சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

அதிமுகவை எம்.எல்.ஏ.வை வளைத்தால்... கோடிக்கணக்கில் கமிஷன்...ஆட்சி கவிழ்ப்பில் ஜரூர் திமுக!

Google Oneindia Tamil News

Recommended Video

    6 பேரை நம்பும் ஸ்டாலின்.. ஸ்லீப்பர் செல்களை களமிறக்கும் தினகரன்..

    சென்னை: முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அரசை கவிழ்க்கும் முயற்சியில் திமுக படுதீவிரமாக இறங்கியுள்ளதாம். அதிமுக எம்.எல்.ஏக்களை வளைத்து கொடுப்போருக்கு கோடிக்கணக்கில் கமிஷன் கொடுக்கப்படும் என அறிவித்து இந்த ஆட்சிக் கவிழ்ப்பு வேலைகளை நடத்துகிறது திமுக.

    லோக்சபா தேர்தலுடன் தமிழகத்தில் 22 சட்டசபை தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடைபெற்றது. இதில் திமுக 13, அதிமுக 9 தொகுதிகளைக் கைப்பற்றியது.

    இதையடுத்து சட்டசபையில் அதிமுக எம்.எல்.ஏக்கள் எண்ணிக்கை 123 ஆக அதிகரித்தது. பெரும்பான்மைக்கு தேவையான 118 ஐவிட 5 இடங்கள் அதிமுகவுக்கு அதிகமாகத்தான் இருக்கிறது.

    லத்திசார்ஜ் நடத்திய மம்தா பானர்ஜிக்கு ஷாக் ட்ரீட்மென்ட் கொடுக்க தயாராகும் பாஜக! லத்திசார்ஜ் நடத்திய மம்தா பானர்ஜிக்கு ஷாக் ட்ரீட்மென்ட் கொடுக்க தயாராகும் பாஜக!

    திமுக கிச்சன் கேபினட்

    திமுக கிச்சன் கேபினட்

    திமுக அணியின் பலம் 110 எம்.எல்.ஏக்களாக உள்ளது. அதிமுக ஆட்சியை வீட்டுக்கு அனுப்புவோம் என தொடர்ந்து திமுக கூறிவருகிறது. ஆனாலும் ஆட்சிக் கவிழ்ப்பு முயற்சிகளில் திமுக இறங்காமல் இருந்து வந்தது. கருணாநிதியின் மகன் என்பதால் கொல்லைப்புறமாக ஆட்சியை கைப்பற்றமாட்டோம் என திமுக தலைவர் ஸ்டாலின் தொடர்ந்து பேசிவருகிறார். ஆனால் திமுகவை ஆட்டி படைக்கும் 'கிச்சன் கேபினட்' ஆட்சியை கவிழ்த்தே ஆக வேண்டும் என கறாராக இருக்கிறது.

    ஆட்சி கவிழ்ப்பு முயற்சி ஏன்?

    ஆட்சி கவிழ்ப்பு முயற்சி ஏன்?

    இதற்கு காரணம், திமுக ஆட்சி அமைந்தால் அமைச்சர் பதவிகளை முன்வைத்து 'ராஜாங்கம்' நடத்தலாம் என்பதுதான் கணக்கு. இந்த கணக்குக்கு அதிகாரப் பசி கொண்ட திமுக எம்.எல்.ஏக்கள் 'ஆமாம்' சாமி போட்டுள்ளனர். இதனால் வேறுவழியே இல்லாமல் ஸ்டாலினும் ஆட்சி கவிழ்ப்புக்கு ஓகே சொன்னாராம்.

    கோடிகளில் கமிஷன்

    கோடிகளில் கமிஷன்

    அமைச்சர் பதவிக்காக இலவு காத்து கிடக்கும் எம்.எல்.ஏக்கள் சிலர், ஆட்சி கவிழ்ப்புக்கு தாங்கள் பொறுப்பு என களத்தில் இறங்கிவிட்டனராம். அந்த எம்.எல்.ஏக்கள் தங்களது அடிப்பொடிகளிடம் ஒரு அதிமுக எம்.எல்.ஏ.வை வளைத்துக் கொண்டு வந்தால் கோடிக்கணக்கில் கமிஷன் கிடைக்கும் என கரன்சிகளை வீசியுள்ளனர். இதனால் எங்களுக்கு கமிஷனே கோடிக்கணக்கில் கிடைக்குது...அப்ப உங்களுக்கு எத்தனை கோடி கொடுப்பாங்க... நல்லா யோசியுங்க என அதிமுக எம்.எல்.ஏக்களுக்கு தூபம் போட்டு வருகின்றனராம்.

    ஆட்சி கவிழ்ப்பு முயற்சி தோற்கும்?

    ஆட்சி கவிழ்ப்பு முயற்சி தோற்கும்?

    இதில் ஒன்றிரண்டு சபல எம்.எல்.ஏக்கள் தலையை ஆட்டியிருக்கின்றனராம். இதனால் தங்களது ஆபரேஷன் சக்சஸ் என சென்னையில் உள்ள கிச்சன் கேபினட்டுக்கு மெசேஜ் அனுப்பி குதூகலிக்கிறார்களாம் திமுக எம்.எல்.ஏக்கள். அதே நேரத்தில் எம்.எல்.ஏக்களை திமுக பேரம் பேசும் தகவல் அதிமுக தலைமைக்கு சென்றிருக்கிறது. இதனால் எம்.எல்.ஏக்களை முழு வீச்சில் கண்காணிக்க உத்தரவிடப்பட்டுள்ளதாம். மேலும் திமுகவுக்கு பதிலடி தரும் வகையில் காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் சிலரை தங்களுக்கு ஆதாவு தர தயாராக இருக்கவும் ரெடி செய்திருக்கிறதாம் அதிமுக. 'ஆக' இம்முறையும் ஸ்டாலின் ஆட்சி கவிழ்ப்பு முயற்சி விழலுக்கு இறைத்த நீராகத்தான் போகும் என்கின்றனர் அதிமுக நிர்வாகிகள்.

    English summary
    Sources said that DMK is trying to topple the CM Edappadi Palanisamy lead Tamilnadu Govt.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X