30 நாள் கூட இல்லை.. ரொம்ப கவனமா இருங்க.. மேலிடம் அனுப்பிய மெசேஜ்.. உஷாரான திமுகவின் 4 தலைகள்
சென்னை: திமுக மேலிடம் சார்பாக கட்சியில் இருக்கும் 4 முக்கியமான தலைகளுக்கு எச்சரிக்கை ஒன்று சென்றுள்ளதாம்.
தமிழகத்தின் ஆளும் கட்சியான திமுகவும், எதிர்க்கட்சியான அதிமுகவும் தங்கள் கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களை அறிவித்துள்ளன. இந்த வேட்பாளர் பட்டியலில் உற்சாகமும் இருக்கிறது, அதிருப்தியும் இருக்கிறது.

இது ஒரு புறமிருக்க, வேட்பு மனு தாக்கல் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. வேட்புமனு தாக்கல் செய்ய 27ந்தேதி கடைசி நாள். இந்த நிலையில், திமுக, அதிமுக வேட்பாளர்கள், எப்போது வேட்பு மனு தாக்கல் செய்வது என தலைமையிடம் கேட்டு வருகின்றனர். ஞாயிற்றுக்கிழமை பௌர்ணமி (24-ந்தேதி) என்பதாலும், அதன்பிறகு தேய்பிறை ஆரம்பிப்பதாலும் 24-ந்தேதிக்குள் தாக்கல் செய்ய வலியுறுத்தப்பட்டுள்ளதாம்.
லோக்சபா தேர்தலுக்கான கூட்டணி பற்றிய அறிவிப்புகளை திமுக வேகமாக வெளியிட்டு வருகிறது. இந்த நிலையில் திமுக போட்டியிடும் 21 தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியல்:
1 ) வடசென்னை - கலாநிதி வீராசாமி
2 ) தென்சென்னை - தமிழச்சி தங்கபாண்டியன்
3 ) மத்திய சென்னை - தயாநிதி மாறன்
4 ) காஞ்சிபுரம் (தனி) - செல்வம்
5 ) அரக்கோணம் - ஜெகத்ரட்சகன்
6) வேலூர் - கதிர் ஆனந்த்
7 ) தருமபுரி - அ.மணி
8 ) திருவண்ணாமலை - சி.என்.அண்ணாதுரை
9 ) சேலம் - செல்வ கணபதி
10 ) கள்ளக்குறிச்சி - மலையரசன்
11 ) நீலகிரி (தனி) - ஆ.ராசா
12 ) பொள்ளாச்சி - கே.ஈஸ்வரசாமி
13 ) கோவை - கணபதி ராஜ்குமார்
14 ) தஞ்சாவூர் - ச.முரசொலி
15 ) தூத்துக்குடி - கனிமொழி கருணாநிதி
16 ) தென்காசி (தனி) - ராணி ஸ்ரீ குமார்
17 ) ஸ்ரீபெரும்புதூர் - டி.ஆர்.பாலு
18 ) பெரம்பலூர் - அருண் நேரு
19 ) தேனி - தங்க தமிழ்செல்வன்
20 ) ஈரோடு - பிரகாஷ்
21 ) ஆரணி - தரணி வேந்தன்
எச்சரிக்கை; திமுக மேலிடம் சார்பாக கட்சியில் இருக்கும் 4 முக்கியமான தலைகளுக்கு எச்சரிக்கை ஒன்று சென்றுள்ளதாம். அதன்படி திமுகவிற்காக பொருளாதார ரீதியாக, அரசியல் ரீதியாக உதவும் 4 பேருக்கு அந்த எச்சரிக்கை சென்றுள்ளதாம்.
அந்த 4 பேருமே அமைச்சர்கள் என்று கூறப்படுகிறது. அதில், நீங்கள் தேர்தல் பணிகள், செலவுகள் செய்வது இருக்கட்டும்.. இந்த நேரத்தில் கண்டிப்பாக அமலாக்கத்துறை, வருமான வரித்துறை ரெய்டு வரும். அதில் கவனமாக இருங்கள். எந்த நொடி வேண்டுமானாலும் ரெய்டு வரலாம்.
நம்முடைய தேர்தல் பணிகளை முடக்க ரெடியாக இருப்பார்கள். மடியில் கனம் இருந்தால்தான் வழியில் பயம் இருக்கும்.
அதனால் அதை பற்றி பயப்பட வேண்டாம். தேர்தல் பணிகளை செய்யும் போதே இதிலும் கவனமாக இருந்து கொள்ளுங்கள். அது போதும் . இன்னும் தேர்தலுக்கு ஒரு மாதம் கூட இல்லை . அதுவரைதான் ஆடுவார்கள். அதற்கு மேல் சிக்கல் இருக்காது, என்று மேலிடம் சார்பாக 4 முக்கியமான தலைகளுக்கு எச்சரிக்கை சென்றுள்ளதாம்.












Click it and Unblock the Notifications