அமைச்சர் நிர்மல் குமார் பேச்சு.. விடாத திமுக! சபாநாயகரை மீண்டும் சந்தித்து உரிமை மீறல் புகார்

Subscribe to Oneindia Tamil

சென்னை: சட்டமன்ற கூட்டத்தொடரில் மிசா விவகாரம் குறித்து கொச்சையாக பேசிய அமைச்சர் நிர்மல் குமார் மீது உரிமை மீறல் புகார் அளிக்கப்பட்டுள்ளது. சபநாயகர் ஜேசிடி பிரபாகரை சந்தித்து திமுக கொறடா எவ வேலு, எம்.ஆர்.கே பன்னீர்செல்வம் ஆகியோர் புகார் அளித்தனர்.

தமிழக சட்டமன்ற கூட்டத்தொடரில் ஆளும் தவெக - எதிர்க்கட்சியான திமுக இடையே காரசராமான வாதம் நடைபெற்றது. முதல்வர் விஜய் பதிலுரையின் போது மிசா மற்றும் சர்க்காரியா கமிஷன் பற்றி பேசினார். முதல்வரின் பேச்சுக்கு திமுக கடும் எதிர்ப்பு தெரிவித்தது. அதேபோல, அமைச்சர் நிர்மல் குமார் மிசா கைது தொடர்பாக பேசியதும் கடும் விமர்சனத்திற்கு உள்ளானது.

DMK Whip EV Velu met JCD Prabhakar to file the breach of privilege complaint against Minister Nirmal Kumar

நிர்மல் குமார் மீது நடவடிக்கை எடுங்க

இந்த நிலையில், சபாநாயகர் ஜேசிடி பிராபகரை சந்தித்து அமைச்சர் நிர்மல்குமார் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி உரிமை மீறல் புகாரை திமுக அளித்துள்ளது. இதன்பிறகு சட்டமன்ற வளாகத்தில் முன்னாள் அமைச்சர் எ.வ வேலு, எம்.ஆர்கே பன்னீர் செல்வம் ஆகியோர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தனர். அப்போது அவர்கள் கூறியதாவது:-

சட்டமன்றத்தில் இல்லாதவர்களை பற்றி சட்டமன்றத்தில் பேசியது தவறு. விதி அப்படித்தான் சொல்கிறது. சட்டமன்றத்தில், இருப்பவர்களை பற்றி பேசினால் பதில் சொல்ல முடியும். இல்லாதவர்களை பற்றி பேசினால் அது விதியை மீறிய விஷயம். இருப்பவர்களை பற்றி பேசுவது என்றாலும் கூட, அதை பற்றிய குறிப்பு பேரவைத்தலைவரிடம் கொடுக்க வேண்டும்.

சட்டசபையில் இல்லாதவர்களை பற்றி பேசுகிறார்கள்

அந்த காப்பி சம்பதப்பட்ட உறுப்பினரிடம் கொடுக்க வேண்டும். அப்படி இருந்தால்தான், அவர் படித்து பார்த்துவிட்டு பதில் சொல்ல முடியும். சட்டமன்ற உறுப்பினர்களை பற்றி பேசுவது என்றாலும் சம்பந்தபப்பட்ட தகவலை உறுப்பினரிடம் சொல்லிவிட்டுதான் பேச வேண்டும். சட்டமன்றத்தில் இல்லாதவர்களை பற்றி பேசுவதற்கு விதியே இல்லை.

இல்லாதவர்களை பற்றித்தான் எப்போது பார்த்தாலும் பேசிக்கொண்டு இருக்கிறார்கள் அப்படித்தான் நிர்மல் குமார் பேசியதற்கு உரிமை மீறல் புகார் அளித்துள்ளோம். முதல்வர் பேசும் போது சில செய்திகள் சொன்னார். அவர் மேலே உரிமை மீறல் புகார் கொடுக்கப்பட்டுள்ளது. சம்மந்தப்பட்டவர்களுக்கு கொடுத்து இருக்கிறோம். திசைதிருப்பும் அரசியலில் ஈடுபடுகிறார்கள். இல்லாததை பொல்லாதை பழைய செய்திகளை எல்லாம் எடுத்து பேசுகிறார்கள்.

ஆதாரம் எதுவும் இல்லை

ஜனநாயகத்தை காப்பாற்றுவதற்காக மிசாவுக்கு எதிராக மாபெரும் போராட்டம் நடைபெற்றது. திமுக சார்பாக 419 பேர் கைது செய்யப்பட்டனர். கம்யூனிஸ்ட்கள் கூட சிறை வைக்கப்பட்டனர். தியாகத்தை கொச்சைப்படுத்தாதீர்கள். இது தேவையில்லாதது. அதனால், முதல்வர் பேசியது அவைக்குறிப்பில் இருந்து நீக்க வேண்டும். சர்க்காரியா கமிஷனில் அவர்கள் படித்தது குற்றச்சாட்டுதான். சர்க்காரியா கமிஷனில் என்ன முடிவு எடுக்கப்பட்டது. 28 குற்றச்சாடுகளுக்கு ஆதாரம் எதுவும் இல்லை என்று கைவிட்டுவிட்டு போய்விட்டார்.

ஆதாரம் இருந்தால் அடுத்தக் கட்டமாக எப்.ஐ.ஆர் பதிவு செய்து இருப்பதால் கோர்ட்டுக்கு போயிருக்கும். ஒன்றுமே இல்லாததால்தால் ஆணையத்தோடு நின்றுவிட்டது. இந்திரா காந்திதான் சர்க்காரியா கமிஷன் போட்டார். அவரே வாபஸ் பெற்றுவிட்டு சென்றுவிட்டார். 1982-ல் இதுதான் நடைபெற்றது. கேட்கிற கேள்விக்கு பதில் இல்லாததால் திசை திருப்பும் செயலை செய்கிறர்கள் என்பதே உண்மை." என்று கூறினர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+