லோக்சபா தேர்தலில் 33, இடைத் தேர்தல்களில் 11 தொகுதிகளை திமுக அள்ளும்! லயோலா முன்னாள் மாணவர்கள் சர்வே
Recommended Video

லோக்சபா, சட்டசபை இடைத் தேர்தலில் அதிக தொகுதிகள் யாருக்கு? பண்பாட்டு மக்கள் தொடர்பகம் அதிரடி சர்வே
சென்னை: தமிழகத்தில் திமுக கூட்டணி அதிக இடங்களில் வெல்ல வாய்ப்புள்ளதாக லயோலா கல்லூரி முன்னாள் மாணவர்கள் மற்றும் பண்பாட்டு மக்கள் தொடர்பகம் இணைந்து நடத்திய கருத்துக் கணிப்பு முடிவுகள் தெரிவிக்கின்றன.
லயோலா கல்லூரி முன்னாள் மாணவர்கள் மற்றும் பண்பாட்டு மக்கள் தொடர்பகம் சார்பில் லோக்சபா, சட்டசபை இடைத் தேர்தல் தொடர்பாக தமிழகத்தில் மக்களிடம் கருத்துக் கணிப்பு நடத்தியிருந்தது.
இதுகுறித்த முடிவுகளை இன்று சென்னையில் நிருபர்களிடம் பண்பாட்டு மக்கள் தொடர்பகம், நிர்வாகி திருநாவுக்கரசு தெரிவித்தார். அதில் பல சுவாரசிய முடிவுகள் வெளியாகியுள்ளன.

33 தொகுதிகள்
16 நாட்களாக 40 தொகுதிகளிலும் கள ஆய்வு செய்துள்ளோம். மொத்தம், 21,464 பேரிடம் நேரடியாக கருத்துக் கேட்டுள்ளோம். லோக்சபா தேர்தலில் திமுக கூட்டணி 33 தொகுதிகளை வெல்லக்கூடும் என்று இந்த கருத்துக்க கணிப்பு தெரிவிக்கிறது. இதுகுறித்து முழு விவரங்களை பாருங்கள்: லோக்சபா தேர்தலில் மொத்தமுள்ள 40 தொகுதிகளில் 33 தொகுதிகளை திமுக கூட்டணி வெல்ல வாய்ப்புள்ளது.

அதிமுக அம்பேல்
லோக்சபா தேர்தலில் அதிமுக கூட்டணி 3 முதல் 5 தொகுதிகள் வரை வெல்ல வாய்ப்புள்ளது. அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம், ஒன்று அல்லது இரு லோக்சபா தொகுதிகளை வெல்ல வாய்ப்புள்ளது. திமுகவின் வாக்கு வங்கி 49 சதவீதம். அதிமுக 32, அமமுக, நாம் தமிழர், மக்கள் நீதி மய்யம் உள்ளிட்ட பிற கட்சிகள் 19 சதவீத வாக்குகள் பெறும்.
18 தொகுதி இடைத்தேர்தல்.. யார் யாருக்கு இடையில் போட்டி.. மாஸ் லிஸ்ட் இதோ!

திமுக கூட்டணி
18 சட்டசபை தொகுதி இடைத் தேர்தலில் திமுக கூட்டணி, 11 தொகுதிகள் வரை வெல்ல வாய்ப்புள்ளது. அதேநேரம், அதிமுக கூட்டணி வெறும் 2 தொகுதிகளில் மட்டுமே வெல்ல வாய்ப்புள்ளது. மற்ற தொகுதிகளை அமமுக வெல்லக்கூடும். அதாவது அதிமுகவைவிடவும் அமமுக அதிக தொகுதிகளை வெல்லும்.
பாஜகவிற்கு கஷ்டம்.. காங்கிரஸ் நிலை என்ன தெரியுமா?.. அசத்தல் சர்வே இதோ!

ஸ்டாலினுக்கு அதிக ஆதரவு
அடுத்த முதல்வராக யாருக்கு ஆதரவு என்ற கேள்விக்கு, கமல்ஹாசனுக்கு 7 சதவீதம் பேர் ஆதரவு அளித்துள்ளனர். ரஜினிகாந்த் 4, அன்புமணி 2, சீமான் 5, டிடிவி தினகரன் 20, ஈபிஎஸ்-ஓபிஎஸ் 22, ஸ்டாலின் 33 சதவீதம் மக்களின் ஆதரவுகளை பெற்றுள்ளனர். பிறர் 9 சதவீதம் மக்களின் ஆதரவை பெற்றுள்ளனர். இவ்வாறு அந்த பரபரப்பு கருத்துக் கணிப்பு முடிவுகள் தெரிவிக்கின்றன.
-
“தனது பெயர்ப் பலகையை காப்பாற்றிக் கொள்ள டெல்லிக்கு ‘காவடி’ தூக்குகிறார் எடப்பாடி” - ஸ்டாலின் தாக்கு! -
திருச்சியில் மாஸ்டர் பட வில்லன் பவானி பாணியில் ஸ்கெட்ச்.. திமுக கவுன்சிலர் வழக்கில் ட்விஸ்ட் -
இலவச திட்டங்களுக்கு எத்தனை கோடி செலவாகும்? திமுக.. அதிமுக.. தவெக..? யார் டாப்? -
அதிமுக, தமிழக வெற்றிக் கழகம்.. மொத்தமாக கேம் ஓவர்.. அடித்து சொல்லும் 3 பெரிய கருத்து கணிப்புகள்! -
இளைஞர்கள் ஆதரவு.. விஜய்யின் அரசியல் வருகையை எப்படி பார்க்கிறீங்க? ஆ.ராசா சொன்ன கருத்து! -
காங்கிரஸ் வேட்பாளர்கள் யார் யார்? வெளியானது உத்தேச பட்டியல்! இன்றிரவு அதிகாரப்பூர்வ அறிவிப்பு -
உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டம் அம்போ! ஊதிய உயர்வும் அம்போ! தேர்தல் நேரத்தில் பறந்த கண்டனம்! -
அமமுகவில் இருந்து விலகி திமுகவில் இணைந்தார் முன்னாள் எம்எல்ஏ! தினகரன் அதிர்ச்சி -
170ஐ தாண்டி.. சிக்ஸர் அடிக்கும்.. திமுகதான் மீண்டும்.. அப்போ தவெக, அதிமுக? 3 சர்வே ரிப்போர்ட்ஸ்! -
டிபெண்டர் கார் ரூ.1 கோடி, இன்னோவா கார் ரூ.23 லட்சம்.. உதயநிதி ஸ்டாலினின் சொத்து மதிப்பு எவ்வளவு? -
தமிழக வெற்றிக் கழகத்தின் அஸ்திவாரத்தை அசைத்த சர்வே.. ஆசையா இருந்தாங்களே.. தவெக விஜய்க்கு ஷாக்! -
விஜய் கட்சியால் எந்த பாதிப்பும் இல்லை.. திமுகவின் வெற்றி பிரகாசமா இருக்கு.. நேரடியாக சொன்ன சபரீசன்!












Click it and Unblock the Notifications