விசிக - திமுக கூட்டணி தொடருமா? அறிவாலயம் செல்லாத திருமாவளவன்.. இதுதான் காரணமா? பரபர பின்னணி
சென்னை: நாடாளுமன்றத் தேர்தலில் திமுக- விடுதலைச் சிறுத்தைகள் கட்சி இடையே நேற்றைய தினம் தொகுதி பங்கீடுக்கான ஒப்பந்தம் கையெழுத்தாகும் என தெரிவித்த நிலையில் கட்சித் தலைவர் திருமாவளவன் பேச்சுவார்த்தைக்காக அண்ணா அறிவாலயம் செல்லவில்லை என தகவல்கள் கூறுகின்றன.
நாடாளுமன்றத் தேர்தல் தேதி மார்ச் முதல் வாரத்தில் அறிவிக்கப்படும் நிலையில் அரசியல் கட்சிகள் எல்லாம் தொகுதி பங்கீடுகள், கூட்டணி என படுபிஸியாக இருந்து வருகின்றன.

இந்த நிலையில் திமுக கூட்டணியில் இடம் பெற்றுள்ள விடுதலைச் சிறுத்தைகள் கட்சி இந்த முறை 3 தனித் தொகுதிகளையும் ஒரு பொதுத் தொகுதியையும் ஒதுக்குமாறு கேட்டு வருவதாக தெரிகிறது.
2 இடங்கள்தான்: கடந்த 2019ஆம் ஆண்டு நடந்த நாடாளுமன்றத் தேர்தலில் அக்கட்சிக்கு 2 இடங்களை திமுக ஒதுக்கியது. அதில் சிதம்பரத்தில் பானை சின்னத்தில் தொல் திருமாவளவன் போட்டியிட்டு வென்றார். அது போல் அக்கட்சியை சேர்ந்த ரவிக்குமார் விழுப்புரம் தனி தொகுதியில் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்டு வென்றார்.
கடந்த முறை பானை சின்னத்தில் போட்டியிட்டு வென்ற திருமாவளவன் தற்போது தொகுதி மாறுவார் என சொல்லப்பட்டு வந்தது. இந்த நிலையில் அவர் சிதம்பரம் தொகுதியிலேயே போட்டியிடுவேன் என அறிவித்துள்ளார். ஏற்கெனவே கொங்கு மக்கள் தேசிய கட்சி மற்றும் இந்திய முஸ்லீம் யூனியன் லீக் ஆகிய கட்சிகளுக்கு தொகுதிகள் முறையே நாமக்கல், ராமநாதபுரம் ஒதுக்கீடு செய்யப்பட்டுவிட்டது.
கூடுதல் தொகுதி: இந்த நிலையில் காங்கிரஸ், மார்க்சிஸ்ட்கள், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி ஆகிய கட்சிகளுடன் ஒப்பந்தம் போட வேண்டியது உள்ளது. இதில் காங்கிரஸ் கட்சியும் கம்யூனிஸ்ட் கட்சிகளும் கூடுதல் தொகுதிகளை எதிர்பார்ப்பதாக தெரிகிறது. இதனால் பேச்சுவார்த்தை தொடர்ந்து வருகிறது.
அது போல் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியும் சிதம்பரம், விழுப்புரம், காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய 4 தனி தொகுதிகளில் 3 தொகுதிகளையும், பெரம்பலூர், மயிலாடுதுறை ஆகிய பொதுத் தொகுதியில் ஒரு தொகுதியையும் என மொத்தம் 4 தொகுதிகளை கடந்த 12 ஆம் தேதி நடந்த முதல் கட்ட பேச்சுவார்த்தையின் போது கேட்டதாக தெரிகிறது.
விசிக பேச்சுவார்த்தை: ஆனால் திமுகவோ கடந்த 2019ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலுக்கு விடுதலைச் சிறுத்தைகள் கட்சிக்கு வழங்கியதை போல் இரு தொகுதிகளை கொடுக்க முன் வந்ததாக தெரிகிறது. இந்த நிலையில் இன்றைய தினம் இரண்டாம் கட்ட பேச்சுவார்த்தைக்காக திமுக சார்பில் அழைப்பு விடுக்கப்பட்டதால் நேற்று அண்ணா அறிவாலயத்தில் எம்பி திருமாவளவன் உள்ளிட்டோர் செல்வார்கள் என எதிர்பார்க்கப்பட்டது.
