Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

அடேங்கப்பா வித்தியாசமா இருக்கே.. திமுகவின் புதிய பிரசார ஆயுதமாக திராவிட மாடல் நாட்காட்டி!

Subscribe to Oneindia Tamil

சென்னை: திமுகவின் பிரசார ஆயுதமாக திராவிட மாடல் நாட்காட்டி உருவாகி வருகிறது. திராவிட இயக்க வரலாற்றின் புதிய வியூகமான திராவிட மாடல் நாட்காட்டியை பொதுமக்களுக்கும் தொண்டர்களுக்கும் வழங்குவதற்காக திமுகவினர் ஆர்வம் காட்டி வருகின்றனர்.

நூற்றாண்டு கால திராவிடர் இயக்கம், ஒவ்வொரு கால கட்டத்திலும் தமது கொள்கைகளை மக்களிடத்தில் கொண்டு சேர்ப்பதற்கு பல்வேறு யுக்திகளை கையாண்டு வந்துள்ளது. பத்திரிகை, இலக்கியம், சினிமா என அத்தனை துறைகளையும் தம் வசப்படுத்திக் கொண்டு அடித்தட்டு மக்களுக்கான இயக்கமாக திராவிடர் இயக்கம் உருவெடுத்தது.

திராவிடர் இயக்கம் அடிப்படையில் அறிவியக்கமாக இருந்ததால் மக்களின் சிந்தனைகளை கூர்மைப்படுத்துவதில் முனைப்பு காட்டியது. தாங்கள் கையில் எடுக்கும் எந்த துறையிலும் அதன் உச்சத்தைத் தொடுவது என்பதுதான் திராவிடர் இயக்கத்தவர்களின் இலக்காக இருந்தது. தமிழ்நாட்டின் வரலாற்றுப் பக்கங்கள் இதற்கு இன்றளவும் சாட்சியமாக நிற்கின்றன. இன்றும் இந்த திராவிடர் இயக்க பாரம்பரியம் தொடருகிறது.

 திமுகவின் திராவிடர் இயக்க பணிகள்

திமுகவின் திராவிடர் இயக்க பணிகள்


தேர்தல் அரசியலுக்கே போனாலும் ஆட்சி அதிகாரத்தில் இருந்தாலும் திமுகவானது திராவிடர் இயக்க வரலாற்று கண்காட்சிகள், புத்தக வெளியீடுகள், மாநாட்டு மலர்கள், ஆண்டு விழா மலர்கள், கலைஞர் கருவூலம், பேராசிரியர் நூலகம் என இன்னொரு பக்கம் இயங்கிக் கொண்டே இருக்கிறது. இந்த வரிசையில் இப்போது இடம்பெற்றுள்ளது திராவிட மாடல் நாட்காட்டி.

திராவிட மாடல் நாட்காட்டி

திராவிட மாடல் நாட்காட்டி

திராவிட மாடல் நாட்காட்டியை திமுக கலை இலக்கிய பகுத்தறிவு பேரவை செயலாளர் பொள்ளாச்சி மா.உமாபதி, திராவிட இயக்க தமிழர் பேரவையின் காசு நாகராசன் இருவரும் உருவாக்கி உள்ளனர். இது தொடர்பாக பொள்ளாச்சி மா.உமாபதியிடம் நாம் பேசிய போது, ஆண்டுதோறும் திமுக தோழர்களுக்கும் பொதுமக்களுக்கும் பொதுவான நாள்காட்டிகளை அச்சிட்டு வழங்கி வருகிறோம். திமுக பெயர், தலைவர்களின் படங்களோடு நாள்காட்டிகளை வழங்கும் நமது பெயரும் ஓராண்டு காலத்திற்கு ஒவ்வொருவர் இல்லங்களிலும் இருக்கும். இதன்மூலம் திமுகவுக்கும் பொது மக்களுக்குமான நெருக்கம் அதிகமாகும் என்பதே நாள்காட்டியின் பயன்.

