திமுகன்னா சும்மாவா? விஜய்யை வைத்து பாஜக ஆட்டத்துக்கு பதிலடி? அதிமுகவும் வருது.. இது முக்கோண போட்டி

Subscribe to Oneindia Tamil

சென்னை: "திமுகவின் வலுவான வாக்காளர் ஆதரவுத்தளம் அவ்வளவு எளிதில் அழிந்துவிடாது. ஆட்சியில் இருக்கும் ஒரு கட்சி மக்களுக்குத் தொடர்ந்து பல்வேறு நலத்திட்டங்களைச் செய்து வரும்போது, அது திடீரென்று ஒன்றுமில்லாமல் போய்விடாது. பாஜக செய்யக்கூடிய அரசியல் வேலைகளையும் தேர்தல் முடிவுகளையும் மட்டுமே வைத்துக்கொண்டு திமுக முடிந்துவிட்டது என்று பேசிவிட முடியாது" என்று மூத்த பத்திரிகையாளர் அய்யநாதன் கருத்து தெரிவித்துள்ளார்.

ஒரு பிரபல சேனலுக்கு அய்யநாதன் தந்த பேட்டியில், "2 தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டிருப்பது தவெவுக்கு ஒரு பின்னடைவா என்பது தேர்தல் முடிவுகளுக்குப் பிறகுதான் தெரியவரும்.. மக்கள் மனநிலை நிச்சயமாக தவெக-வை தோற்கடிக்கும் வகையில் இருக்கிறது.. ஆனாலும், EVM எனப்படும் வாக்குப்பதிவு எந்திரங்கள் மூலம் தேர்தல் நடக்கும்போது மக்களின் உண்மையான வாக்களிப்பு மனநிலை எந்தளவுக்குப் பிரதிபலிக்கும் என்று தெரியவில்லை..

DMK Vijay AIADMK

பாஜக தொடர்ச்சியாக வெற்றி பெறுவதற்கு, வாக்காளர் பட்டியலிலிருந்து தகுதி வாய்ந்த லட்சக்கணக்கான மக்களின் பெயர்களைத் தேர்தல் ஆணையம் நீக்குவதுதான் முக்கியக் காரணம்.

ஈவிஎம் மிஷின்

டெல்லியில் வீடில்லாமல் வசிக்கும் ஏழை எளிய மக்களின் பெயர்களை தூக்குவது போல, இங்கேயும் வீடற்ற மக்களின் வாக்குரிமையைத் தேர்தல் ஆணையம் பறிக்கிறது. ஒருவேளை இந்த இடைத்தேர்தலில் தவெக தோல்வியடைந்தால், "இவர்கள் ஒன்றுமே இல்லாதவர்கள், சும்மா ஜெயிக்க வைக்கப்பட்டவர்கள்" என்பதை மக்கள் தெளிவாக புரிந்து கொள்வார்கள்.

ஆளுங்கட்சிக்கு வாக்களித்தால் தான் நல்லது நடக்கும் என்ற எண்ணத்தை மின்கட்டண உயர்வு, பஸ் கட்டண உயர்வு, பெண்களுக்கு எதிரான குற்றங்கள் போன்ற பிரச்சனைகளே பொய்யாக்குகின்றன. பாலியல் குற்றம் குறைந்ததா? கரண்ட் பில் குறைந்து விட்டதா?

அதிமுக, திமுக களமிறங்குது

தவெகவைவிட பன்மடங்கு பெரிய கட்சி திமுக.. இந்த இடைத்தேர்தலை நிர்ணயிப்பது பாஜக.. திமுக பிரதான எதிர்க்கட்சி என்பதால், இந்த இடைத்தேர்தலில் கண்டிப்பாக போட்டியிடும். தவெக வளர்வதை திமுக எப்படி வேடிக்கை பார்க்கும்... தேர்தலைப் புறக்கணித்துவிடும் என்றெல்லாம் வெளியே பரப்பப்பட்ட தகவல்கள் வெறும் வதந்தி.. தவெகவின் வளர்ச்சியை வேடிக்கை பார்த்துக்கொண்டு திமுக சும்மா இருக்காது.

உண்மையிலேயே தவெகவை எதிர்த்துப் போட்டியிட வேண்டியது அதிமுகதான்.. ஏனெனில் ராஜினாமா செய்த எம்எல்ஏக்கள் அதிமுகவைச் சேர்ந்தவர்கள் என்பதால் அந்தத் தொகுதிகள் அதிமுகவின் பாரம்பரியத் தொகுதிகளாகவே இருக்கின்றன. எனவே, திமுக மற்றும் அதிமுக ஆகிய இரு முக்கிய கட்சிகளுமே இத்தேர்தலில் வேட்பாளர்களை களமிறக்கும்.

