திமுக இளைஞரணி 2வது மாநில மாநாடு! 10 லட்சம் இளைஞர்களை திரட்டணும்! உதயநிதி ஸ்டாலின் கொடுத்த டார்கெட்!
சென்னை: திமுக இளைஞரணியின் 2வது மாநில மாநாட்டிற்கு 10 லட்சம் இளைஞர்களை திரட்ட வேண்டும் என புதிய நிர்வாகிகளுக்கு அசைன்மெண்ட் கொடுத்திருக்கிறார் உதயநிதி ஸ்டாலின்.
மேலும் மாநாட்டை நடத்த முதலமைச்சர் ஸ்டாலின் பச்சைக் கொடி காட்டியிருப்பதால் அவருக்கு நன்றி தெரிவித்து இளைஞரணி புதிய நிர்வாகிகள் அறிமுக கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அதன் விவரம் வருமாறு;

''1980 ஜூலை 20 அன்று மதுரை ஜான்சி ராணி பூங்காவில் உருவான இளைஞர் அணி, இன்று இளைஞர்களை அரசியல்மயப்படுத்தி வளர்த்தெடுத்திடும் களமாக உள்ளது.
கடந்த 2007 ஆம் ஆண்டு திருநெல்வேலியில் நடைபெற்ற இளைஞர் அணியின் முதல் மாநாட்டைத் தலைமையேற்று, மிகுந்த எழுச்சியோடு சிறப்புற நடத்தினார் நம்முடைய தலைவர் ஸ்டாலின். அவருடைய வழியில் வீறுநடை போடும் இளைஞர் அணியின் இரண்டாவது மாநில மாநாட்டை நடத்துவதற்கான அனுமதியை திமுக தலைவர் வழங்கி உள்ளார்.
இளைஞர் அணியின் மீது நம்பிக்கை வைத்து, இந்த வாய்ப்பை வழங்கியுள்ள கழகத் தலைவர் அவர்களுக்கு இளைஞர் அணியின் இந்த மாவட்ட - மாநில - மாநகர அமைப்பாளர், துணை அமைப்பாளர்கள் கூட்டம் நன்றி தெரிவித்துக் கொள்கிறது.
தலைவரின் நம்பிக்கையையும், எதிர்பார்ப்பையும் நிறைவேற்றும் வகையில், 10 லட்சம் இளைஞர்களைப் பங்கேற்கச் செய்து மாநாட்டுப் பணிகளைச் சிறப்புற மேற்கொள்ள, இந்தக் கூட்டம் உறுதியேற்கிறது.''












Click it and Unblock the Notifications