மீனா ஜெயக்குமார் திமுகவிலிருந்து நீக்கம்! ஸ்டாலின் அதிரடி நடவடிக்கை! அச்சத்தில் நிர்வாகிகள்!
சென்னை: திமுக மாநில மகளிர் தொண்டர் அணி துணைச் செயலாளர் மீனா ஜெயக்குமார் கட்சியின் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் நீக்கப்பட்டுள்ளார்.
Recommended Video

கட்சியின் கட்டுப்பாட்டை மீறி கழகத்திற்கு அவப்பெயர் ஏற்படும் வகையில் செயல்பட்டதால் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படுவதாக திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிவித்துள்ளார்.
கோவை மேயர் வேட்பாளராக பேசப்பட்ட நிலையில், கவுன்சிலர் பதவிக்கு போட்டியிடக் கூட திமுக தலைமை சீட் கொடுக்காததால் அண்மையில் தனது ஆதங்கத்தை அமைச்சர் செந்தில்பாலாஜி முன்னிலையில் கொட்டித்தீர்த்தார் மீனா ஜெயக்குமார்.

அதிரடி நடவடிக்கை
நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் முடிவுக்கு பிறகும் மறைமுகத் தேர்தலுக்கு பிறகும் திமுகவில் வரிசையாக பல முக்கிய நிர்வாகிகள் நீக்கப்பட்டு வருகின்றனர். முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு கட்சியினர் மீது தயவு தாட்சண்யமின்றி நடவடிக்கை எடுத்து வருகிறார் திமுக தலைவரும், முதலமைச்சருமான ஸ்டாலின். நகரச் செயலாளர்கள், மாவட்டச் செயலாளர் என சஸ்பெண்ட் பட்டியல் நீண்ட நிலையில் மகளிர் அணி மாநில நிர்வாகியான மீனா ஜெயக்குமாரும் இப்போது நடவடிக்கைக்கு ஆளாகியிருக்கிறார்.

சீட் இல்லை
இதனால் முன்னணி நிர்வாகிகள் பலர் அடுத்தது அந்த லிஸ்டில் நமது பெயர் வந்துவிடுமோ என அச்சத்தில் உள்ளனர். மீனா ஜெயக்குமாரை பொறுத்தவரை கோவையை சேர்ந்தவர். திமுக மகளிர் அணியில் தொண்டர் அணி துணைச் செயலாளராக இருந்து வந்தார். சிங்காநல்லூர் பகுதியில் கவுன்சிலர் சீட் கிடைக்கும் என்ற நம்பிக்கையில் தேர்தல் அறிவிப்புக்கு முன்னதாகவே பல லட்சங்களை செலவும் செய்தார். ஆனால் வேட்பாளர் பட்டியலில் இவர் பெயர் இடம்பெறவில்லை.

கடும் விமர்சனம்
இதனால் கடும் அதிருப்தியிலும் கோபத்திலும் இருந்து வந்த மீனா ஜெயக்குமார், நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலுக்கு பிறகு ஒருங்கிணைந்த கோவை மாவட்ட கவுன்சிலர்கள் கூட்டத்தில் திமுக கோவை மாநகர் மாவட்ட பொறுப்பாளர் சிங்காநல்லூர் கார்த்திக்கை எல்லோர் முன்னிலையிலும் கடுமையாக விமர்சித்தார். இது மேடையிலிருந்த அமைச்சர் செந்தில்பாலாஜிக்கு கடும் கோபத்தை ஏற்படுத்தியது. கோவை மேயர் வேட்பாளராக கார்த்திக் மனைவி இளஞ்செல்வி தான் அறிவிக்கப்படுவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் மீனா ஜெயக்குமார் போட்ட முட்டுக்கடையால் புதுமுகமான கல்பனாவுக்கு யோகம் அடித்தது.

ஒழுங்கு நடவடிக்கை
இதனால் மீனா ஜெயக்குமார் மீது கடும் கோபமுற்ற கோவை மாநகர் மாவட்ட பொறுப்பாளர் கார்த்திக், அவரை கட்சியிலிருந்து நீக்குமாறு அமைச்சர் செந்தில்பாலாஜி மூலம் தலைமைக்கு தொடர்ச்சியாக கோரிக்கை வைத்து வந்ததாக தெரிவிக்கப்படுகிறது. இந்நிலையில் திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன், மீனா ஜெயக்குமாரை ஒழுங்கு நடவடிக்கையின் கீழ் தற்காலிகமாக நீக்குவதாக அறிவிப்பு வெளியிட்டிருக்கிறார்.
-
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
குடும்பத்தினருடன் குடகு மலைக்குச் சென்ற திமுக தலைவர் ஸ்டாலின்.. கூட யார் யார்லாம் பாருங்க! -
விஜய்யை வளர விடக்கூடாது.. உதயநிதி டீமுக்கு போகும் "பவர்"?.. மைசூரில் ஸ்டாலின் போடும் பெரிய பிளான் -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம் -
திமுகவே கணிக்கல.. விஜய்யுடன் நெருங்கிய காங்கிரஸ்! பாஜகவை வீழ்த்த இந்தியா கூட்டணி மாஸ்டர் ஸ்கெட்ச் -
தேர்தல் புயலில் சேதாரமான கோட்டை.. படக்கென எழுந்த ’திமுக’ குதிரை.. படுத்தே கிடக்கும் ’அதிமுக’ யானை! -
ஸ்டாலின், பினராயி, சித்தராமையா, கே.சி.ஆர்.. அடுத்தடுத்து சரிந்த ராஜ்ஜியம்.. பாஜகவிற்கு அடித்த லக்! -
"மனக் குழப்பத்தில் மனோ தங்கராஜ்".. திமுகவுக்குள் பரபரப்பை உண்டாக்கிய அனிதா ராதாகிருஷ்ணன் பேச்சு -
திட்டமிட்டு விஜய்யுடனான சந்திப்பை அமித்ஷா ரத்து செய்தார்.. திமுகவின் முரசொலி விமர்சனம் -
தொங்கலில் விடப்பட்ட சிங்கப்பெண் அதிரடிப்படை! தவெக அரசு தீவிரத்தை உணரவில்லை என கனிமொழி சாடல் -
“MLA-களை பிடிப்பதை விட்டுவிட்டு.. போலீஸை ஆக்கப்பூர்வமா செயல்பட வைக்கவும்!” விஜய்க்கு உதயநிதி அட்வைஸ் -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா?












Click it and Unblock the Notifications