பொள்ளாச்சி கேஸ் ஓவர்! அடுத்து இந்த கேஸ்தான்.. எடப்பாடிக்கு பெரிய செக் வைத்த ஸ்டாலின்! பிரம்மாஸ்திரம்
சென்னை: பொள்ளாச்சி வழக்கை போல கொடநாடு வழக்கிலும் தீர்ப்பு விரைவில் வரும் என்று உதகையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேட்டி அளித்துள்ளார்.
உதகையில் பேட்டி அளித்த முதல்வர் ஸ்டாலின், அமித்ஷாவை எதற்காக எடப்பாடி பழனிசாமி சந்தித்தார் என்பது நாட்டுக்கே தெரியும். ஆனால், தான் சொல்லித்தான் மெட்ரோ, 100 நாள் வேலை ஆகிய திட்டங்களுக்கு நிதி ஒதுக்கப்பட்டதாக கூறி வருகிறார். இந்த மாதிரி Humbug-ஆ பொய், பித்தலாட்டத்தை சொல்வதுதான் அவரின் வேலையாக இருக்கிறது. இதுவும் தமிழ்நாட்டு மக்களுக்கு நன்றாகவே தெரியும்.
இப்போது பொள்ளாச்சி வழக்கில் தீர்ப்பு வந்துவிட்டது. அடுத்து பொள்ளாச்சி வழக்கை போல கொடநாடு வழக்கிலும் தீர்ப்பு விரைவில் வரும். திமுக ஆட்சிக்கு வந்ததும் பொள்ளாச்சி வழக்கில் குற்றவாளிகள் நிச்சயம் தண்டிக்கப்படுவார்கள் என 2019 நாடாளுமன்ற தேர்தல் பரப்புரையின்போதே நான் பேசியிருந்தேன். அதுதான் இப்போது நடந்திருக்கிறது
கோடநாடு கொலை கொள்ளை வழக்கிலும் விசாரணை நடைபெற்று வருகிறது. உரிய தண்டனை வழங்கப்படும்" அதிமுக ஆட்சியில் விளையாட்டுத்துறை அமைச்சர் யார்? என்று கேட்டால் தெரியாது, ஆனால் இப்போது யார்? என்று உங்கள் அனைவருக்கும் தெரியும், என்று முதல்வர் ஸ்டாலின் பேசி இருக்கிறார்.

கோடநாடு வழக்கு:
கோடநாடு கொலை மற்றும் கொள்ளை வழக்கில் எடப்பாடி பழனிசாமி மீது புகார்கள் வைக்கப்பட்டு வரும் நிலையில்தான் அதில் விசாரணையை தீவிரப்படுத்த ஆளும் திமுக முடிவு செய்துள்ளதாம். இதில் இத்தனை காலம் எடப்பாடிக்கு எதிராக திமுக கொஞ்சம் கரிசனை காட்டியதாம். அதிமுகவை காலி செய்தால்.. பாஜக உள்ளே வரும் என்று திமுக நினைத்ததாம். ஆனால் இப்போது பாஜக ஆட்சியும் முடிவிற்கு வரும் என்று திமுக நம்புவதால்.,. எடப்பாடியையும் வீழ்த்த திமுக முடிவு செய்துள்ளதாம்.
விசாரணை தீவிரம்
விசாரணையின் ஒரு கட்டமாக, ஜெயலலிதாவின் வளர்ப்பு மகன் சுதாகரன், கோடநாடு எஸ்டேட் மேலாளர் நடராஜன், அதிமுக ஆட்சியில் அதிகார மையத்தோடு நெருக்கமாக இருந்த போலீஸ் அதிகாரிகள் பெருமாள் சாமி, ராஜா, வீரபெருமாள் ஆகியோரிடம் விசாரணை நடத்தப்பட்டது. அதுமட்டுமல்லாமல், சசிகலாவிடமும் விசாரணை நடத்தியது சி.பி.சி.ஐ.டி.
இந்த நிலையில், சசிகலாவின் அண்ணி இளவரசி, எடப்பாடியின் வலதுகரமான சேலம் இளங்கோவன் ஆகியோரிடம் விசாரணை நடத்த சி.பி.சி.ஐ.டி. போலீஸ் திட்டமிட்டுள்ளதாம். விரைவில் இவர்களுக்கு சம்மன் அனுப்பப்படவிருக்கிறதாம். இவர்களிடம் விசாரித்து விட்டு, இறுதியில் எடப்பாடி பழனிச்சாமியிடம் விசாரிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. அனேகமாக இந்த விசாரணை ஆகஸ்ட் 15-க்கு முன்னதாக நடக்கலாம்'' என்று போலீஸ் தரப்பில் சொல்லப்படுகிறது.
