ஸ்டாலின் 6.. கனிமொழி கையில் எடுத்த மேஜிக்.. தேர்தல் போக்கையே மாற்றும் அந்த 6 வாக்குறுதிகள்?
சென்னை: தமிழக அரசியல் களம் இப்போது பரபரப்பின் உச்சத்தில் இருக்கிறது. தேர்தல் ஜுரம் உச்சத்தில் இருக்கும் வேளையில், ஆளுங்கட்சியான திமுகவின் 'ஸ்டாலின்-6' (Stalin-6) என்ற புதிய வாக்குறுதி, தமிழகத்தின் மூலை முடுக்கெல்லாம் இப்போதே பேசுபொருளாகிவிட்டது.
"வெறும் வார்த்தைகள் அல்ல, இவை மக்கள் வாழ்வை உயர்த்தும் ஆறு படிகள்" எனச் சொல்லி கோதாவில் இறங்கியிருக்கிறார் முதல்வர் மு.க.ஸ்டாலின். குடும்பத்தலைவிகள் முதல் கல்லூரி மாணவர்கள் வரை, விவசாயி முதல் கார்ப்பரேட் இளைஞர்கள் வரை என சகல தரப்பையும் குறிவைத்து சுழற்றியடிக்கிறது இந்த 'சிக்ஸர்' திட்டம்.

1. குடும்பங்களுக்கு
₹8,000 இல்லத்தரசி கூப்பன்: வாஷிங் மெஷின், டிவி, பிரிட்ஜ், மிக்ஸி, மைக்ரோவேவ் மற்றும் இண்டக்ஷன் அடுப்பு போன்ற வீட்டு உபயோகப் பொருட்களைத் தேர்ந்தெடுத்து வாங்க பெண்களுக்கு இந்த கூப்பன் வழங்கப்படும்.
₹10 லட்சம் வரை இலவச மருத்துவம்: அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் இலவச சிகிச்சை. ஆண்டு வருமானம் ₹5 லட்சம் வரை உள்ள குடும்பங்களுக்கும் இது விரிவுபடுத்தப்பட்டுள்ளது.
₹2,000 மாத ஓய்வூதியம்: முதியவர்கள், விதவைகள் மற்றும் 50 வயதிற்கு மேற்பட்ட திருமணமாகாத பெண்களுக்கு வழங்கப்படும்.
மாற்றுத்திறனாளிகளுக்கு ஆதரவு: மாதம் ₹2,500 ஓய்வூதியம் மற்றும் கடுமையாக பாதிக்கப்பட்ட நபர்களுக்கு ₹4,000 பராமரிப்பு உதவித்தொகை.
2. இளைஞர்களுக்கு
5 லட்சம் இளைஞர்களுக்குத் திறன் பயிற்சி: 'நான் முதல்வன்' திட்டத்தின் கீழ் பயிற்சி. 6 மாதப் பயிற்சியின் போது மாதம் ₹1,500 ஊக்கத்தொகை வழங்கப்படும்.
5 ஆண்டுகளில் 50 லட்சம் வேலைவாய்ப்புகள்: ₹18 லட்சம் கோடி வெளிநாட்டு முதலீடுகள் மூலம் இந்த இலக்கு எட்டப்படும்.
மாணவர்களுக்கு ₹1,500 மாத உதவித்தொகை: 'புதுமைப் பெண்' மற்றும் 'தமிழ்ப் புதல்வன்' திட்டங்களின் கீழ் இது வழங்கப்படும்.
35 லட்சம் இலவச லேப்டாப்கள்: அனைத்துக் கல்லூரி மாணவர்களுக்கும் வழங்கப்படும்.
3. பெண்களுக்கு
பெண்களுக்கு ₹2,000: 'கலைஞர் மகளிர் உரிமைத் தொகை' திட்டத்தின் கீழ் வழங்கப்படும். ஒவ்வொரு ஆண்டும் புதிய தகுதியுள்ள பெண்கள் இதில் சேர்க்கப்படுவார்கள்.
இலவச பேருந்து பயணம் தொடரும்: 'விடியல் பயணம்' திட்டத்தின் கீழ் பெண்களுக்கு இலவச பயணம்.
காலை உணவுத் திட்டம் விரிவாக்கம்: இப்போது 8-ஆம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கும் இத்திட்டம் விரிவுபடுத்தப்பட்டுள்ளது.
