ஆரம்பமே அசத்தல்.. ஒருபக்கம் ஸ்டாலின்.. மறுபக்கம் உதயநிதி.. "நீட்தேர்வு".. கவனத்தை ஈர்த்த 2 விஷயங்கள்
உதயநிதி ஸ்டாலின் சட்டப்பேரவையில் இன்று முதல்முறையாக உரையாற்றினார்
சென்னை: அனைவரும் ஒருங்கிணைந்து செயல்பட்டு நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்று சட்டப்பேரவையில் உதயநிதி ஸ்டாலின் முதல் முறையாக பேசியுள்ளார்... அத்துடன் அரியலூர் அரசு மருத்துவ கல்லூரிக்கு, அனிதாவின் பெயரை சூட்ட வேண்டும் என்றும் ஒரு கோரிக்கை விடுத்துள்ளார்.
கடந்த எம்பி தேர்தலின்போதும்சரி, நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலின்போதும் சரி, அனிதாவின் பெயரை தமிழகமெங்கும் உச்சரித்தே வந்தவர் உதயநிதி ஸ்டாலின்.
"அனிதாவை ஞாபகம் இருக்கா? அனிதாவை கொன்றவர்கள்தான் மோடி, இபிஎஸ், ஓபிஎஸ்.. இவங்களுக்கு தண்டனை வேண்டுமா? வேண்டாமா?" என்று பகிரங்கமாகவே பொதுமக்களிடம் கேள்வி எழுப்பினார்.. டாக்டராக வேண்டிய அனிதா மரணமடைந்து விட்டார்... அதற்கு காரணமாக இருந்த எடப்பாடி பழனிசாமிக்கு டாக்டர் பட்டமா? என்றும் ஓபனாக அட்டாக் செய்தார்.

அனிதா
அதுமட்டுமல்ல, அரியலூர் எப்போது சென்றாலும் சரி, செந்துறையை அடுத்த குழுமூரில் அனிதாவின் நினைவு நூலகத்திற்கு சென்று, அங்கு அனிதாவின் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்துவார்.. மேலும், தனக்கு அன்பளிப்பாக வழங்கப்பட்ட புத்தகங்களை அனிதா நினைவு நூலகத்துக்கு தினசரி வரும் மாணவர்களுக்கு பரிசாகவும் வழங்குவார்.. அந்த நூலகத்திற்கு அருகில் ஒருமுறை தென்னங்கற்றையும் நட்டுவிட்டு வந்தார்.

நூலகம்
ஓரிரு முறை அனிதாவின் வீட்டுக்கும் சென்றுவந்து ஒரு ட்வீட் பதிவிட்டிருந்தார்.. அதில், "தலையைத் தட்டும் தாழ்வான ஓட்டு வீடு.. இன்றும் அப்படியே உள்ளது அனிதாவின் வீடு... அதன் அருகிலேயே நேர்த்தியாக கட்டப்பட்டுள்ள அவரின் பெயரிலான நூலகம். அனிதாவின் லட்சியம்தான் நிறைவேறவில்லை. பல அனிதாக்களை உருவாக்கும் அவரின் குடும்பத்தாரின் லட்சியம் நிறைவேறட்டும்.. நானும் துணை நிற்பேன்'' என்று உணர்வுபெருக்குடன் உதயநிதி கூறியிருந்தார்.

திமுக
சில தினங்களுக்கு முன்பு, திமுக அரசு ஆட்சி பொறுப்பேற்ற புதிதில் மறுபடியும் நீட் தேர்வு விவகாரம் தமிழகத்தில் தலைதூக்கியது.. நீட் தேர்வை ஆட்சிக்கு வந்ததும் ரத்து செய்துவிடுவோம் என்று சொன்ன திமுக, அதிமுக அரசால் கொண்டுவரப்பட்ட நீட் பயிற்சி மையங்களை தொடர்ந்து நடத்த போவதாக ஒரு அறிவிப்பு வெளியானது, மிகப்பெரிய விவாதமாகவே உருவெடுத்தது.

