Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

"180" இல்லையாமே.. ஸ்டாலினுக்கு வந்த "அதிரடி" ரிப்போர்ட்.. மிரண்டு கிடக்கும் அதிமுக.. என்னாச்சு

திமுக 180 இடங்களுக்கு மேல் வெற்றி பெறும் என்று கூறப்படுகிறது

Subscribe to Oneindia Tamil

சென்னை: தேர்தலுக்கு முன்பு வரை ஒரு கணிப்பு.. வாக்குப்பதிவு முடிந்த பிறகு வேறு ஒரு கணிப்பு என்ற ரீதியில் திமுகவில் ஒரு செய்தி வட்டமடித்து கொண்டிருக்கிறது.

வழக்கமாக தேர்தல் சமயங்களில் கருத்து கணிப்புகள் வெளியாவது இயல்புதான்.. அவைகளில் சில அப்படியே நடந்துள்ளன.. பல பொய்த்தும் போயுள்ளன..

எனினும், இந்த முறை கருத்து கணிப்பை மக்கள் அசால்ட்டாக ஒதுக்கிவிட்டு செல்லவில்லை. மாறாக. முக்கியத்துவம் தந்தே அதை கவனித்தனர்.

திமுக

திமுக

அந்த வகையில், திமுக கூட்டணி, 170 முதல் 180 சீட்களை நிச்சயம் பெறும் என்று கூறப்பட்டது.. இதுவரை நடத்திய பெரும்பாலான கருத்து கணிப்புகளில் இதேதான் சொல்லப்பட்டிருந்தது.. அதேபோல அதிமுக கூட்டணி 70-80 முதல் இடங்களை பெறக்கூடும் என்றும் சொல்லப்பட்டது.. இதனால், அதிமுக தரப்பில் அப்போதே அப்செட் என்ற தகவல்கள் கசிய ஆரம்பித்தன.

ஸ்டாலின்

ஸ்டாலின்

இந்நிலையில், தேர்தல் முடிந்த நிலையில், இன்னொரு உறுதிப்படுத்தப்படாத தகவல் வெளியாகி உள்ளது.. அதன்படி, ஐபேக் மற்றொரு ரிப்போர்ட்டை ஸ்டாலினிடம் தந்ததாம்.. ஏற்கனவே 180 தொகுதிகள் வரை திமுக கூட்டணி வெற்றிபெறும் என்று இதே ஐபேக் டீம்தான் கணித்து சொல்லி இருந்தது.. இதைதான் பல்வேறு கருத்து கணிப்புகளும் தொடர்ந்து வெளிப்படுத்தி இருந்தன.. ஆனால், தேர்தல் முடிவுக்குப் பிறகு ஐபேக் நிறுவனத்தின் கணிப்பில், ஏற்கனவே இருந்ததைவிட கூடுதல் தொகுதிகளை திமுக கூட்டணி வெல்லும் என்று கூறியுள்ளதாம்.

அதிமுக

அதிமுக

அதாவது பல மூத்த அமைச்சர்களே, வெற்றியை பெறுவது கஷ்டம் என்றும், அதிமுக மிக குறைந்த அளவு தொகுதிகளிலேயே வெற்றி பெறும் வாய்ப்புள்ளது என்றும் சொன்னதாம்.. இந்த ரிப்போர்ட்டைதான் ஸ்டாலினிடம் தந்துள்ளதாக தெரிகிறது. இதை பார்த்த பிறகு திமுக தலைமை ஏக குஷியில் உள்ளதாகவும் சொல்லப்படுகிறது. இதுதான் அதிமுக கூடாரத்தை கலங்க வைத்து வருவதாகவும் கூறப்படுகிறது.

Recommended Video

    திடீர்னு நுழைந்த ஸ்டாலின்.. சபரீசனுடன் பிரசாந்த் கிஷோர் ரூமுக்குள் சென்று.. திக்குமுக்காடி போன ஐபேக் - வீடியோ
    நியமனம்

    நியமனம்

    இதில் இன்னொரு தகவலும் கசிந்து வருகிறது.. அடுத்து திமுகதான் ஆட்சியை பிடிக்கும் என்பதால், பல அதிகாரிகள் திமுக தரப்புக்கு வாழ்த்து சொல்லியும் வருகிறார்களாம்.. அடுத்தடுத்த அதிகாரிகள் யார் யார் நியமனம் என்று, ஒரு வாரத்துக்கு முன்பேயே ஆலோசிக்கப்பட்டு வருவதாக செய்திகள் வந்தன..

     வாழ்த்து

    வாழ்த்து

    ஆனால், தற்போது திமுக தரப்புக்கு சில அதிகாரிகளே போன் செய்து வாழ்த்து சொல்லி வருவதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன. இதெல்லாம் எந்த அளவுக்கு உண்மை என்று தெரியவிட்டாலும், வாக்கு எண்ணிக்கை நாள் வரை, இதுபோல பல யூகத்தின் செய்திகளும் வட்டமடித்து கொண்டுதான் இருக்கும் என்பதையும் மறுப்பதற்கில்லை..!

    More From
    Prev
    Next
    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+