People's Pulse survey: தமிழகத்தில் திமுக ஆட்சியே தொடரும்! முதல் தேர்தலிலேயே அடித்து தூக்கும் விஜய்?
சென்னை: தமிழகத்தில் திமுக ஆட்சியே தொடரும் என்றும் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் 18 முதல் 24 தொகுதிகளில் வெல்லும் என People's Pulse கணித்துள்ளது.
தமிழகத்தில் சட்டசபை தேர்தல் கடந்த 23 ஆம் தேதி நடைபெற்றது. இந்த தேர்தலில் தமிழகத்தில் 85 சதவீதம் வாக்குகள் பதிவாகின. இது சதவீதம் அளவில் உயர்ந்திருந்தாலும் கடந்த காலங்களை வாக்களித்தவர்களின் எண்ணிக்கையை பொருத்தமட்டில் பெரிய அளவில் வாக்குப் பதிவில் புரட்சி நடக்கவில்லை என்றே நிபுணர்கள் சொல்கிறார்கள்.

பொதுவாக தேர்தல் முடிந்ததுமே தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்புகள் வெளியாகும். ஆனால் இந்த முறை மேற்கு வங்கத்தின் 2ஆம் கட்ட தேர்தல் இன்று (ஏப்.29) முடிவடைந்ததால் எக்சிட் போல்களை வெளியிட தேர்தல் ஆணையம் தடை விதித்திருந்தது.
தற்போது மேற்கு வங்க தேர்தல் நடந்து முடிந்த நிலையில் தமிழகம், புதுவை, அஸ்ஸாம், கேரளா, மேற்கு வங்கம் ஆகிய 5 மாநிலங்களுக்கான எக்சிட் போல் வெளியாகியுள்ளது.
தமிழகத்தில் மொத்தம் 234 சட்டசபை தொகுதிகள் உள்ளன. இந்த தேர்தலில் தனி பெரும்பான்மைக்கு 118 இடங்கள் தேவை. கடந்த 2021 ஆம் ஆண்டு நடந்த சட்டசபை தேர்தலில் திமுக 133 தொகுதிகளில் வென்று தனிப்பெரும்பான்மை பலத்தை பெற்றது. அது போல் அதிமுக 66 இடங்களிலும், காங்கிரஸ் கட்சி 18 இடங்களிலும் பாமக 5 இடங்களிலும், பாஜக 4 இடங்களிலும், விசிக 4 இடங்களிலும், கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கட்சிகள் தலா 2 இடங்களிலும் வென்றன.
இந்த நிலையில் இன்று தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்புகள் வெளியாகின. அதில் People's pulse கருத்துக் கணிப்பில் திமுக கூட்டணி 125- 145 தொகுதிகளில் வென்று திமுக ஆட்சியை தக்க வைத்துக் கொள்ளும்.
அது போல் அதிமுக கூட்டணி 65- 80 தொகுதிகளிலும் தவெக 18 முதல் 24 தொகுதிகளில் வெல்ல வாய்ப்பிருப்பதாக கணிக்கப்பட்டுள்ளது. பெரும்பான்மைக்கு 118 தொகுதிகள் தேவைப்படுகிறது என்ற நிலையில் திமுக கூட்டணி 125- 145 தொகுதிகளில் வெல்லும் என கணித்துள்ளது.
தவெக ஒரு தொகுதியில் கூட வெற்றி பெறாது என அரசியல் கட்சி தலைவர்கள் கூறிய நிலையில் பீப்பிள்ஸ் பல்ஸ், சாணக்கியா ஸ்ட்ராட்டெஜிஸ் ஆகிய கருத்துக் கணிப்பில் தவெக கணிசமான தொகுதிகளில் வெல்லும் என கணிக்கப்பட்டுள்ளது.
-
விஸ்வரூபம் எடுத்த ஆந்திர விவகாரத்தில் ட்விஸ்ட்.. விஜய்-க்கு நிம்மதி! 'உல்சான்' ஆக மாறும் தூத்துக்குடி -
மதிமுக எம்எல்ஏக்களின் ராஜினாமா முடிவு.. குமுறிய துரை வைகோ.. பிடி கொடுக்காத விஜய் -
வங்கியில் இருக்கும் மக்களின் தங்கத்தை டார்கெட் செய்யும் மத்திய அரசு? அவசர அவசரமாக அனுப்பப்பட்ட உத்தரவு! -
இந்தியாவை தாக்கும் பெரிய ஆபத்து.. விஷயம் கேட்டு எலான் மஸ்க் கூட அதிர்ந்து போனார்! பேரழிவு கன்பார்ம்? -
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
சென்னை சூட்கேஸில் தலை இல்லாத சடலம்... இப்படி ஒரு பெண்ணா? பார்கோடு தந்த மரண துப்பு.. அலறிய பெரம்பூர் -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல் -
டெல்லியில் இந்தியா கூட்டணி ஆலோசனை.. திமுக, ஆம் ஆத்மி புறக்கணிப்பு.. வைகோ, திருமாவளவன் பங்கேற்பு -
மீண்டும் வந்த அதே வரலாற்று சிக்னல்.. தங்கம் விலை மிகப்பெரிய அளவில் சரிகிறது.. இப்போ வாங்கலாமா? -
ஸ்டாலின் காங்கிரஸுக்கு தந்த பவர்புல் ஷாக்! பாஜகவும் இல்லை.. அப்ப தேசிய அரசியலில் திமுகவின் ரூட் என்ன -
கேஸ் சிலிண்டர் விலை ரூ.1,600.. விலை உயர்வை அறிவித்த கையோடு.. மத்திய அரசு சொன்ன முக்கியமான பாயிண்டு -
இன்னும் சில மணி நேரம் தான்.. பூமியை நோக்கி வரும் 'சூரிய புயல்'! மெகா அலர்ட் கொடுத்த நாசா












Click it and Unblock the Notifications