உள்ளாட்சி தேர்தல் போட்டியிட இருந்த.. திமுக வேட்பாளர் வெட்டிப் படுகொலை! சென்னையில் பயங்கரம்
சென்னை: நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் பணிகள் விறுவிறுப்பாக நடந்து வரும் சூழலில் மடிப்பாக்கம் திமுக வட்ட செயலாளர் செல்வம் வெட்டி கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை மடிப்பாக்கம் பகுதியில் ரியல் எஸ்டேட் தொழில் செய்து வந்தவர் செல்வம். இவர் அப்பகுதியின் திமுக வட்டச் செயலாளராகவும் உள்ளார். விரைவில் நடைபெறும் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் 188ஆவது வட்டத்தில் திமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளராக இவர் அறிவிக்கப்பட்டிருந்தார்.

மடிப்பாக்கம் ராம் நகரில் உள்ள இவரது வீட்டிற்கு இரவு 9 மணியளவில் சிலர் மாலையுடன் வந்துள்ளனர். அவர்கள் செல்வத்தை வாழ்த்த வந்ததாக அனைவரும் கருதினர்.
அவர்களைச் செல்வம் வரவேற்கச் சென்றபோது, திடீரென அவர்கள் மறைத்து வைத்திருந்த அரிவாள் உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களை வெளியே எடுத்து செல்வத்தை சரமாரியா வெட்டியுள்ளனர்.
இதில் படுகாயமடைந்த செல்வம் அங்கேயே ரத்த வெள்ளத்தில் சரிந்தார். இதைக் கண்டு அதிர்ச்சி அடைந்த செல்வத்தின் ஆதரவாளர்கள் அவரை மீட்டு உடனடியாக அருகே உள்ள மருத்துவமனையில் அட்மிட் செய்துள்ளனர். அவரை பரிசோதித்த மருத்துவர்கள் செல்வம் உயிரிழந்துவிட்டதாகத் தெரிவித்தனர்.
இந்தச் சம்பவம் தொடர்பான தகவல் கிடைத்ததும் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் விசாரணையைத் தொடங்கியுள்ளனர். இது படுகொலை தொழில் போட்டியால் நடத்தப்பட்டதா அல்லது அரசியல் காரணங்களாக நடத்தப்பட்டதா என்பது குறித்து போலீசார் தங்கள் விசாரணையைத் தொடங்கியுள்ளனர்.
கடந்த சில நாட்களுக்கு முன் திருநெல்வேலி மாநகர 38வது வார்டு திமுக செயலாளராக உள்ள பொன்னு தாஸ் என்ற அபே மணி இரவு 11 மணியளவில் பாளையங்கோட்டை போலீஸ் நிலையம் அருகிலேயே வெட்டி படுகொலை செய்யப்பட்டிருந்தார்,
நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் நெருங்கும் நிலையில், இப்படி அடுத்தடுத்து நடைபெறும் கொலைகள் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
-
வள்ளுவருக்கு காவி சாயம்.. பதிலளிக்காமல் சென்ற அமைச்சர் செங்கோட்டையன்! வெடிக்கும் விமர்சனம் -
ஆம்னி பஸ் மாதிரியே.. சென்னைக்கு வரும் விமானங்களில் கட்டணம் 3 மடங்கு உயர்வு! மக்கள் ஷாக் -
சென்னை மெரினாவில் குதிரை சவாரி சென்ற 6 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை! குதிரை ஓட்டி போக்சோவில் கைது -
சென்னை புதிய ஆட்சியர் எஸ். மாலதி ஹெலன் IAS.. விஜய் களமிறக்கிய மாஸ்டர்மைண்ட்.. யார் இவர்? -
தாய் இறந்த துக்கத்திலும்! பாதுகாப்பு கொடுத்த போலீஸாருக்கு கையெடுத்து கும்பிட்டு நன்றி சொன்ன அஜித் -
10 மாதம் சுமந்த தாய் மோகினியின் உடலை! பெசன்ட் நகர் மின்மயானத்தில் சுமந்த அஜித்! முகம் முழுக்க சோகம் -
சென்னை கோயம்பேடு பாரில் டான்ஸ் ஆடும் போது தகராறு: கார் ஏற்றி இளம்பெண் கொலை! 6 பேர் கைது! பரபர தகவல் -
விஜய்-க்கு புது சவால்.. 13 மாசமாச்சு.. சென்னை ஏர்போர்ட் - கிளாம்பாக்கம் மெட்ரோ திட்டத்தை மறந்த மத்திய அரசு! -
வீட்டில் தனியாக இருந்த 2 பெண்களிடம் அத்துமீற முயன்ற வடமாநில நபர் கொலை.. திருவள்ளூர் அருகே ஷாக்! -
தனிப்படை போலீசாருக்கு மீன் வறுவல் போட்டு கொடுத்த கொலையாளி! கடலூரில் அடுத்த நொடி நடந்த ட்விஸ்ட் -
கையில் கத்தி.. பெட்ரோல் பங்க் ஊழியர்களை கொலைவெறியோடு தாக்கிய கும்பல்.. தூத்துக்குடியில் பயங்கரம்! -
"10 வயது குழந்தையை கொன்னுட்டீயே.." கோவை சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளியை தாக்கிய சக கைதிகள்?












Click it and Unblock the Notifications