மேலும் நேற்றைய தினமே தொகுதி பங்கீடு, எத்தனை தொகுதிகள், எந்தெந்த தொகுதிகள் என்பது குறித்து இறுதி செய்யப்பட்டு திமுக- விடுதலை சிறுத்தைகள் கட்சி இடையே ஒப்பந்தம் கையெழுத்தாகும் என சொல்லப்பட்டது. ஆனால் இந்த பேச்சுவார்த்தைக்கு விடுதலைச் சிறுத்தைகள் கட்சி செல்லவில்லை என ஒரு தகவல் வெளியாகியுள்ளது.
விசிகவுக்கு எத்தனை தொகுதிகள்: திமுக தலைமை விசிகவுக்கு இரு தொகுதிகளை ஒதுக்க முன்வந்ததாக சொல்லப்படுகிறது. ஆனால் விசிகவோ 4 தொகுதிகளை கேட்டு பெற வேண்டும். இல்லாவிட்டால் குறைந்தது 3 தொகுதிகளையாவது பெற வேண்டும் என முடிவு செய்துள்ளது. இதனால்தான் பேச்சுவார்த்தை தாமதமாகிறது. திமுக அழைத்த பேச்சுவார்த்தைக்கு திருமாவளவன் ஏன் செல்லவில்லை என தெரியவில்லை.
ஒரு வேளை எல்லா கட்சிகளுடன் கூட்டணி பேச்சுவார்த்தை நடத்திவிட்டு பிறகு திமுக தலைமையிடம் பேசி 4 தொகுதியோ அல்லது 3 தொகுதியோ பெற்றுக் கொள்ளலாம் என்ற யோசனையில் இருப்பதாக சொல்லப்படுகிறது.
-
அக்கா எனும் அம்மா! பானுமதி இறப்பால் சுக்குநூறான திருமாவளவன்! கள்ளக்குறிச்சி வேட்பாளர் யார் தெரியுமா? -
திமுகவுக்கு மெஜாரிட்டி கிடைக்காதுன்னு திருமாவே நினைக்கிறாரா? வருத்தப்பட்ட ஸ்டாலின்.. என்னாச்சு? -
அசுர பலம்.. சட்டசபையில் நான் இருக்கணும்! திருமா முடிவு.. சட்டமன்ற தேர்தலில் போட்டியிட ரியல் காரணம் -
2026 தேர்தலுக்கு பின்.. அரசியலே மாறும்.. புதிர் போட்ட திருமா.. மாநில அரசியலுக்கு திரும்புவது ஏன்? -
Thirumavalavan: சிதம்பரம் இடைத்தேர்தல் செலவை திருமாவளவன் ஏற்பாரா? சீமான் கேள்வி -
திருமாவளவனின் புது கணக்கு.. விசிகவுக்கு பிரச்சனை! அங்கீகாரத்தை இழக்கும் கட்சி? என்ன நடக்குது? -
முடங்கும் துபாய், அபுதாபி! அடியோடு மங்கும் தங்கம் மார்க்கெட்! ஆடிப்போன இந்திய ஜுவல்லரி நிறுவனங்கள் -
மனைவி தனது பெற்றோரிடமிருந்து பெற்ற சொத்தில் கணவருக்கு உரிமை உண்டா? ஐகோர்ட் தீர்ப்பு முழு விவரம் -
இல்லத்தரசி கூப்பன் திட்டத்தில்.. நுணுக்கமான விஷயமே இதுதான்.. டிஆர்பி ராஜா சொன்ன சுவாரசிய தகவல் -
அண்ணாமலை போட்ட அந்த ஒரு கண்டிஷன்.. ஆடிப் போன டெல்லி மேலிடம்.. பிம்ப அரசியல் உடைகிறதா? இனி என்னாகும் -
ஆரம்பமே அலங்கோலம்.. பெரம்பூர் விஜய் பிரச்சாரத்தில் தவெகவினரால் அடுத்தடுத்து அசம்பாவிதம் -
Gold Price Today: தங்கம் விலை அதிரடியாக உயர்ந்தது.. காலையில் சரிந்து மாலையில் எகிறியது! நகை பிரியர்கள் கலக்கம்!












Click it and Unblock the Notifications