Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

அவரை எல்லாம் கண்டுக்காதீங்க.. போகஸ் தராதீங்க.. விஜயை ஒதுக்கி தள்ளும் திமுக மேலிடம்! முக்கிய முடிவு?

Subscribe to Oneindia Tamil

சென்னை: மதுரையில் நடந்த தமிழக வெற்றிக் கழகத்தின் இரண்டாவது மாநில மாநாட்டில் நடிகர் விஜய், முதல்வர் ஸ்டாலினை கடுமையாக கிண்டல் செய்து பேசினார். அவரின் பேச்சு.. எப்படியாவது ஸ்டாலினை பேச வைக்க வேண்டும், ஸ்டாலினின் விமர்சனத்தை பெற வேண்டும் என்று திட்டமிட்டு பேசப்பட்டது போல இருந்தது.

விஜய் தனது பேச்சில், எங்களுடைய ஒரே கொள்கை எதிரி பாஜகதான், ஒரே அரசியல் எதிரி திமுகதான், மாற்றமே இல்லை. டீலிங் போட்டு, கூட்டணி வச்சு அரசியல் செய்யும் கட்சி நாங்கள் இல்லை. நாங்கள் ஒன்று உலக மகா ஊழல் கட்சியும் இல்லை, பாஜக உடன் மறைமுக டீலிங் செய்யும் பாசிச கட்சியும் இல்லை.

TVK Manadu Vijay Madurai TVK

விஜய் ஸ்டாலின் அட்டாக்

தவெக கையில் எடுத்துள்ள அரசியல், உண்மையான அரசியல், உணர்வுப்பூர்வமான அரசியல், நல்ல அரசியல், நல்லது மட்டுமே செய்யும் அரசியல். 2026ல் தவெக - திமுக இடையில்தான் போட்டியே, வேறு போட்டியே இங்கே இல்லை. கூட்டணி வைக்கலாம்.. கூட்டணி வச்சு தப்பிச்சிக்கலாம் என்று திமுக நினைக்கிறது. எம்ஜிஆர் இருக்கிற வரை யாராலும் முதல்வர் ஆக முடியவில்லை.. அப்படிப்பட்ட தலைவர் அவர்.

வெற்று விளம்பர மாடல் திமுக பாஜக உடன் ரகசிய கூட்டணி வைத்துள்ளது, ஒரு ரெய்டு வந்தால் போதும் உடனே டெல்லிக்கு போய் ரகசிய மீட்டிங் போடுகிறார்கள் , ஸ்டாலின் அங்கிள் - வெரி ராங்க் அங்கிள். மை டியர் அங்கிள்.. ஸ்டாலின் அங்கிள்.. சொல்லுங்க அங்கிள். உங்களை அப்பான்னு வேறு சொல்லனுமா.. சாரி அங்கிள்.. என்ன இதெல்லாம்.. வெரி வெரி வொர்ஸ்ட் அங்கிள்

நான் ஒன்றும் மார்க்கெட் போன பின், அடைக்கலம் தேடி, அரசியலுக்கு வரவில்லை, படைக்கலத்தோடு வந்திருக்கிறேன். எல்லோரும் கட்சி ஆரம்பிச்சதுக்கு அப்புறம்தான் ஒவ்வொரு வீட்டுக்குள்ளயும் போறதுக்கு முயற்சி பண்ணுவாங்க.. நாங்க ஒவ்வொரு வீட்டுக்குள்ளயும் போனதுக்கு அப்புறம்தான் கட்சியே ஆரம்பிச்சிருக்கோம் மக்கள் நீங்கதான் ராஜா.. நீங்க தேர்வு செய்ய போகும் அந்த தளபதி யார்? என்று விஜய் தனது உரையில் பேசி உள்ளார்.

ஸ்டாலின் விமர்சனத்தை பெற வேண்டும்

மதுரையில் நடந்த தமிழக வெற்றிக் கழகத்தின் இரண்டாவது மாநில மாநாட்டில் நடிகர் விஜய், முதல்வர் ஸ்டாலினை கடுமையாக கிண்டல் செய்து பேசினார். ஆனால் ஸ்டாலின் இதுவரை விஜயை பற்றி பேசியதே இல்லை. விஜயை ஒரு பொருட்டாக கூட ஸ்டாலின் பார்த்ததே இல்லை.

இதன் காரணமாகவே விஜயின் பேச்சு.. எப்படியாவது ஸ்டாலினை பேச வைக்க வேண்டும், ஸ்டாலினின் விமர்சனத்தை பெற வேண்டும் என்று திட்டமிட்டு பேசப்பட்டது போல இருந்தது. அதவாது அங்கிள் என்று சொன்னாலாவது.. ஸ்டாலின் கோபப்பட்டு நம்மை விமர்சனம் செய்வாரா நமக்கு பதிலடி கொடுத்து போகஸ் செய்வாரா என்ற திட்டத்தில் பேசியது போல இருந்தது.

ஆனால் விஜய்க்கு பதிலடி தர வேண்டாம். செயலாளர் அளவில் இருக்கும் சிலர் மட்டும் இப்போது பதிலடி தருவது போல தரட்டும். இதற்கு மேல் யாரும் பதிலடி தர வேண்டாம். அவர் எல்லாம் நமக்கு போட்டியே இல்லை. அவரை எல்லாம் கண்டுக்காதீங்க.. போகஸ் தராதீங்க.. என்று திமுக மேலிடம் கட்சி தலைகளுக்கு உத்தரவிட்டு உள்ளதாக கட்சி வட்டார தகவல்கள் கூறுகின்றன.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+