"இது போதுமா".. உதயநிதி வைத்த சூப்பர் "வணக்கம்".. மலைத்து போய் பார்த்த எடப்பாடி பழனிசாமி
உதயநிதியின் அணுகுமுறை அனைவராலும் கவனிக்கப்பட்டு வருகிறது
சென்னை: "இது போதுமா? இன்னும் வேணுமா".. என்று உதயநிதியின் ஒரு போட்டோவை அவரது ஆதரவாளர்கள் சோஷியல்மீடியாவில் பதிவிட்டு வைரலாக்கியும் வருகிறார்கள்.
Recommended Video
உதயநிதியின் அணுகுமுறைகள் தற்போது அனைவராலும் உற்றுநோக்கப்பட்டு வருகிறது.. தேர்தலில் வெற்றி பெற்றதும் மூத்த தலைவர் நல்லகண்ணுவை நேரில் சென்று சந்தித்து ஆசி பெற்றார்..
அதன்பிறகு, ஸ்ட்டிரைட்டாக விஜயகாந்த்துக்கு வீட்டுக்கு போனார்.. இதை யாருமே எதிர்பார்க்கவில்லை.. விஜயகாந்த்திடம் சென்று ஆசி வாங்கினார்..

தலைவர்கள்
அதற்கு பிறகு கூட்டணியில் இடம்பெற்றுள்ள தலைவர்கள் திருமாவளவன், வைகோ, வேல்முருகன், முத்தரசன், பாலகிருஷ்ணன் என்று அனைத்து கூட்டணி கட்சி தலைவர்களையும் சந்தித்து ஆசி வாங்கி கொண்டார் உதயநிதி. இவர்கள் எல்லாம் தற்போது கூட்டணியில் இருப்பவர்கள் என்றாலும், மூத்த தலைவர் கி.வீரமணியையும் மறக்காமல் சென்று பார்த்து ஆசி வாங்கினார்.. அதுபோலவே ஆற்காடு வீராசாமி, அன்பழகன் போன்றோர் வீடுகளுக்கும் சென்றார்.

விஜயகாந்த்
இதில் ஹைலைட் என்னவென்றால், திமுகவை தாறுமாறாக விமர்சித்த எதிர்க்கட்சி தலைவர்களைதான் உதயநிதி முதலில் சென்று சந்தித்தார்.. அதிலும் பிரேமலதாவும், விஜயபிரபாகரனும் இந்த 2 வருடங்களாக திமுகவை பேசாத பேச்சில்லை.. கேட்காத கேள்வி இல்லை.. விமர்சிக்காத வார்த்தைகள் இல்லை.. எனினும் எதையும் மனசில் வைத்து கொள்ளாமல் உதயநிதி, விஜயகாந்த் வீட்டில் நடந்து கொண்ட அணுகுமுறை அந்த வீட்டில் உள்ள அனைவருக்குமே ஆச்சரியத்தை ஏற்படுத்தியது.

முதல்வர் ஸ்டாலின்
அதுபோலவே இப்போதும் ஒரு சம்பவம் நடந்துள்ளது.. எம்எல்ஏவாக பதவியேற்று கொண்ட உதயநிதி, சட்டசபைக்குள் நுழைந்தார்.. அப்போது ஒரு வரிசையில் திமுக உறுப்பினர்களும், எதிர்புறத்தில் அதிமுக உறுப்பினர்களும் உள்ளனர்.. திமுகவினர் முதல் பெஞ்சில் முதல்வர் ஸ்டாலின் உட்பட மூத்த தலைவர்கள் உட்கார்ந்துள்ளனர்.. எதிர்புறம் முதல் பெஞ்சில் எடப்பாடி பழனிசாமி, ஓபிஎஸ் உள்ளிட்டோர் உட்கார்ந்துள்ளனர்.

ஓபிஎஸ்
அப்போது உள்ளே நுழைகிறார் உதயநிதி.. திமுக பக்கம் திரும்பாமல், அதிமுகவினர் இருக்கை பக்கம் திரும்பி, ஓபிஎஸ்ஸுக்கும், எடப்பாடி பழனிசாமிக்கும் வணக்கம் சொல்கிறார்.. இதை பார்த்ததும் ஓபிஎஸ் டக்கென கையெடுத்து பதில் வணக்கம் உதயநிதிக்கு வைக்கிறார்.. ஆனால், எடப்பாடி பழனிசாமி அமைதியாக உதயநிதியை பார்க்கிறார்.. பதில் வணக்கம் எதுவும் சொல்லவில்லை.

