Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

பாரதத்தின் நிரந்தர பிரதமர்.. வட இந்தியாவில் திமுக சிலிண்டர் விளம்பரம் ஹிட்.. தர்ம சங்கடத்தில் பாஜக

Subscribe to Oneindia Tamil

சென்னை: 2021ம் ஆண்டு சட்டசபை தேர்தல் பிரச்சாரத்தின் போது, சிலிண்டர் விலையை சுட்டிக்காட்டி திமுக தேர்தல் விளம்பரம் தயாரித்தது. அதில் பிரதமர் நரேந்திர மோடியை வஞ்சப்புகழ்ச்சி செய்து விளம்பரம் வெளியிட்டது. அந்த திமுகவின் சிலிண்டர் விளம்பரம் அப்போது வைரலானது.. ஆனால் 2026ல் சிலிண்டர் பிரச்சனை உச்சம் ஏற்பட்டுள்ளதால், வட இந்தியாவில் டிரெண்டாகி வருகிறது.இதனால் உற்சாகமான திமுக, தமிழ்நாட்டில் அப்படியே பயன்படுத்த முடிவு செய்துள்ளது.

2021 சட்டசபை தேர்தலின் போது அதிமுக பாஜக, பாமக உள்பட பல்வேறு கட்சிகள் ஒரு அணியாகவும், திமுக காங்கிரஸ், விசிக , இடதுசாரிகள் உள்பட பல்வேறு கட்சிகள் ஒரு அணியாகவும், நாம் தமிழர் கட்சி ஒரு அணியாகவும் போட்டியிட்டன. இதில் திமுக கூட்டணி மிகப்பெரிய அளவில் வென்று ஆட்சியை பிடித்தது. திமுக தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சியை கைப்பற்றியது. அதிமுக கூட்டணி 75 இடங்களில் வென்றது.

DMK s Cylinder Advertisement a Hit in North India A Twist for the BJP

திமுக பிரச்சாரத்தின் போது, பாஜகவையும், அதிமுகவையும் கடுமையாக விமர்சித்து விளம்பரங்களை வெளியிட்டது. அதில் ஒரு விளம்பரம் தான் சிலிண்டர் விளம்பரம். அதில் சர்காஸம் செய்து மோடியை கிண்டல் செய்திருப்பார்.. சிலிண்டர் டெலிவரி செய்யும் நபர் சிலிண்டருடன் வீட்டிற்குள் வருவார்... அந்த சிலிண்டரை வாங்கும் பெண், நகைகளை கழட்டி சிலிண்டர் டெலிவரி செய்யும் நபரிடம் கொடுப்பார்.

அப்போது சில அரசியல்வாதிகள், வெற்றி நடை போடும் தமிழகமே என்று பாட்டுப்பாடுவார்கள். அத்துடன் பாட்டுப்பாடியபடி குறுக்கே மறுக்கே ஓடுவார்கள். இதனை சிலிண்டர் வாங்கும் பெண் முறைத்தபடி பார்ப்பார். அதாவது சிலிண்டர் வாங்க பெரிய விலை கொடுக்க வேண்டியது வருகிறது. இப்போது கூட இவர்கள் பிரதமர் மோடியை பாராட்டி பாடுகிறார்களே என்பது போல் சர்காஸம் செய்திருக்கும் திமுக. அதாவது தமிழில் சொல்வது என்றால், பாராட்டுவது போல் வஞ்சபுகழ்ச்சி செய்திருக்கும் திமுக.. அந்த சிலிண்டர் விளம்பரம் அப்போது ஏக பிரபலமாக இருந்தது.

இந்நிலையில் 2021ல் சிலிண்டர் விலையில் தான் சிறிய அளவில் பிரச்சனை இருந்தது. ஆனால் இப்போது சிலிண்டருக்கு மிக கடுமையான தட்டுப்பாடு நிலவுகிறது. என்ன தான் வீட்டு சிலிண்டர் 42 நாட்கள் கழித்து புக்கிங் செய்ய முடியும்.. நகரங்களில் 25 நாட்கள் கழித்து புக்கிங் செய்ய முடியும் என்றால், உலகளாவிய சூழலால் சிலிண்டர் கிடைக்கவில்லை.. கடைகளுக்கு வணிக சிலிண்டர் தட்டுப்பாடு ஏற்பட்டதே, வீடுகளுக்கும் சிலிண்டர் தட்டுப்பாடு ஏற்படக்காரணமாக அமைந்தது. தற்போது வீடுகளுக்கு சிலிண்ட்ர் கிடைக்கவில்லை.. இதனால் மக்கள் அவதிப்பட்டு வருகிறார்கள்.

இப்படியா சூழலில் வட இந்தியாவில் திமுகவின் 2021 சிலிண்டர் விளம்பரம் டிரெண்டாகி வருகிறது. அதில் பாரதத்தின் நிரந்தர பிரதமர்.. நரேந்திர மோடி.. பாரதிய ஜனதா கட்சியாளர்.. வறுமை நீக்கி வளம் சேர்ப்பவர்... நரேந்திர மோடி.. வாழ்வாதாரம் உயர செய்பவர்.. கள்ளம் இல்லா உள்ளம் கொண்டவர் என்று பாடல் வரிகள் இடம் பெற்றுள்ளது. புஸ்பவனம் குப்புசாமி பாடிய பாடலின் வரிகளை இணைத்து சர்காஸம் செய்யப்பட்டுள்ளது.

இதனால் உற்சாகடைந்த திமுக, சிலிண்டர் விளம்பரத்தை அப்படியே பயன்படுத்த திட்டமிட்டுள்ளது. புதிதாகவும் சில விளம்பரங்களை இறக்கவும் திட்டமிட்டுள்ளது. தேர்தலுக்கு சில நாட்களே இருக்கும் போது, கடுமையாக வைரலாக்க திமுக திட்டமிட்டுள்ளதாம். இதனிடையே தேர்தல் நேரத்தில் சிலிண்டருக்கு ஏற்பட்ட தட்டுப்பாடு, பாஜகவை தர்ம சங்கடத்தில் ஆழ்த்தி உள்ளது. என்னதான் உலகளாவிய காரணம் என்றால், உள்ளூர் அரசியலுக்கு திமுக பயன்படுத்துவதை கண்டு பாஜக கொதித்து போயிருக்கிறது. பதிலடி விரைவில் வரும் என எதிர்பார்க்கலாம்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+