“இந்த பூச்சாண்டிக்கெல்லாம் பயப்பட மாட்டோம்” - அமைச்சர் ரமேஷுக்கு காரசார பதில் கொடுத்த சேகர்பாபு
சென்னை: இந்து சமய அறநிலையத்துறையில் முந்தைய ஆட்சியில் நடந்த முறைகேடு தொடர்பாக ஆதாரத்தோடு வெளியிடுவதாக அமைச்சர் ரமேஷ் பேசிய நிலையில், "இந்த பூச்சாண்டிக்கு எல்லாம் பயப்படுகின்ற இயக்கம் திராவிட முன்னேற்றக் கழகம் அல்ல. "இந்த பூச்சாண்டிக்கு எல்லாம் பயப்படுகின்ற இயக்கம் திராவிட முன்னேற்றக் கழகம் அல்ல" என பதில் கொடுத்துள்ளார் திமுக எம்.எல்.ஏ சேகர்பாபு.
தமிழக சட்டசபையில் இன்று இந்து சமய அறநிலையத்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்றது. அப்போது பேசிய அமைச்சர் ரமேஷ், இந்து சமய அறநிலையத்துறை 100 நாட்களில் ரூ.108 கோடி வருவாயைப் பெருக்கியுள்ளது என்றும், கோயில்களுக்குச் சொந்தமான 464 ஏக்கர் நிலத்தை மீட்க மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளது என்றும் தெரிவித்தார்.

மேலும், கடந்த திமுக ஆட்சியில் 2494 கோவில்களின் திருப்பணிகளுக்காகத் திட்டமிட்டதில் 392 கோடி ரூபாய் நிலுவையில் உள்ளதாகவும், இதனால் பல கோவில் பணிகள் பாதியிலேயே நின்றுபோயுள்ளதாகவும் குற்றம்சாட்டினார் அமைச்சர் ரமேஷ்.
"சிவன் சொத்து குல நாசம்" என்ற பழமொழியின் தீவிரத்தை நன்கு உணர்ந்தவன் நான் என்று குறிப்பிட்ட தமிழக அறநிலையத்துறை அமைச்சர் ரமேஷ், கடந்த திமுக ஆட்சிக் காலத்தில் அறநிலையத்துறையில் நடந்த முறைகேடுகள் அனைத்தையும் ஆதாரத்துடன் சேகரித்து வைத்துள்ளதாகவும், அவற்றை மிக விரைவில் பொதுவெளியில் ஆதாரத்துடன் வெளியிடப் போவதாகவும் தெரிவித்தார்.
அதற்கு பதில் அளித்து முன்னாள் அமைச்சர் சேகர்பாபு பேசுகையில், "இந்த பூச்சாண்டிக்கு எல்லாம் பயப்படுகின்ற இயக்கம் திராவிட முன்னேற்றக் கழகம் அல்ல. நான் 50 ஆண்டுகளாக ஆன்மிக பயணத்தில் இருப்பவன். சிவன் சொத்து குல நாசம் எனும் பழமொழியை முழுமையாக நம்புபவன் நான். நீங்களும் துருவித் துருவிப் பார்க்கிறீர்கள்.
ஏற்கனவே எங்கள் ஆட்சிக்கு எதிராக ஏழு முக்கியக் கோயில்களில் தணிக்கை செய்தும் எவ்வித முறைகேடும் கண்டுபிடிக்கப்படவில்லை. இப்போதும் திறந்த மனதோடு சொல்கிறேன். ஆதாரத்துடன் எந்தவொரு குற்றச்சாட்டை நிரூபித்தாலும் அதை முழுமையாக ஏற்றுக்கொள்ளத் தயாராக இருக்கிறோம்" எனச் சவால் விடுத்தார்.
மேலும் பேசிய சேகர்பாபு, "ஆதாரத்தோடு என்ன குற்றச்சாட்டுகள் வைத்தாலும் அதை சட்டத்தின் படிக்கட்டுகளில் ஏறி எதிர்கொள்ள தயாராக இருக்கிறேன். ஓர் ஆட்சி நிறைவுற்றபோது, அதில் தொடங்கப்பட்ட பணிகள் அடுத்த ஆட்சியில் நிலுவையில் இருந்தால், அவற்றைத் தொடர்ந்து செயல்படுத்தி நிறைவேற்றுவதுதான் திறமையான ஆட்சிக்கு அடையாளம்." என்று அவர் பேசினார்.
கொள்ளை விளக்கக் குறிப்பில் 3,000 கோயில்களுக்கு குடமுழுக்கு நடத்தப்படும் என்று குறிப்பிட்டுள்ளீர்கள். ஆனால், திமுக ஆட்சியில் தேர்தல் அறிவிப்புக்கு முன்பு வரை 4,644 கோயில்களுக்கு குடமுழுக்கு செய்துள்ளோம். மொத்தமாக திமுக ஆட்சியில் 4,930 கோயில்களுக்கு குடமுழுக்கு செய்யப்பட்டது. தவெக ஐந்து ஆண்டுகளில் 3,000 கோயில்களுக்கு மட்டும் தான் குடமுழுக்கு நடத்தப்படும் என அறிவித்துள்ளீர்கள். இதுகுறித்து விளக்க வேண்டும்." எனத் தெரிவித்தார்.


Click it and Unblock the Notifications