4. விவசாயிகளுக்கு
இலவச நவீன மின் மோட்டார் பம்புகள்: 20 லட்சத்திற்கும் அதிகமான விவசாயிகளுக்கு (மீட்டர்கள் இன்றி) வழங்கப்படும்.
உயர்த்தப்பட்ட ஆதார விலை (MSP):
நெல் → குவிண்டாலுக்கு ₹3,500.
கரும்பு → டன்னுக்கு ₹4,500.
5. இருப்பிடம் மற்றும் உள்கட்டமைப்பு
10 லட்சம் கான்கிரீட் வீடுகள்: 2030-க்குள் குடிசைகள் இல்லாத தமிழ்நாட்டை உருவாக்குவதை நோக்கமாகக் கொண்டது.
₹10,000 கோடி ஊரக சாலைத் திட்டம்: சிசி சாலைகள், நடைபாதைகள், பூங்காக்கள் மற்றும் பசுமைப் போர்வை போன்ற நகர்ப்புற மேம்பாடுகளும் இதில் அடங்கும்.
4 எதிர்கால உலகளாவிய நகரங்கள்: கோவை, சேலம், மதுரை மற்றும் திருச்சி ஆகிய நகரங்களில் உலகத்தரம் வாய்ந்த வளர்ச்சி.
50 செம்மொழிப் பூங்காக்கள்: தமிழ்நாடு முழுவதும் நகர்ப்புற பசுமைப் பூங்காக்கள் அமைக்கப்படும்.
6. நிர்வாகம்
"உங்க கனவ சொல்லுங்க": மக்களின் கனவுகள்/கோரிக்கைகள் பதிவு செய்யப்பட்டு முன்னுரிமை அடிப்படையில் நிறைவேற்றப்படும்.
மக்களிடம் வரும் நிர்வாகம்: 'உங்களுடன் ஸ்டாலின்' மற்றும் 'நலம் காக்கும் ஸ்டாலின்' முகாம்கள் மூலம் வீட்டு வாசலுக்கே அரசு சேவைகள்.
ஒரே விண்ணப்பம் : 1,000 சேவைகள்: தடையற்ற மற்றும் எளிதான அரசு சேவை அணுகல் என்று 6 முக்கியமான திட்டங்கள் அறிவிக்கப்பட்டு உள்ளன.
-
"திமுககாரன்னா திமிர் இருக்கணும்".. காரணம் சொல்லி ‘ஜென் ஸி' மீட்டப்பில் பேசிய டிஆர்பி ராஜா -
குதிரை பேரம் இல்லை, கற்பனை! அதிமுகவை தவெக உடைத்ததா? விஜய்க்கு ஆதரவாக ஐயுஎம்எல் காதர் மொய்தீன் பேச்சு -
எல்லா பிரச்சனைக்கும் நான் காரணமா.. வாடகை பேச்சாளர்கள் இப்ப பேசுங்க.. வரிந்து கட்டிய லீமாரோஸ் -
என்னப்பா அங்க சத்தம்.. ஆக்ஷனில் இறங்கிய ’ஷா’! சரண்டரான அதிமுக தலைகள்! பஞ்சாயத்து முடிந்தது எப்படி? -
பனையூருக்கு பறக்கும் ராயப்பேட்டை எக்ஸ்பிரஸ்.. அடுத்தடுத்து தாவும் அதிமுக தலைகள்! சரிந்த ஜெ. கோட்டை! -
எடப்பாடி பழிவாங்குவார்.. ஜூட் விட ரெடியான விஜயபாஸ்கர்.. நேரம் எடுத்துக்கொள்ளும் சிவி சண்முகம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
திமுகவில் இருந்து தூக்கலாம்! மோடியை பார்த்ததும் புது தெம்பில் விஜய்! ஆதவ் அர்ஜுனாவுடன் அவசர மீட்டிங் -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
விஜய்க்கு விஷப் பரிட்சை..திமுகவுக்கு அக்னி பரிட்சை! இடைத் தேர்தலுக்கு ரெடியான கழகங்கள்! அதிமுக அமைதி -
அதிமுகவில் அடுத்தடுத்து 2 விக்கெட்.. மாஜி எம்எல்ஏக்கள் 2 பேர் தவெகவில் ஐக்கியம்.. யார் இவர்கள்? -
குடும்பத்தினருடன் குடகு மலைக்குச் சென்ற திமுக தலைவர் ஸ்டாலின்.. கூட யார் யார்லாம் பாருங்க!












Click it and Unblock the Notifications