4 பக்க மோதல்.. குறுக்கே வந்த தேமுதிக.. "ஈரோட்டில்தான் இந்தியாவிலேயே அதிகமாம்".. பிரேமலதா பிளான்!
ஈரோடு கிழக்கில் 36 சதவிகிதம் செங்குந்த முதலியார்கள் இருக்கிறார்கள். 17 சதவிகிதம் மைனாரிட்டிகள் இருக்கிறார்கள். செங்குந்த முதலியார்கள்தான் இங்கு தீர்மானிக்கும் சக்தியாக இருக்கிறார்கள்.
சென்னை: ஈரோடு கிழக்கு சட்டசபை இடைத்தேர்தலில் தேமுதிக போட்டியிடுவது உறுதியாக உள்ள நிலையில் அந்த கட்சி எந்த அளவிற்கு வாக்குகளை பிரிக்கும் என்ற கேள்வி எழுந்துள்ளது. போட்டி நெருக்கமாக செல்லும் பட்சத்தில் தேமுதிக பிரிக்கும் வாக்குகள் தேர்தல் முடிவுகளை தீர்மானிக்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது.
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் தேமுதிக தனித்துப் போட்டியிடுவதாக அக்கட்சியின் பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் அறிவித்துள்ளார். அதேபோல் அக்கட்சியின் வேட்பாளராக ஈரோடு கிழக்கு மாவட்ட தேமுதிக செயலாளர் ஆனந்த் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்.
இதனால் ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் கிட்டத்தட்ட 4 முனை தேர்தலாக மாறி உள்ளது. இங்கே திமுக - காங்கிரஸ் கூட்டணி போட்டியிடுகிறது. அங்கே தீவிரமாக திமுக கூட்டணி தேர்தல் பணிகளை செய்து வருகிறது.

தேர்தல்
காங்கிரஸ் சார்பாக ஈவிகேஎஸ் இளங்கோவன் இங்கு வேட்பாளராக களமிறக்கப்பட்டு உள்ளார். இது ஒரு பக்கம் இருக்க இன்னொரு பக்கம் அதிமுக சார்பாக கேஎஸ் தென்னரசு இங்கு வேட்பாளராக களமிறக்கப்பட்டு இருக்கிறார். இவருக்கு இரட்டை இலை சின்னமும் கிடைத்துள்ளது. இதனால் அதிமுகவின் அதிகாரப்பூர்வ வேட்பாளராகவும் இவர் உருவெடுத்து இருக்கிறார். ஓ பன்னீர்செல்வம் தனது ஆதரவு வேட்பாளர் செந்தில், வேட்புமனுவை வாபஸ் வாங்க போவதாக அறிவித்துள்ளார். அதேபோல் பாஜகவும் அதிமுகவின் வேட்பாளருக்கு ஆதரவு அளிக்க போவதாக அறிவித்து உள்ளது.

அமமுக
இந்த தேர்தலில் போட்டியிடுவதில் இருந்து வாபஸ் வாங்குவதாக அமமுகவும் அறிவித்து உள்ளது. பதிவு செய்யப்பட்ட அரசியல் கட்சியான அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்திற்கு பொதுத்தேர்தல் காலங்களில் குக்கர் சின்னத்தை ஒதுக்கிய தேர்தல் ஆணையம், தற்போது இடைத்தேர்தல் காலங்களில் அவ்வாறு ஒதுக்கீடு செய்ய இயலாது என தெரிவித்துள்ளது.பாராளுமன்றப் பொதுத்தேர்தல் ஓராண்டு காலத்திற்குள் வரவிருக்கும் சூழலில், புதியதோர் சின்னத்தில் ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் போட்டியிடுவது தேவையில்லாத குழப்பத்தை ஏற்படுத்தக்கூடும். ஆகவே, வரவிருக்கிற பாராளுமன்றம் மற்றும் சட்டமன்றப் பொதுத்தேர்தல்களில் நமது வெற்றிச்சின்னமான குக்கர் சின்னத்தோடு தேர்தல்களை சந்திப்போம் என்று டிடிவி தினகரன் தரப்பும் அறிக்கையில் தெரிவித்து உள்ளார்.

