லோக்சபா தேர்தல் 2024: திமுகவில் விருப்பமனு விநியோகம் தொடக்கம்.. வேட்பாளர் கட்டணம் எவ்வளவு?
சென்னை: நாடாளுமன்றத் தேர்தலில் திமுக சார்பில் போட்டியிட விரும்புவோருக்கான விண்ணப்பப் படிவங்கள் சென்னை தேனாம்பேட்டையில் உள்ள அண்ணா அறிவாலயத்தில் இன்று முதல் வழங்கும் பணிகள் தொடங்கின.
இதுகுறித்து திமுக பொதுச் செயலாளர் துரைமுருகன் வெளியிட்ட அறிவிப்பில், ''நடைபெற உள்ள மக்களவை பொதுத்தேர்தலில் திமுக சார்பில் வேட்பாளராக போட்டியிட விரும்புவோருக்கான விண்ணப்ப படிவங்கள், வரும் பிப்.19-ம் தேதி முதல் அண்ணா அறிவாலயத்தில் உள்ள தலைமைக் கழகத்தில் கிடைக்கும்.

போட்டியிட விரும்புவோர், விண்ணப்பத்தை முறையாக பூர்த்தி செய்து, மார்ச் 1 முதல் 7-ம் தேதி மாலை 6 மணிக்குள் தலைமைக் கழகத்தில் சமர்ப்பிக்க வேண்டும். வேட்பாளர் கட்டணம் ரூ.50 ஆயிரமாகும். விண்ணப்ப படிவத்தை ரூ.2 ஆயிரம் செலுத்தி தலைமைக் கழகத்தில் பெற்றுக் கொள்ளலாம்''என தெரிவித்துள்ளார்.
மக்களவைத் தேர்தல் தேதி அடுத்த மாதம் அறிவிக்கப்படவுள்ள நிலையில் தமிழகத்தில் கூட்டணி பேச்சுவார்த்தைகள், தொகுதி பங்கீடு உள்ளிட்டவை ஆலோசிக்கப்பட்டு வருகின்றன. அந்த வகையில் தமிழகத்தில் மக்களவைத் தேர்தலில் போட்டியிட விரும்புவோரிடம் இருந்து விருப்ப மனுவை பெறலாம் என திமுக முதல் கட்சியாக அறிவித்துள்ளது.
விண்ணப்பங்கள் பெறப்பட்டவுடன் திமுக போட்டியிடும் இடங்களுக்கு நேர்முகத் தேர்வு நடத்தப்படும். அந்த நேர்முகத் தேர்வில் வேட்பாளருக்கு கேட்கும் தொகுதியில் செல்வாக்கு இருக்கிறதா, வெற்றி வாய்ப்புக்கான சாத்தியக்கூறுகள் என்ன என்பது குறித்தெல்லாம் ஆலோசிக்கப்படும். பிறகு நாடாளுமன்றத் தேர்தல் குழுவுடன் ஆலோசனை மேற்கொண்டு வேட்பாளர்கள் பட்டியல் வெளியிடப்படும்.
-
எதிர்காலம் நம்பிக்கையளிக்கிறது.. எனர்ஜி கூடுகிறது! ஜென் ஸி கூட்டம் குறித்து மு.க.ஸ்டாலின் நெகிழ்ச்சி -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
பிளான் A எடப்பாடி.. பிளான் B திருமா.. திமுக பிளான்.. புட்டு புட்டு வைத்த காதர் மொகிதீன் -
விஜய்க்கு விஷப் பரிட்சை..திமுகவுக்கு அக்னி பரிட்சை! இடைத் தேர்தலுக்கு ரெடியான கழகங்கள்! அதிமுக அமைதி -
"திமுககாரன்னா திமிர் இருக்கணும்".. காரணம் சொல்லி ‘ஜென் ஸி' மீட்டப்பில் பேசிய டிஆர்பி ராஜா -
குடும்பத்தினருடன் குடகு மலைக்குச் சென்ற திமுக தலைவர் ஸ்டாலின்.. கூட யார் யார்லாம் பாருங்க! -
திமுகவே கணிக்கல.. விஜய்யுடன் நெருங்கிய காங்கிரஸ்! பாஜகவை வீழ்த்த இந்தியா கூட்டணி மாஸ்டர் ஸ்கெட்ச் -
“கொளத்தூரில் ஸ்டாலின் தோற்பார் என முன்பே தெரியும்.. திமுகவிடம் சொன்னோம்”.. காதர் மொய்தீன் தடாலடி! -
10ல் 1ல் மட்டுமே வெற்றி.. எனன் நடந்தது? தேமுதிக மா.செக்களை அழைத்து விசாரிக்கும் பிரேமலதா விஜயகாந்த் -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
ஸ்டாலினே சொன்னா தான் உண்டு.. திமுக - அதிமுக கூட்டணி முயற்சி நடந்ததா? 30 நாளாய் நீடிக்கும் மர்மம்! -
தேர்தல் புயலில் சேதாரமான கோட்டை.. படக்கென எழுந்த ’திமுக’ குதிரை.. படுத்தே கிடக்கும் ’அதிமுக’ யானை!












Click it and Unblock the Notifications