ஸ்டாலின்
இந்த நேரத்தில் ஒரு விஷயம் நினைவுக்கு வருகிறது.. எடப்பாடி பழனிசாமி பிரச்சாரம் செய்யும்போது, உதயநிதியை திட்டி கொண்டே இருந்தார்.. ஒரு கூட்டத்தில் பேசும்போது, "பெண்களை அப்படி பேசிட்டு வர்றாரே உதயநிதி, அவரை ஸ்டாலின் கண்டிக்க மாட்டாரா? திமுக ஆட்சிக்கு வரும் என்று மிரட்டுகிறாரே.. ஆட்சியில் இல்லாத போதே இப்படி காவல் துறையை மிரட்டுகிறாரே, வந்தால்? திமுக ஆட்சிக்கு வந்தால் ரவுடி ஆட்சியாக மாறிவிடும்.. உதயநிதியை, ஸ்டாலின் கண்டித்து வைக்க வேண்டும்" என்று கூறியிருந்தார்.

திமுக
இப்போது விஷயம் என்னவென்றால், உதயநிதி எடப்பாடி பழனிசாமிக்கு வணக்கம் வைக்கும் இந்த போட்டோவை சோஷியல் மீடியாவில் திமுகவினர் பதிவிட்டு வருகின்றனர்.. அத்துடன் "இது போதுமா, இல்ல இன்னும் வேணுமா?" என்று கேள்வியையும் சேர்த்தே எழுப்பி வருகின்றனர்..!
-
அறிவாலயத்தை உலுக்கிய ஆய்வுக்குழு! சேகர்பாபு மீது அடுக்கப்பட்ட குற்றச்சாட்டுகள்.. டென்ஷனில் ஸ்டாலின்! -
விஜய்யை கணிக்கல.. முதுகில் குத்திருக்காங்க.. திமுக தோல்விக்கு காரணம்.. ஸ்டாலின் மேஜையில் ரிப்போர்ட் -
காவிரி நீரை கொண்டு வருவாரா விஜய்.. தண்ணீருக்கு வழியில்லாமல் குறுவை தொகுப்பா.. திமுக சரமாரி கேள்வி -
ஸ்லீப்லெஸ் நைட் யாருக்குனு தெரியுமா.. மின்வெட்டு பரிதாபங்கள்.. தவெகவை வெளுக்கும் மீம்ஸ்! -
சிபிஐ எந்த கூட்டணியிலும் இல்லை.. தவெகவுக்கு எதிராக போராட்டத்தை அறிவித்த வீரபாண்டியன்! -
சொந்த கட்சிக்கு எதிராக சீறிய சென்னை மாநகராட்சி கவுனசிலர் மணிகண்டன்.. பின்னணியில் தவெக? -
இந்தியா கூட்டணியில் இருந்து திமுக விலகுவதாக மு.க ஸ்டாலின் என்னிடம் கூறவில்லை - காங்கிரஸ் ப.சிதம்பரம் -
அதிமுகவில் பலரும் தவெகவிற்கு தாவும் நிலையில்.. திமுகவில் இருந்து ஏன் போகவில்லை? -
அதிமுகவில் அடுத்த விக்கெட்! திமுகவில் இணைந்த முன்னாள் அமைச்சர் பெஞ்சமின்! -
திமுகவில் செய்ய வேண்டிய மாற்றங்கள்.. வீரமணி வெளியிட்ட அழுத்தமான பதிவு -
பிரதான எதிர்க்கட்சி முதல் 2 எம்.எல்.ஏக்கள் வரை.. இதுவரை தமிழ்நாட்டில் சிபிஐ அமைத்த கூட்டணிகள் லிஸ்ட் -
ஸ்ரீவைகுண்டம் தவெக எம்எல்ஏ சரவணனை கட்சியில் இருந்து நீக்க வேண்டும்.. உதயநிதி ஸ்டாலின் வலியுறுத்தல்












Click it and Unblock the Notifications