தேமுதிக
இதனால் ஈரோடு கிழக்கு தற்போது நான்கு முனை தேர்தலாகி உள்ளது. ஒரு பக்கம் அதிமுக, இன்னொரு பக்கம் திமுக கூட்டணி, இன்னொரு பக்கம் தேமுதிக, மேலும் நாம் தமிழர் ஆகிய கட்சிகள் இங்கே போட்டியிட முடிவு உள்ளன. இதில் தேமுதிக அதிக கவனம் பெற்றுள்ளது. தேமுதிக தமிழ்நாடு அரசியலில் பெரிய வாக்கு வங்கியை கொண்டு இருக்கவில்லை என்றாலும் ஈரோடு கிழக்கில் தேமுதிகவுக்கு என்று பெரிய வாக்கு வங்கி உள்ளது. ஈரோடு கிழக்கு தொகுதி என்பது 2008 தொகுதி மறுவரையறையின் போதுதான் உருவாக்கப்பட்டது. அதன்பின் 2011, 2016, 2021 ஆகிய மூன்று சட்டசபை தேர்தல்களை இந்த தொகுதி சந்தித்து உள்ளது.

ஈரோடு கிழக்கு
2011 சட்டசபை தேர்தலில் அதிமுக கூட்டணியில் இருந்த தேமுதிக இங்கே போட்டியிட்டது. அதன் மூலம் தேமுதிக வேட்பாளர் சந்திரகுமார் இங்கே வென்றார். அதன்பின் 2011 சட்டசபை தேர்தலில் இங்கே அதிமுக வேட்பாளர் கே.எஸ் தென்னரசு வென்றார். அதிமுக ஆதரவு தொகுதி என்று பார்க்கப்பட்ட இந்த கோட்டையில் 2021ல் காங்கிரஸ் வேட்பளார் ஈவெரா திருமகன் திமுக கூட்டணியில் நின்று வென்றார் என்பது குறிப்பிடத்தக்கது. இங்கு முன்பே தேமுதிக வென்றுள்ளதால் இந்த தேர்தலில் என்ன மாதிரியான பாதிப்பை ஏற்படுத்தும் என்று கேள்வி எழுந்துள்ளது. தற்போது வரைந்த களநிலவரம் திமுக கூட்டணிக்கு சாதகமாக உள்ளது. ஆனால் எதிர் தரப்பில் எடப்பாடோ - பாஜக - ஓபிஎஸ் ஒரு குழுவில் இருக்கிறார்கள். அமமுகவும் இல்லை என்பதால் தேர்தல் "க்ளோஸ்" மோதலாக மாறுமோ என்ற கேள்வி எழுந்துள்ளது. அப்படி மாறும் பட்சத்தில் தேமுதிக என்ன மாதிரியான பாதிப்புகளை இந்த தேர்தலில் ஏற்படுத்தும் என்ற கேள்வி எழுந்துள்ளது.

தேமுதிக
ஈரோடு கிழக்கு தேர்தலில் என்ன நடந்தாலும் போட்டியிடலாம் என்று தேமுதிக முடிவு செய்துள்ளது. தேமுதிகவின் இந்த நிலைப்பாட்டிற்கு பின் முக்கியமான காரணம் இருப்பதாக மூத்த பத்திரிகையாளர் குபேந்திரன் ஒன்இந்தியா யூ டியூப் சேனலுக்கு அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளார். அதில், இந்தியாவிலேயே ஈரோட்டில்தான் அதிக விஜயகாந்த் ரசிகர்கள் இருந்தனர். சந்திரகுமார் அங்கு தேமுதிக சார்பாக ஜொலிக்க கூடிய நபராக இருந்தார். இந்த நிலையில் இப்போதும் நாங்கள் பெரிய ஆள்தான். விஜய்காந்த் உடல்நிலை சரியில்லை என்றாலும் நாங்கள் பெரிய ஆள்தான். எங்களுக்கும் வாக்கு வங்கி இருக்கிறது என்று காட்டுவதற்காக தேமுதிக இப்படி தனித்து போட்டியிட நினைத்து இருக்கலாம். யாரையும் அணுகாமல் இருந்திருக்கலாம். ஒவ்வொரு வாக்கும் முக்கியம்தானே. தேமுதிகவுக்கு கொங்கு மற்றும் வடக்கு மாவட்டங்களில் நல்ல வாக்குகள் உள்ளன. அங்கெல்லாம் நிலைமை இப்போது எப்படி இருக்கிறது என்று தெரியவில்லை.