பாஜக
அதிமுக, பாமக போன்ற கட்சிகள் இதை சுட்டிக்காட்டியே வந்தாலும், பாஜகவும் தன் பங்குக்கு இந்த விவகாரத்தை விமர்சித்தது.. நீட் தேர்வுக்கு ஆதரவாக பேசிய நடிகர் சூர்யாவை கூட பாஜக விட்டு வைக்கவில்லை... இந்த சூழலில்தான் அமைச்சர் அன்பில் மகேஷ் ஒரு பேட்டி தந்தார். அதில், "தமிழகத்தில் எந்த காலகட்டத்திலும் நீட் தேர்வை நுழைய விடமாட்டோம். வருகின்ற பட்ஜெட் கூட்டத்தொடரின்போது முதல்வர், நீட் குறித்து முக்கிய முடிவுகளை அறிவிப்பார்" என்று நம்பிக்கை வார்த்தைகளை கூறினாலும், அதற்கான அர்த்தம் அப்போது முழுமையாக புரியவில்லை..

அன்பில் மகேஷ்
அன்பில் மகேஷ் பேட்டி தந்த மறுநாளே, அனிதாவின் சகோதரர், உதயநிதியை தனது குடும்பத்துடன் சந்தித்து பேசினார்.. சொந்தஊரில் அனிதாவின் பெயரில் இயங்கி வரும் நூலகத்தை திறன் மேம்பாட்டு மையமாக தரம் உயர்த்த கோரி வேண்டுகோள் விடுப்பதற்காகவே அனிதாவின் சகோதரர் தன்னை நேரில் சந்தித்தார் என்று உதயநிதியே இந்த சந்திப்பு குறித்து தெரிவித்திருந்தார்.

சட்டமுன்வடிவு தாக்கல்
இப்படிப்பட்ட சூழலில்தான், 2 விதமான சம்பவங்கள் இன்றைய பட்ஜெட் கூட்டத்தொடரில் நடந்துள்ளது.. முதலாவதாக, நீட் தேர்வுக்கு விலக்கு கோரும் மசோதா, பட்ஜெட் கூட்டத்தொடரிலேயே கொண்டு வரப்படும் என்று முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளது முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.. நீட் தேர்வின் பாதிப்பு குறித்து ஆராய்ந்த குழுவின் அறிக்கையை பரிசீலித்து சட்டமுன் வடிவு தாக்கல் செய்யப்படும் என்றும், நீட் தேர்வில் இருந்து விலக்கு பெறுவதில் தமிழ்நாடு அரசு உறுதியாக உள்ளது என்றும் ஸ்டாலின் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
Recommended Video

வெளிநடப்பு
அடுத்ததாக, உதயநிதி ஸ்டாலின் தன்னுடைய முதல் பேச்சை இன்று பேரவையில் பேசியுள்ளார்.. அதிமுகவினர் வெளிநடப்பு செய்ததுமே, உதயநிதி தன்னுடைய உரையை தொடங்கினார்.. அதில், "நாட்டிற்கு முன் மாதிரியாக பெட்ரோல் விலை குறைக்கப்பட்டுள்ளது... பெரியார் நெஞ்சில் தைத்த முள் நீக்குவதற்காக அனைத்து சாதியினரும் அர்ச்சகராகும் திட்டம் உள்ளிட்ட எண்ணற்ற திட்டங்களை இந்த அரசு நிறைவேற்றி வருகிறது. உயர்கல்வியை பொறுத்தவரையில் இந்த வருடம் 10 கல்லூரிகள் திறக்கப்படவுள்ளன. மக்களை தேடி மருத்துவம் திட்டம் சிறப்பான முறையில் செயல்பட்டு வருகிறது. இதன் மூலம் மற்ற மாநிலங்களுக்கு தமிழ்நாடு முன்மாதிரியாக திகழும்.

மாணவிகள்
தமிழ்நாட்டின் தலையான பிரச்சனை நீட், அனிதா தொடங்கி பல மாணவிகள் நீட் தேர்வால் தற்கொலை செய்துள்ளனர்.. சுபஷிரி, மோதிலால், ஆதித்யா, கீர்த்தனா என 16 மாணவர்கள் நீட் தேர்வால் தற்கொலை செய்து கொண்டுள்ளனர்... கலைஞர், ஜெயலலிதா ஆட்சிகாலத்தில் வராத நீட் தேர்வு கடந்த ஆட்சிகாலத்தில் தான் கொண்டுவரப்பட்டது. கடந்த ஆட்சியின் நிர்வாக சீர்கேட்டால் நீட் தேர்வு வந்தது... ஆனால் திமுக ஆட்சியில் ராஜன் தலைமையில் குழு அமைத்து கருத்து கேட்கப்பட்டுள்ளது.