கோடநாடு வழக்கு பின்னணி
ஜெயலலிதா மரணத்திற்கு பின் கடந்த 2017 ஏப்ரல் 24ல் கோடநாட்டில் நடந்த கொள்ளை சம்பவத்தில் பல பொருட்கள், கோப்புகள் கொள்ளை அடிக்கப்பட்டதாக கூறப்பட்டது. இதில் எஸ்டேட் காவலாளி ஓம்பகதூர் என்பவரும் கொள்ளையர்களால் கொல்லப்பட்டார். அதன்பின் கொள்ளையில் குற்றஞ்சாட்டப்பட்ட பலர் அடுத்தடுத்து மர்மமான முறையில் மரணம் அடைந்தனர். இந்த கோடநாடு மர்ம மரணங்கள் மற்றும் கொள்ளை பற்றி தமிழ்நாடு போலீஸ் 5 தனிப்படை அமைத்து விசாரித்து வந்தது.
இந்த கொள்ளை மற்றும் கொலை சம்பவத்திற்கு பின் சரியாக 4 நாட்கள் கழித்து கொள்ளையில் ஈடுபட்ட கனகராஜ் விபத்து ஒன்றில் மர்மமாக மரணம் அடைந்தார். இவர் ஜெயலலிதாவின் முன்னாள் கார் டிரைவர். அதேபோல் இன்னொரு முக்கிய குற்றவாளி சயான் குடும்பத்தினர் விபத்தில் கொல்லப்பட்டனர். இதில் சயான் நூலிழையில் உயிர் தப்பினார்.
எடப்பாடி மீது நேரடி குற்றச்சாட்டு: இந்த வழக்கில் சயான் நேரடியாக எடப்பாடி பழனிசாமி மீதே குற்றஞ்சாட்டி இருக்கிறார். எடப்பாடி பழனிசாமியை நோக்கி இவர் தனது கையை திருப்பி உள்ளார். எடப்பாடி பழனிச்சாமி சொல்லித்தான் கனகராஜ் இந்த திட்டங்களை தீட்டியதாக சயான் போலீசில் வாக்குமூலம் அளித்ததாக கூறப்படுகிறது. இப்படி வழக்கில் போகஸ் எடப்பாடி பக்கம் திரும்பி உள்ளது. இந்த நிலையில்தான் வழக்கு தற்போது சிபிசிஐடி வசம் சென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
புகார் மேல் புகார்
கோடநாடு வழக்கில் ஜெயலலிதாவின் கார் ஓட்டுநர் கனகராஜின் சகோதரர் அளித்த பரபரப்பு பேட்டிதான் இப்போது எழுந்துள்ள பரபரப்பிற்கு காரணம் என்கிறார்கள் அதிமுகவில் விவரம் அறிந்தவர்கள், எனது தம்பி உயிரிழந்தது விபத்து அல்ல; திட்டமிட்ட கொலை.. எடப்பாடி பழனிசாமியை விசாரிக்க வேண்டும் என்று ஜெயலலிதாவின் கார் ஓட்டுநர் கனகராஜின் சகோதரர் பரபரப்பு பேட்டி அளித்துள்ளார்.
-
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்! -
மருமகள் உள்ளே, சீனியர் வெளியே? 55 கால சாம்ராஜ்ஜியத்திற்கு செக்! காட்பாடி திருப்பத்தின் பின்னணி என்ன -
இரட்டை இலையை விட்டுவிட்டு.. தாமரைக்கு தாவும் கூட்டணி கட்சிகள்! எங்கேயோ இடிக்குதே! -
ஈரானை சுத்துப்போடும் ‘பாராசூட் அட்டாக்’ டீம்.. டிரம்ப் பெரிய பிளான்.. போர் இப்போதைக்கு முடியாது? -
10 சவரன் கையில், 8 சவரன் பில்லில்! பழைய நகையை மாற்றினால் நடக்கும் ரகசியம்.. ஏமாறாமல் இருக்க இதோ வழி












Click it and Unblock the Notifications