இன்னும் 2 நாள்தான் இருக்கு.. இறுக்கி பிடிக்கும் அதிமுக, திமுக.. செக் வைக்கும் "ஸ்விங்" தொகுதிகள்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழக சட்டசபை தேர்தல் பிரச்சாரம் முடிய இன்னும் 2 நாள்தான் இருக்கிறது. தமிழக அரசியல் கட்சிகள் இந்த கடைசி 2 நாளில் சரியாக திட்டமிட்டு, தீவிரமாக களப்பணி செய்தால் தேர்தல் முடிவுகளில் முக்கிய மாற்றங்களை ஏற்படுத்த முடியும்.

"ஸ்விங் தொகுதிகள்".. அமெரிக்க தேர்தல் தொடங்கி தமிழக சட்டசபை தேர்தல் வரை இந்த ஸ்விங் தொகுதிகள்தான் தேர்தல் முடிவுகளை மாற்ற கூடிய வல்லமை கொண்ட சக்திகளாக இருக்கின்றன. கடந்த அமெரிக்க அதிபர் தேர்தலிலும் கூட டிரம்பிற்கு செல்ல வேண்டிய சில மாகாணங்கள் ஸ்விங் ஆகி அப்படியே பிடனுக்கு சென்றது.

ஸ்விங் தொகுதிகள் என்றால் பாரம்பரியமாக ஒரு கட்சிக்கு வாக்களிக்கும் தொகுதிகள் திடீர் என்று வேறு கட்சிக்கு மாறி வாக்களிப்பது ஆகும். ஒரு தொகுதியில் இருக்கும் மக்கள் எப்போதும் வாக்களித்து வந்த கட்சிக்கு பதிலாக வேறு கட்சிக்கு வாக்களிப்பதான் ஸ்விங் ஆகும். தமிழக சட்டசபை தேர்தலிலும் இந்த முறை பல்வேறு தொகுதிகள் ஸ்விங் ஆகி வாய்ப்புகள் உள்ளன.

எப்படி

எப்படி

இந்த முறை தமிழக சட்டசபை தேர்தலில் நிறைய தொகுதிகள் ஸ்விங் ஆகும் என்று இதுவரை வெளியான கணிப்புகள் தெரிவித்துள்ளன. இதுவரை வெளியான பல்வேறு ஊடகங்களில் கருத்து கணிப்புகளின்படி நிறைய ஸ்விங் தொகுதிகள் இந்த முறை அதிமுகவிடம் இருந்து திமுகவிற்கு செல்கிறது. 2011 மற்றும் 2016ல் அதிமுக வென்ற தொகுதிகள் திமுக வசம் செல்ல வாய்ப்புள்ளது.

கணிப்பு

கணிப்பு

கருத்து கணிப்புகளின்படி 30+ தொகுதிகள் இதுபோல் ஸ்விங் ஆகும் என்று கணிக்கப்பட்டுள்ளது. முக்கியமாக கொங்கு மற்றும் மத்திய தமிழகத்தில் இருக்கும் பல தொகுதிகள் அதிமுகவிடம் இருந்து திமுக வசம் செல்ல வாய்ப்புகள் உள்ளன. அதேபோல் வடதமிழக தொகுதிகளும் அதிமுகவிடம் இருந்து ஸ்விங் ஆகி திமுக பக்கம் செல்லும் என்று கணிக்கப்பட்டுள்ளது.

ஏன்

ஏன்

இப்படி தொகுதிகள் ஸ்விங் ஆவதால்தான் கணிப்புகளில் எல்லாம் திமுக 150+ இடங்களை வெல்லும் என்றும் அதிமுக 70க்கும் குறைவான இடங்களை வெல்லும் என்றும் கூறப்படுகிறது. ஆனால் இதில் கவனிக்க வேண்டிய விஷயம் இந்த ஸ்விங் தொகுதிகளில் பெரிய அளவுக்கு திமுக அதிமுக இடையே வாக்கு வித்தியாசம் இருக்காது. பல்வேறு இடங்களில் திமுக, அதிமுக இடையே வெறும் 1% மட்டுமே வேறுபாடு காணப்படும் என்று கணிப்புகள் தெரிவிக்கின்றன.

வேறுபாடு

வேறுபாடு

முக்கியமாக கொங்கு மற்றும் வடதமிழகத்தில் திமுக, அதிமுக முன்னிலை வகிக்கும் தொகுதிகளில் வெறும் 1% மட்டுமே வேறுபாடு இருக்கலாம் என்று பல்வேறு தமிழ் ஊடக கருத்து கணிப்புகள் கூறுகின்றன . இந்த 1% வாக்குகளை கடைசி கட்ட பிரச்சாரம் மூலம் தங்கள் பக்கம் கட்சிகள் இழுக்க முடியும். திமுகவாக இருந்தாலும் சரி, அதிமுகவாக இருந்தாலும் சரி.. வீடு வீடான பிரச்சாரம், தெருமுனை கூட்டங்கள் மூலம் இது போன்ற வாக்குகளை கவர முடியும்.

முக்கியம்

முக்கியம்

முக்கியமாக தேர்தல் பிரச்சாரம் முடிய இன்னும் 2 நாள்தான் இருக்கிறது. இந்த 2 நாளில் சரியாக திட்டமிட்டு, தீவிரமாக களப்பணி செய்தால் ஸ்விங் தொகுதிகளை கைப்பற்ற முடியும். கடைசி கட்ட களப்பணி, நிர்வாகிகளின் தீவிர வாக்கு சேகரிப்பு முடிவுகளை மாற்றும்.

குழப்பம்

குழப்பம்

அதிமுகவிற்கு வாக்களிப்பதா, திமுகவிற்கு வாக்களிப்பதா என்று குழப்பத்தில் இருக்கும் தொகுதிகளின் தேர்தல் முடிவுகளை இந்த 2 நாட்கள்தான் தீர்மானிக்க போகிறார்கள். கடைசி இரண்டு நாள் பிரச்சாரத்தில் கட்சிகள் எப்படி தேர்தல் பணிகளை செய்ய போகிறது என்பதை பொறுத்தே இந்த தொகுதிகளில் முடிவுகள் அமையும். இதுதான் திமுக, அதிமுகவின் தலைவிதியை தீர்மானிக்கும் .

Recommended Video

    யார் அடுத்த முதல்வர்? |Junior Vikatan Opinion Poll 2021 | Oneindia Tamil
    பிரச்சாரம்

    பிரச்சாரம்


    2016 சட்டசபை தேர்தலில் பல்வேறு தொகுதிகள் கடைசி கட்டத்தில் ஸ்விங் ஆன காரணத்தால்தான் அதிமுக ஆட்சிக்கு வந்தது. அதேபோல் இந்த முறையும் தமிழக தேர்தலில் ஸ்விங் தொகுதிகள் பெரிய அளவில் ஆதிக்கம் செலுத்த போகிறது.

    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+