அமுதா அக்காவுக்கு சிரிப்பு தங்கல.. நாதக வேட்பாளரை பூத்தூவி வரவேற்ற திமுகவினர்! இது கூட தெரியாதா?
செங்கல்பட்டு: 2026 சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு வேட்பாளர்கள் தீவிரமாக வாக்கு சேகரித்து வருகின்றனர். அந்த வகையில் செங்கல்பட்டு சட்டமன்றத் தொகுதியில் போட்டியிடும் நாம் தமிழர் வேட்பாளர் அமுதா நம்பியார் வாக்கு சேகரிக்கச் சென்றபோது எதிர்பாராத ஒரு சம்பவம் நடந்திருக்கிறது. திமுக வேட்பாளருக்காக ஏற்பாடு செய்யப்பட்ட பெண்கள் நாம் தமிழர் கட்சியின் அமுதாவுக்கு மலர் தூவி வரவேற்பளித்த காட்சிகள் சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.
2026 சட்டமன்ற தேர்தல் ஏப்ரல் 23ஆம் தேதி வாக்குப்பதிவுடன் நடைபெற இருக்கிறது. கோடைக் காலத்தை விட தேர்தல் களத்தால் தமிழகம் தகிக்கிறது. திமுக, அதிமுக, நாம் தமிழர், தமிழக வெற்றி கழகம் என நான்கு பிரதான கட்சிகள் போட்டியில் உள்ளன.
இது தவிர ராமதாஸ் -சசிகலா அணி, தவாக வேல்முருகன் உள்ளிட்ட வரும் களத்தில் இருக்கின்றனர். தமிழ்நாடு முதலமைச்சர் மு க ஸ்டாலின், எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி, துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், தமிழக வெற்றிக் கழகத்தின் விஜய், நாம் தமிழரின் சீமான் உள்ளிட்ட பலரும் தமிழக முழுவதும் சூறாவளி சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகின்றனர்.

திமுக பிரச்சாரம்
மேலும் அந்தந்த தொகுதிகளில் வேட்பாளர்கள் கடும் வெயிலையும் பொருட்படுத்தாத தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் வாக்காளர்களை கவர்வதற்காக பல்வேறு வகைகளில் கவனிப்புகளும் அரங்கேறி வருகிறது. வீதி வீதியாக சென்று ஓட்டு கேட்கும் வேட்பாளர்களை மகிழ்ச்சிப்படுத்தும் விதமாக உள்ளூர் நிர்வாகிகள் கரகாட்டம், தப்பாட்டம், மலர் தூவி வரவேற்பு என பட்டைய கிளப்பி வருகின்றனர்.
அமுதா நம்பியார்
அப்படி திமுகவினர் ஏற்பாடு செய்த ஒரு நிகழ்வு தான் காமெடியில் முடிந்திருக்கிறது. தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலில் செங்கல்பட்டு தொகுதியில் திமுக சார்பில் கார்த்திக் தண்டபாணியும், அதிமுக சார்பில் கஜேந்திரனும் போட்டியில் இருக்கின்றனர். இது மட்டும் அல்லாமல் நாம் தமிழர் கட்சி சார்பில் அமுதா நம்பியார். தமிழக வெற்றி கழகத்தின் சார்பில் தியாகராஜன் ஆகியோர் களமிறங்கியுள்ளனர். திமுகவுக்கு பெரும் ஆதரவு செங்கல்பட்டு தொகுதியில் இருக்கும் நிலையில் உற்சாகத்துடன் பணியாற்றி வருகின்றனர் செங்கல்பட்டு திமுகவினர்.
திமுகவினர் வரவேற்பு
அதே நேரத்தில் வழக்கம் போல் பெரிய அளவிலான ஆரவாரம் இல்லாமல் பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார் அமுதா நம்பியார். அப்படி பிரச்சாரத்திற்கு அவர் செல்லும் போது தான் இந்த நிகழ்வு அரங்கேறி இருக்கிறது. கார்த்திக் தண்டபாணியை வரவேற்பதற்காக அப்பகுதியைச் சேர்ந்த ஏராளமான பெண்களை அழைத்து வந்த திமுகவினர் வரிசையில் நிக்க வைத்து கையில் மலர் தட்டுகளை கொடுத்து கார்த்திக் தண்டபாணியை வரவேற்க காத்திருந்தனர்.
வரவேற்பு வீடியோ
அப்போது எதிர்பாராத விதமாக அந்த வழியாக நாம் தமிழர் கட்சியின் அமுதா நம்பியார் தனது பிரச்சார வாகனத்தில் வந்தார். வேட்பாளர் வந்துவிட்டார் என யாரோ கிளப்பி விட வரிசையில் காத்திருந்த பெண்கள் அமுதா நம்பியாருக்கு பூத்தூவி வரவேற்பளித்தனர். திமுகவினர் தனக்கு வரவேற்பு அளிப்பதை பார்த்து அமுதா நம்பியாரை சிரிக்க முடியாமல் வாயை மூடி சமாளித்தார். அதே நேரத்தில் நாம் தமிழர் கட்சியினர் அந்த வீடியோக்களை எடுத்து தற்போது சமூக வலைதளங்களில் பரப்பி வருகின்றனர். எந்த வேட்பாளர் வருகிறார் என்பது கூட தெரியாமல் திமுகவினர் கூத்துவும் அளவுக்குத்தான் இருக்கிறது என கூறுகின்றனர்.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
தொங்கலில் விடப்பட்ட சிங்கப்பெண் அதிரடிப்படை! தவெக அரசு தீவிரத்தை உணரவில்லை என கனிமொழி சாடல் -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம் -
"மனக் குழப்பத்தில் மனோ தங்கராஜ்".. திமுகவுக்குள் பரபரப்பை உண்டாக்கிய அனிதா ராதாகிருஷ்ணன் பேச்சு -
சிவக்குமார் விஜய்யை பாராட்டி பேச பேச சத்யராஜ் கொடுத்த ரியாக்ஷன் பாருங்க.. அமைதியாக கவனிக்கும் திமுக -
“MLA-களை பிடிப்பதை விட்டுவிட்டு.. போலீஸை ஆக்கப்பூர்வமா செயல்பட வைக்கவும்!” விஜய்க்கு உதயநிதி அட்வைஸ் -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
வெறும் 10 நிமிடங்கள்தான்.. உடனே வெளியே வந்த விஜய்! மோடி உடனான சந்திப்பில் இப்படி நடந்ததே இல்லை! -
“காங்கிரஸ், கம்யூனிஸ்ட்களை விமர்சிக்க அவர்களுக்கு துணிச்சல் இல்லை”.. திருமாவளவன் அட்டாக்! -
டோட்டலாக தனிமைப்படுத்தப்பட்ட திமுக! உச்சக்கட்ட ஹேப்பியில் பாஜக.. தவெக விஜய் அரசுக்கு சிக்கலா? -
மோடி, நிர்மலா சீதாராமன் சந்திப்பின்போது.. கூடவே போன ஜோசியர்! சலசலப்பை கிளப்பிய விஜய்! -
97 ரன்களில் அவுட்.. ஒட்டுமொத்த மைதானமும் சோகம்.. உலக சாதனையை தவறவிட்ட வைபவ் சூர்யவன்ஷி!












Click it and Unblock the Notifications