தேமுதிக விருப்பம்.. சொல்லிப் பார்த்த துரைமுருகன்.. கதவை அடைத்த ஸ்டாலின்
Recommended Video

சென்னை: திமுக கூட்டணியில் சேர தேமுதிக விரும்புவது தொடர்பாக மு க ஸ்டாலின் உடன் கட்சி பொருளாளர் துரைமுருகன் ஆலோசனை நடத்தினார்.
தேமுதிக மாநில நிர்வாகிகள் ஏ.ஆர்.இளங்கோவன், அனகை முருகேசன், அழகாபுரம் மோகன்ராஜ் ஆகியோர் கோட்டூர்புரத்தில் உள்ள துரைமுருகன் இல்லத்துக்கு சென்று, துரைமுருகனைச் சந்தித்து கூட்டணி தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தினர்.

திமுக தென் மண்டல மாநாட்டில் பங்கேற்பதற்காக மு.க.ஸ்டாலின் நேற்று விருதுநகர் சென்று இருந்தார். அப்போது அவரை போனில் தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்க நினைத்ததாகவும் ஆனால் அவர் தூங்கிக் கொண்டிருந்ததால், இது அவ்வளவு முக்கியமான விஷயம் இல்லை என்பதால் மேற்கொண்டு தொந்தரவு செய்யவில்லை என்றும் துரைமுருகன் கூறியிருந்தார்.
மேலும் தொகுதி பங்கீடு அனைத்தும் முடிந்து விட்டதால், இனிமேல் தொகுதிகளை கொடுக்க வாய்ப்பில்லை. இருப்பினும் திமுக தலைவர் ஸ்டாலினிடம் தேமுதிக தெரிவித்த தகவல்களை பகிர்ந்து கொள்ள உள்ளதாகவும் கூறியிருந்தார்.
இந்த நிலையில் சென்னை அண்ணா அறிவாலயத்தில் இன்று ஸ்டாலினை சந்தித்து துரைமுருகன் பேசினார். அப்போது திமுக கூட்டணியில் தேமுதிக சேர விரும்புவது தொடர்பாக அவர் எடுத்துரைத்துள்ளார்.
திமுக கூட்டணியில் அந்த கட்சி வெறும் 20 தொகுதிகளில் தான் போட்டியிடுகிறது. பிற தொகுதிகளை, கூட்டணி கட்சிகளுக்கு, வழங்கி விட்டது. எனவே மேற்கொண்டு தேமுதிகவிற்கு ஒதுக்க திமுகவிடம் தொகுதி இல்லை. இருப்பினும் தேமுதிக, அதிமுகவுடன் வர விரும்பியதை முக்கியமான விஷயமாக முன்வைத்து இந்த ஆலோசனை நடப்பதால் அது தேமுதிகவுக்கு வெகுஜன மக்களிடையே அதிருப்தியை தான் சம்பாதித்துக் கொடுக்கும் என்று கூறப்படுகிறது.
ஒருவேளை அதிமுக கூட்டணியில் தேமுதிக சேர விரும்பினால் அதை பிடிக்காத கட்சி நிர்வாகிகள் பலரும் திமுகவுக்கு வர இருப்பதாக தகவல் வெளியாகி உள்ள நிலையில் அது தொடர்பாகவும் ஸ்டாலினுடன் துரைமுருகன் விவாதித்ததாக தகவல்கள் கூறுகின்றன.
இந்த நிலையில், தேமுதிகவிற்கு தொகுதிகளை ஒதுக்க முடியாது என துரைமுருகனிடம் ஸ்டாலின் திட்டவட்டமாக கூறிவிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. எனவே தேமுதிகவிற்கு, திமுகவில் கதவுகள் அடைக்கப்பட்டுள்ளன.
-
தவெகவை முடக்க இதுமட்டும்தான் ஒரே வழி.. திமுக பிடித்த ரூட்.. ஸ்டாலின் கையில் பிரம்மாஸ்திரம் -
காங்கிரஸ் செய்த கழுத்தறுப்புகள்.. ஆசிர்வாதம் செய்த ராகுல் காந்தி! விடாத திமுக.. குதிக்கும் தலைகள்! -
ஸ்டாலினையே தோற்கடித்த கொளத்தூர்.. சேகர்பாபு தான் காரணம்? குமுறிய உபிகள்.. கள ஆய்வில் கசிந்த தகவல்! -
திமுக தோல்விக்கு காரணம் என்ன என்று நினைக்கிறீர்கள்.. கமெண்ட் செய்யுங்க -
துரைமுருகன் Out? ஆ.ராசா In.. திமுக செயல் தலைவராகும் கனிமொழி? அறிவாலயத்தை ரவுண்ட் கட்டும் யூகங்கள்! -
சைலண்ட் கில்லரான ஸ்டாலின்.. அதிமுக நிர்வாகிகளுக்கு பறந்த அழைப்பு.. தவெகவுக்கு செக் -
அண்ணா அறிவாலயத்தில் ஆட்டம் போட்ட மகளிரணி.. ரீல்ஸ் போடச் சொல்லும் ஸ்டாலின்! தவெகவைப் பார்த்து சூடு? -
அஸ்திவாரத்தை ஆட்டும் விஜய்.. அலற போகும் அறிவாலயம்! திமுக ‘மாஜி’ புள்ளிகளுக்கு செக்! களமிறங்கிய டீம்! -
மாற்றத்தை எதிர்பார்த்த மக்களுக்கு ஏமாற்றமே.. தவெக ஆட்சியை விமர்சித்து ஜவாஹிருல்லா பேச்சு -
வந்துட்டாருய்யா.. வந்துட்டாரு! திருச்சி கிழக்கில் வடிவேலு? திமுகவில் வெடித்த கலகக் குரல்! என்னாச்சு? -
தீர்ந்து போன சக்தியிடம் திருடிய காஞ்சு போன சக்தி.. விமர்சித்த ஸ்டாலின்.. தவெக கொடுத்த பதிலடி -
ஸ்டாலினிடம் சமர்ப்பிக்கப்பட்ட ரகசிய அறிக்கை: சேகர்பாபு மீது நடவடிக்கை எடுக்க தயங்கும் தலைமை - பின்னணி என்ன?












Click it and Unblock the Notifications