நீட் தேர்வு
நீட் தேர்வு கட்சி பேதமின்றி அனைத்து தரப்பு மக்களையும் பாதிக்கிறது, அனைத்து கட்சியினரும் பாதிக்கப்படுகின்றனர்... அதனால், நாம் அனைவரும் ஒருங்கிணைந்து செயல்பட்டு நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும்.. நீட் தேர்வு ரத்து என்பதை ஒரு இயக்கமாக முன்னெடுத்து சென்று அதனை ரத்து செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்...!

பெயர்
எல்லாரும் சேர்ந்து நீட் தேர்வுக்கு எதிராக குரல் கொடுப்போம்.. நீட் ஒழிப்பு போராளி அனிதா பெயரை அரசு மருத்துவ கல்லூரிக்கு அரியலூருக்கு சூட்ட வேண்டும்.. நீட் தேர்வுக்கு எதிராக நடைபெற்ற போராட்டத்தில் போடப்பட்ட வழக்குகளை வாபஸ் பெற வேண்டும்" என்று 2 விதமான கோரிக்கைகளை விடுத்து உதயநிதி ஸ்டாலின் இன்று பேசியிருந்தார். ஆரம்பம் முதல் இப்போது வரை தொடர்ந்து நீட் மற்றும் அனிதா விஷயத்தில் உதயநிதி அக்கறை காட்டி வருவதும், முதன்முதலாக பேரவையில் ஆற்றிய உரையில் 2 விதமான கோரிக்கைகளை முன்வைத்ததும் முக்கிய கவனத்தை பெற்று வருகிறது.
-
ஒரே நாளில் 4 கட்சிகளுக்கு தொகுதிகள் ஒதுக்கீடு.. திமுக கூட்டணியில் சீட் ஷேரிங் ஓவர்! -
கமல்ஹாசனின் மநீம தேர்தலில் போட்டியிட வேண்டும்.. ஸ்டாலினுக்கு வேண்டுகோள் வைத்த திருமாவளவன்! -
0.43% பிரேமலதாவுக்கு 10+1..3% கமலுக்கு 0! இன்னொரு மதிமுக மநீம? நீங்க சினிமாவுக்கே போயிருங்க ஆண்டவரே! -
மகளிர் உரிமைத்தொகை ரூ.3,000.. கல்வி கடன் தள்ளுபடி.. ராமதாஸ் வெளியிட்ட தேர்தல் வாக்குறுதிகள்! -
அன்று 3 சீட்டை திருப்பி தந்த சரத்.. இன்று மொத்த சீட்டையும் விட்டு தந்த கமல் - டார்ச் லைட் பவர் என்ன? -
உடையும் கூட்டணி? திமுக முதுகில் குத்திய காங்கிரஸ்! நேருக்கு நேர் தோழமைகளுடன் மோதும் கதர் தலைகள்? -
ஆக்டிவ் மோடில் ஸ்டாலின்.. கையில் எடுத்த பிரச்சார ஆயுதம்.. 2021 தேர்தலில் திமுக போட்ட பக்கா ஸ்கெட்ச் -
ஸ்டாலின் VS எடப்பாடி VS விஜய்.. எந்தெந்த ஜாதியினர் யாருக்கு ஆதரவு! News 18 சர்வே ரிசல்ட் இதோ -
எல்லா சின்னமும் நம்ம சின்னம் தான்.. தவிடுபொடியான சதிகாரர்களின் எண்ணங்கள்! ஸ்டாலின் போட்ட ஆர்டர்! -
இரட்டை என்ஜின் சர்க்கார்.. ‘ஓபிஎஸ் - இபிஎஸ்’அணி சந்தித்த கடைசி தேர்தல் - 2021 ரீவைண்ட்! -
தேர்தல் நேரத்தில் கிளம்பிய பூதம்.. ரூ.4 கோடி பிடிபட்ட வழக்கில் நயினார் நாகேந்திரனை ED விசாரிக்க மனு! -
திமுக கூட்டணியில் அடுத்த விக்கெட்? தனியரசு விலக முடிவு.. அதிருப்தியின் பின்னணி











Click it and Unblock the Notifications