"சைலண்ட் மோடு".. திமுக வருமா வராதா.. இப்படியா.. அப்படியா.. ஊசலாட்டத்தில் அதிகாரிகள்.. உண்மையா?
அடுத்து யார் ஆட்சி அமைப்பர் என்ற எதிர்பார்ப்பு அரசு அதிகாரிகள் மத்தியில் எகிறி உள்ளது
சென்னை: தமிழகத்தில் இருவேறு முக்கிய விஷயங்கள் ஓடிக் கொண்டிருக்கிறது.. அவை இரண்டுமே சில அரசு உயர் அதிகாரிகள் பற்றியவை என்பதால், ஒருவித பரபரப்பு திமுக, அதிமுக வட்டாரங்களில் பற்றி கொண்டிருக்கிறது!
வழக்கமாக தேர்தல் கணிப்புகள் என்பது தேர்தலுக்கு முன்பு உள்ள நடைமுறை என்றாலும், இந்த முறை கணிப்புகள் சற்று மிகையான தாக்கத்தை ஏற்படுத்தி விட்டு போயுள்ளன...
சில பொதுவான கருத்து கணிப்பு நிறுவனங்களே, திமுகவே பிரதான வெற்றி பெறும் என்று அறுதியிட்டு சொன்னதால்தான், இந்த எதிர்பார்ப்பு கூடியது.. இந்த கருத்து கணிப்புகளுடன், ஐபேக் டீமின் பல கணிப்புகள் ஒத்த முடிவையே பிரதிபலித்துவிட்டு போயின.. அந்த வகையில் திமுகவுக்கான ஆட்சி அதிகாரம், பிரகாசமாக தென்பட தொடங்கி உள்ளதாகவும் அரசியல் நோக்கர்கள் சொல்லி வருகிறார்கள்.

வாக்குப்பதிவு
எனவே, கருத்து கணிப்புகளுக்கு முன்பும் சரி, வாக்குப்பதிவுக்கு பிறகும்சரி, அரசு அதிகாரிகள் தரப்பில் ஒருவித அதிர்வு ஏற்படுத்த ஆரம்பித்துவிட்டது.. பலர் ஸ்டாலினுக்கு போனை போட்டு வாழ்த்து சொல்லி வருவதாகவும் செய்திகள் வந்தவண்ணம் இருந்தன... எனினும் இதிலும் சில குழப்பங்கள் ஏற்பட்டு வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

அறிகுறி
வாக்குப்பதிவு நடந்த பிறகு, அடுத்தடுத்த நாட்களை கவனித்தால், ஆட்சி மாற்றத்திற்கான அறிகுறிகள் தென்படுவது வழக்கம்.. அந்த அறிகுறி அதிகாரிகள் மட்டத்தில் இருந்தே வெளிப்படும்.. அல்லது போன் போட்டு வாழ்த்து சொல்வதை வைத்தும், அல்லது, கோட்டையில் உயர் மட்ட அதிகாரிகளும், போலீஸ் அரிகாரிகளும் யாரை போய் சந்திக்கிறார்கள்? யாரை சந்திக்க அப்பாயின்ட்மென்ட் கேட்டுள்ளார்கள் என்பதை வைத்து, அடுத்து வரும் ஆட்சியை ஓரளவு கணிக்கலாம்.

அதிகாரிகள்
இந்த முறை திமுகவே பிரதானம் என்று கணிப்புகள் வந்தாலும், சில அதிகாரிகள் அவசரப்படாமல் பொறுமையாக இருக்கிறார்களாம்.. திமுக தரப்பை நேரில் சென்று சந்திக்காமலும், வாழ்த்து சொல்லாமலும் இருக்கிறார்களாம்.. இதற்கு காரணம், இப்படித்தான் 2016-லும் திமுக வெற்றி பெற போகிறது என்ற பிம்பம் களத்தில் வலுவாக விழுந்தது..

