில் ஸ்டாலின்.. வேட்பாளர்களை அறிவித்து பிரச்சாரத்துக்கு கிளம்ப திட்டம்! -
மகளிர் உரிமை தொகை வராது.. அடுத்த 1 வாரத்தில் தமிழக அரசு தரும் ரூ.2000.. யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
உடையும் கூட்டணி? திமுக முதுகில் குத்திய காங்கிரஸ்! நேருக்கு நேர் தோழமைகளுடன் மோதும் கதர் தலைகள்? -
கமல்ஹாசனின் மநீம தேர்தலில் போட்டியிட வேண்டும்.. ஸ்டாலினுக்கு வேண்டுகோள் வைத்த திருமாவளவன்! -
சிந்தாமல் சிதறாமல் அள்ள வேண்டும்.. ஸ்மார்ட்டாக காய் நகர்த்திய ஸ்டாலின்.. என்டிஏ கூட்டணிக்கு சேதாரம் -
நம்பர் 1 முதல்வர் யார்? டாப் 5 லிஸ்ட்டில் யார் யார்? 1952 ராஜாஜி முதல் 2021 ஸ்டாலின் வரை! -
அதிமுக, பாஜக நேரடி போட்டியில்லை.. பெரம்பூரில் தவெக விஜய்க்கு சாதகம்? களமிறக்கிவிடப்பட்ட பாமக! -
ஆக்டிவ் மோடில் ஸ்டாலின்.. கையில் எடுத்த பிரச்சார ஆயுதம்.. 2021 தேர்தலில் திமுக போட்ட பக்கா ஸ்கெட்ச் -
மகளிர் உரிமைத்தொகை ரூ.3,000.. கல்வி கடன் தள்ளுபடி.. ராமதாஸ் வெளியிட்ட தேர்தல் வாக்குறுதிகள்! -
2026 தேர்தல் யார் ஜெயிப்பார்கள்? ‘நீயா நானா’வில் ஜோதிடர்கள் உடைத்த ரகசியம்! பெண்கள் ஓட்டு, மறு எலக்சன் இருக்காமே! -
DMK Vs ADMK: தமிழக தேர்தல்களில் அதிக தொகுதிகளை வென்ற கட்சி எது தெரியுமா? சுவாரஸ்யம்!












Click it and Unblock the Notifications