 திராவிட மாடல் அரசு சாதனைகள்

திராவிட மாடல் அரசு சாதனைகள்

இந்த ஆண்டு இதையே முழுக்க முழுக்க திராவிடமாடல் நாள்காட்டியாக அச்சிட்டு வழங்கிட ஏற்பாடுகள் செய்து வருகிறோம். இந்த புதிய நாள்காட்டியானது திராவிட இயக்க வரலாற்றையும் அதன் கொள்கைப் பயணத்தையும் கழக அரசின் சாதனைகளையும் எடுத்துக்கூறுவதோடு, திராவிடமாடல் முதல்வர் மு.க.ஸ்டாலினின் பொதுவாழ்வுப் பணிகளையும் ஆண்டு வாரியாகப் பட்டியல்படுத்தித் தருகிறது. திமுக தோழர்களின் கரங்களிலும் பொதுமக்கள் இல்லங்களிலும் இது ஒரு திராவிட இயக்க ஆவணமாக விளங்கும். திராவிட மாடல் அரசின் சாதனைகளை இளைஞர்களுக்கும் பொது மக்களுக்கும் நாள்தோறும் நினைவூட்டும் வகையில் திமுகவின் பிரச்சாரமாக இந் நாள்காட்டி 365 நாட்களும் வீடுகளுக்குள் பேசிக்கொண்டிருக்கும்.
திராவிட இயக்கத்தின் மீதும் திமுக மீதும் நமது தலைவர்கள் மீதும் நாள்தோறும் இன எதிரிகளால் சுமத்தப்படும் அவதூறுகளுக்கு மறுப்பாகவும் நமது உண்மை வரலாற்றின் தொகுப்பாகவும் திராவிடமாடல் நாள்காட்டி வெளிவருகிறது. இதனை அனைவரும் வாங்கி ஒவ்வொருவரும் நாடெங்கும் கொண்டு சேர்க்க வேண்டும். திராவிடமாடல் அரசின் தேவையை அனைவருக்கும் உணரச் செய்வோம் என்ற நோக்கத்தில் பெரும் உழைப்பில் உருவாகிவரும்
இந்த நாள்காட்டியை அனைவரும் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். நாள்காட்டிகளுக்கு செய்கிற செலவு திமுகவின் பிரச்சாரச் செலவு என்பதை கவனத்தில் கொண்டு ஓயாது உழைக்கும் முதல்வர் ஸ்டாலினின் இன விடியல் பணிகளுக்குத் அனைவரும் துணை நிற்க வேண்டும் என்பதாலேயே இந்தப் பணி மேற்கொள்ளப்படுகிறது என்றார்.

என்ன இருக்கிறது திராவிட மாடல் நாட்காட்டியில்?

என்ன இருக்கிறது திராவிட மாடல் நாட்காட்டியில்?

இந்த நாட்காட்டியில் ஜனவரி 1-ல் இடம்பெற்றுள்ள தகவல்கள்: ஆங்கிலப் புத்தாண்டு நாள், தமிழ்நாட்டின் முதல் சட்டமன்றக் கூட்டம் நடைபெற்றது (1893); வான்புகழ் வள்ளுவருக்கு குமரிமுனையில் 133 அடி உயரச் சிலை திறந்தார் கலைஞர் (2000); இந்தியாவிலேயே முதன் முதலாக மனிதனை மனிதன் இழுத்துச் செல்லும் கைரிக்சா முறையை ஒழித்து இலவச சைக்கிள் ரிக்சா வழங்கியவர் முத்தமிழறிஞர் கலைஞர் என்கிற தகவல் இடம்பெற்றுள்ளது. இதேபோல ஒவ்வொரு நாளுக்குமான செய்திகள் திராவிட மாடல் நாட்காட்டியில் இடம் பெற்றுள்ளன.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+