பலமான திமுக - ஆழமான திமுக

இடைத்தேர்தலில் போட்டியிட்டால் திமுக 3வது, அல்லது 4வது இடத்திற்குத் தள்ளப்பட்டுவிடும், டெபாசிட் கூட கிடைக்காது என்றெல்லாம் கிளப்பி விடுகிறார்கள்.. 5வது இடத்துக்குகூட தள்ளப்பட்டுட்டுமே.. ஆனால், திமுகவிற்கென்று ஒரு வலுவான கட்டமைப்பு பலன் இருக்கிறது.

ஆட்சியில் இருக்கும் ஒரு கட்சி மக்களுக்குத் தொடர்ந்து பல்வேறு நலத்திட்டங்களைச் செய்து வரும்போது, அது திடீரென்று ஒன்றுமில்லாமல் போய்விடாது. பாஜக செய்யக்கூடிய அரசியல் வேலைகளையும் தேர்தல் முடிவுகளையும் மட்டுமே வைத்துக்கொண்டு திமுக முடிந்துவிட்டது என்று பேசிவிட முடியாது.. ஏனென்றால், திமுகவின் வலுவான வாக்காளர் ஆதரவுத்தளம் அவ்வளவு எளிதில் அழிந்துவிடாது.

விஜய்யை வைத்து பாஜக ஆட்டம்

தேர்தல் அறிவிக்கப்பட்ட மறுநாளே மனுத்தாக்கல் செய்யப்படுவதால், வாக்காளர் பட்டியலிலிருந்து திட்டமிட்டு நீக்கப்பட்டவர்களால் மீண்டும் பெயர்களை சேர்க்க முடிவதில்லை. பாஜகவின் பின்னணி ஆதரவை பொறுத்தே இடைத்தேர்தலில் விஜய்யின் வெற்றி அல்லது தோல்வி தீர்மானிக்கப்படும்.

இப்போது தலைமைச் செயலகம் இயங்கும் புனித ஜார்ஜ் கோட்டை ராணுவத்திற்குச் சொந்தமானது என்பதால், புதிய செயலகம் தேவை என்ற கோரிக்கை எழுந்தது. ஆனால் கடற்கரைக்கு அருகில் சுனாமி பாதிப்புக்குள்ளான பகுதியைச் செயலகத்திற்குத் தேர்ந்தெடுப்பதற்குப் பதிலாக, ஓஎம்ஆர் போன்ற வெளிப்பகுதிகளில் இதைக் கட்டியிருக்கலாம்.

முதலமைச்சர் யாரையும் கலந்தாலோசிக்காமல் தான் நினைத்தபடியே முடிவெடுக்கிறார். சட்டமன்றத்தில் அவர் பேசிய பேச்சு, காட்டிய சைகைகள் மற்றும் மிசா காலகட்டம் குறித்து ஆதாரங்கள் இல்லாமல் பேசியது போன்றவை அனைத்துமே விமர்சனத்திற்குரியவை.

தவெக அரசு - பாஜக கொள்கை

தவெக அரசு பின்பற்றும் பல விஷயங்கள் பாஜகவின் கொள்கைகளாகவே இருப்பதால், கம்யூனிஸ்டுகள் இந்த கூட்டணியில் இணையத் தயாராக இல்லை. விஜய் மெஜாரிட்டி பெறாத சூழலில், குடியரசுத் தலைவர் ஆட்சி வந்துவிடக் கூடாது என்பதற்காகவே திருமாவளவன் தவெகவிற்கு ஆதரவு அளித்தார். திமுக கூட்டணியைக் கையாளத் தவறிவிட்டது என்ற திருமாவளவனின் பேச்சு, 2 கட்சிகளுக்கும் இடையிலான பிளவையே காட்டுகிறது.

தவெக கூட்டணியின் பெயரில் "மதச்சார்பற்ற" என்ற வார்த்தையைத் திருமாவளவன்தான் சேர்க்க வலியுறுத்தியிருப்பார். விஜய்யின் அரசியல் ஏமாற்றமளிக்கும் வகையில் இருக்கும்போது, அதை அவர் மதச்சார்பின்மையின் அடையாளமாகப் பார்ப்பது வருத்தமளிக்கிறது. கட்சி மாறியவர்களை வேட்பாளராக நிறுத்துவது தவெகவுக்கு பலன் தராது.. போட்டி அதிமுக மற்றும் திமுக இடையேதான் இருக்கும்" என்றெல்லாம் தெரிவித்துள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+