ஜெயலலிதா
இதை நம்பி பலரும் கோபாலபுரத்துக்கு படையெடுத்து போனதும், கருணாநிதியை சந்தித்து ஆசி பெற முனைந்ததும், முக ஸ்டாலினை சந்தித்து வாழ்த்து பெறுவதும் நடந்தது.. ஆனால், இதற்கு நடுவில், திடுதிப்பென்று ஜெயலலிதா டாப் கியர் போட்டு மேலே சென்றுவிட்டார். எனவே, அந்த மாதிரியான ஒரு சூழல் இப்போது நடந்துவிடக்கூடாது என்பதில் சில உயர் அதிகாரிகள் உறுதியாக இருக்கிறார்களாம்..

லிஸ்ட்
மற்றொரு பக்கம், திமுக தரப்பில் லிஸ்ட் ரெடியாகி கொண்டிருப்பதால், அதில் தங்கள் பெயரும் இடம்பெற வேண்டும் என்ற முனைப்பில் இருக்கிறார்களாம்.. இப்படி அரசு அதிகாரிகள் தரப்பில் இப்படியா, அப்படியா என்ற குழப்ப நிலை ஓடிக் கொண்டிருக்கிறதாம்.. இதனிடையே, திமுக தரப்புக்கு வாழ்த்து சொன்ன, மற்றும் வாழ்த்து சொல்லி வரும் அதிகாரிகள் யார் யார் என்று கண்டறிந்து அவர்களை கடிந்து கொள்ளும் மனோபாவமும், அதிமுக தலைமையிடம் தென்பட துவங்கி உள்ளதாம்!
-
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
‘அல்காரிதம்’ புரியாததால் வந்த வினை! தவெகவின் அலையைக் கணிக்கத் தவறிய டிஆர்பி ராஜா.. அடியோடு மாறுதாம்! -
“முஸ்லீம் மக்களை காப்பாற்றும் லட்சணம் இதுதானா?" TVK + IUML கட்சிகளை லெஃப்ட் ரைட் வாங்கிய திமுக -
காங். துரோகம்.. மனக்காயத்தில் தொண்டர்கள்! இந்திய கூட்டணி கூட்டத்தில் பங்கேற்க மாட்டோம்! - திமுக -
“ஒரு இயக்கம்.. இன்னொரு இயக்கத்தின் சின்னத்தில் போட்டியிடக்கூடாது” - துரை வைகோ! -
அரசியல் மோதலை விடுங்க.. 'கலைஞர்' கருணாநிதி பிறந்தநாளுக்கு முதல்வர் விஜய் போட்ட பதிவு! -
ஏற்கனவே கொதிக்குது.. ஆத்திரத்தில் திமுக! தூபம் போட்ட துரை! பனையூருக்கு பறக்கும் எழும்பூர் எக்ஸ்ப்ரஸ் -
அரசியல் சதுரங்கத்தின் அசாத்திய மூளை.. நவீன தமிழகத்தின் சிற்பி! யார் இந்த ‘கலைஞர்’ கருணாநிதி? -
"கடைசி மூச்சு வரை உங்களுக்காக உழைப்பேன்!" - கலைஞர் கருணாநிதியின் இறுதிப் பேருரை.. என்ன பேசினார்? -
ராஜாக்கள் மந்திரியானால் இப்படித்தான்! டி.ஆர்.பி ராஜாவுக்கு எதிராக கிளம்பிய மா.செ.க்கள்! -
கை கால் ஆட்டி பேசி..சட்டமன்றத்தில் எங்க போச்சு BRO உங்க BODY LANGUAGE விஜய்யை விடாமல் அடித்த ஆ.ராசா! -
அப்பன் மகனுக்கு சம உரிமை கொடுக்க இது என்ன குடும்ப சொத்தா? கே.என்.நேரு குறித்து திருச்சி சூர்யா












Click it and Unblock the Notifications