"என் பங்கு ரூ.25 லட்சம்".. மகிழ்ச்சியுடன் உதவிய உதயநிதி ஸ்டாலின்.. புன்னகையுடன் வாங்கி கொண்ட "அப்பா"
நிவாரண நிதிக்காக முதல்வரிடம் உதயநிதி 25 லட்சம் வழங்கினார்
சென்னை: நடிகரும், சேப்பாக்கம் திருவல்லிக்கேணி தொகுதி திமுக எம்எல்ஏவுமான உதயநிதி ஸ்டாலின், முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு ரூ.25 லட்சம் நன்கொடையாக வழங்கி உள்ளார்.
Recommended Video
தமிழகத்தில் தற்போது 2வது அலை வேகமாக பரவி வருகிறது... இதை கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன... லாக்டவுனும் போடப்பட்டுள்ளது.
இந்நிலையில், கொரோனாவை எதிர்கொள்ள முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு தாராளமாக நன்கொடை வழங்குங்கள் என்று தமிழக மக்களுக்கு முதல்வர் ஸ்டாலின் ஒரு வேண்டுகோள் விடுத்திருந்தார்.

நிதி
முதல்வரின் பொது நிவாரண நிதிக்கு அனுப்பப்படும் நிதி, கொரோனா நிவாரண பணிகளுக்கு மட்டுமே பயன்படுத்தப்படும் எனவும் உறுதி அளித்திருந்தார்.. முதல்வர் ஸ்டாலினின் வேண்டுகோளை ஏற்று பொதுமக்கள் , அரசியல் கட்சியினர், தொழிலதிபர்கள், திரைத்துறையினர் என பல்வேறு தரப்பினரும் நிவாரண நிதி அனுப்பி வருகின்றனர்.

வேண்டுகோள்
அந்த வேண்டுகோளை ஏற்று, நடிகர் சிவக்குமார், தனது குடும்பத்தினர் சார்பாக ரூ.1 கோடி நிதியுதவி வழங்கினார்... மேலும், திமுக அறக்கட்டளையின் சார்பில் கொரோனா நிவாரண பணிகளுக்காக ஒரு கோடி ரூபாய்க்கான காசோலையை முதல்வர் ஸ்டாலினிடம் திமுக பொருளாளர் டி.ஆர்.பாலு வழங்கினார். இதேபோல, விசிக தலைவர் தொல்.திருமாவளவனும் முதல்வரை சந்தித்து 10 லட்ச ரூபாய்க்கான காசோலையை அளித்தார்.

உதயநிதி
இந்நிலையில், நடிகரும், சேப்பாக்கம் திருவல்லிக்கேணி தொகுதி திமுக எம்.எல்.ஏ.வுமான உதயநிதி ஸ்டாலின், முதல்-அமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு ரூ.25 லட்சம் நன்கொடையாக வழங்கி உள்ளார். இதுகுறித்து ஒரு ட்வீட்டும் பதிவிட்டுள்ளார்..

வேண்டுகோள்
அதில், மாண்புமிகு தமிழக முதல்வர்-தலைவர் @mkstalin அவர்களை தலைமை செயலகத்தில் சந்தித்து கொரோனா தடுப்பு பணிகளுக்காக முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு ரூ.25 லட்சத்துக்கான காசோலையை வழங்கினேன்.முதல்வரின் பொது நிவாரண நிதிக்கு தாராளமாக நிதியளிப்போம். ஒன்றிணைந்து செயல்பட்டு பெருந்தொற்றை வெல்வோம்" என்று பதிவிட்டுள்ளார்.

பாராட்ட
இதையடுத்து இந்த ட்வீட்டுக்கும் வரவேற்பு தெரிவித்து வருகின்றனர்.. "நன்கொடை தந்த எங்கள் இளைய சூரியனுக்கு வாழ்த்துக்கள்.. இந்த நோய்த்தொற்று பாதிப்பிலிருந்து மக்கள் அனைவரையும் காப்பாற்ற ஒன்றிணைந்து போராடுவோம் அண்ணா" என்று பதிவிட்டு வருகின்றனர்.
-
“துரோகி.. துரோகி”.. செல்வப்பெருந்தகை வந்தபோது திமுகவினர் கோஷம்.. திடீர் பரபரப்பு! -
ஒதுங்கும் துரைமுருகன்.. திமுகவின் புதிய பொதுச்செயலாளராகிறாரா ஆ.ராசா? உதயநிதி ஸ்டாலினும் ஆதரவாம்! -
ஸ்டாலினுக்கு அதிர்ச்சி கொடுத்த கருணாநிதி! திநகர் மாஜி எம்எல்ஏவை தட்டி தூக்கிய தவெக! -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
தாத்தா காலத்து பாலிடிக்ஸ் வேலைக்கு ஆகாது! உதய் போடும் மாஸ்டர் ப்ளான்! இனி Gen Z ஸ்டைல் தானாமே! -
அண்ணன் தம்பிகள்தானே! இடைத்தேர்தலில்.. அதிமுக-திமுக கூட்டணி! வாயை விட்ட சுப வீரபாண்டியன்! -
திமுக நாசமா போக காரணமே நாமதான்..ஒரிஜினல் திமுககாரன வளர்த்து விடுங்க! மேடையில் வெடித்த மாஜி மூர்த்தி! -
“திமுக கூட்டணியில்தான் தொடர்கிறோம்.. தவெக அரசுக்கு வெளியில் இருந்து ஆதரவு”.. CPI வீரபாண்டியன் உறுதி! -
உதயநிதியின் தவறுக்கான தண்டனைதான்.. திமுகவின் தோல்வி! ராகுல் காந்தியை இழுக்காதீங்க - மாணிக்கம் தாகூர் -
“தனது தலையில் தானே மண் அள்ளிப் போட்டுக் கொண்டுள்ளார் ராகுல்..” முரசொலி சரமாரி விமர்சனம்! -
"இது அதுல்ல?.. ஜனநாயகத்தை சிதைப்பதில் பாஜகவும் தவெகவும் ஒண்ணு” - திமுக சரமாரி அட்டாக்! -
காங். துரோகம்.. மனக்காயத்தில் தொண்டர்கள்! இந்திய கூட்டணி கூட்டத்தில் பங்கேற்க மாட்டோம்! - திமுக












Click it and Unblock the Notifications