எழுச்சி
இந்த தேர்தலில் தேமுதிக எழுச்சியாக இருக்கிறது என்று காட்டிக்கொள்ள நினைக்கிறது, என்று குறிப்பிட்டு உள்ளார். ஈரோடு கிழக்கில் 17 சதவிகிதம்தான் அங்கே கவுண்டர்கள் இருக்கிறார்கள். 36 சதவிகிதம் செங்குந்த முதலியார்கள் இருக்கிறார்கள். 17 சதவிகிதம் மைனாரிட்டிகள் இருக்கிறார்கள். 6 சதவிகிதம் அருந்ததியர்கள் இருக்கிறார்கள். இதில் கவுண்டர்கள் வாக்குகளை விட மற்றவர்களை சேர்த்தால் அதிக வாக்குகள் வருகிறது. முக்கியமாக செங்குந்த முதலியார்கள்தான் இங்கு தீர்மானிக்கும் சக்தியாக இருக்கிறார்கள். இந்த நிலையில் தேமுதிக சார்பாக செங்குந்த முதலியார்கள் நிறுத்தப்பட்டுள்ளதால் இந்த தேர்தல் களத்தில் தேமுதிக என்ன மாதிரியான பாதிப்பை ஏற்படுத்தும் என்ற கேள்வி எழுந்துள்ளது.
-
மூட்டை முடிச்சை கட்டிக்கிட்டு பெங்களூர், ஹைதராபாத் போக வேண்டியதுதான்.. பின்னோக்கி செல்லும் சென்னை! -
தவெக அமைச்சரவையில் இருந்து எந்நேரத்திலும் வெளியேறுவோம்.. திருமாவளவன் கருத்துக்கு வன்னி அரசு விளக்கம் -
“செல்போனால் ஒரு மாநிலமே போய்விட்டது” - நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனின் பேச்சால் சலசலப்பு! -
தவெகவின் வெற்றி தொலைக்காட்சி ஆரம்பம்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு.. நாஞ்சில் சம்பத் வாழ்த்து -
"சாக்கடையில் இருக்க வேண்டியது.." கரப்பான் பூச்சி கட்சி குறித்து பவன் கல்யாண் சொன்ன கருத்து -
6400 கி.மீ ரஷ்யா, 7200 கி.மீ ஆப்பிரிக்காவை விட நீளமானது என்று கூகுள் மேப்ஸ் எப்படி நம்ப வைக்கிறது? -
மனோஜ் மனைவி தனியாக வாழ காரணம் இதுதான்.. "இதை” நம்பி தான் இருக்கிறாங்க! பாரதிராஜா தம்பி உருக்கம் -
டிடிவி பராக்.! இரட்டை இலை என்னோடது.. அமித் ஷாவிடம் டீல் பேசிய அண்ணன்! எடப்பாடிக்கு எகிறும் பிரஷர்! -
கிளம்பு, கிளம்பு.. போர் முடிஞ்சிப்போச்சு.. டிரம்ப் அறிவித்த 'அந்த' ஒரு விஷயம்.. ஈரான் செம ஹேப்பி! -
“அதிமுக என்ற கட்சியே இருக்காது.. இன்னும் பல MLAக்கள் தவெகவுக்கு வருவார்கள்” - அமைச்சர் செங்கோட்டையன் -
பாரதிராஜா வேண்டுமென்றே இறந்தார்! 6 மாதத்தில் நடந்தது என்ன? சிகிச்சை அளித்த மருத்துவர் வேதனை -
பெரிய தலக்கட்டு..திமுகவுக்கு தாவும் மூவரணி! வேதனையில் எடப்பாடி! சைக்கிள் கேப்பில் புகுந்த அறிவாலயம்!












Click it and Unblock the Notifications