“தற்குறி”.. இஸ்லாமியரை தாக்கிய சீமான்.. திமுகவிற்கு வந்ததே கோபம்.. ராஜீவ் காந்தி சொன்னதை பாருங்க
சென்னை: சமீபத்தில் இஸ்லாமியர்கள் மற்றும் கிறிஸ்தவர்கள் குறித்து சீமான் கூறியிருந்த கருத்து பெரும் சலசலப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில் இது குறித்து பேசியுள்ள திமுகவின் ராஜீவ்காந்தி, "சீமான் ஆர்எஸ்எஸின் கருத்தை முன்வைக்கிறார்" என விமர்சித்திருக்கிறார்.
மணிப்பூர் சம்பவம் குறித்து கடந்த 30ம் தேதி சென்னை வள்ளுவர் கோட்டத்தில் நாம் தமிழர் கட்சி சார்பில் போராட்டம் நடத்தப்பட்டது. இந்த போராட்டத்தில் அவர் பேசிய கருத்துக்கள் பல பெரும் விமர்சனத்திற்கு உள்ளாக்கப்பட்டது. அதாவது "இஸ்லாத்தையும், கிறிஸ்துவத்தையும் ஏற்றுக் கொண்டவர்கள் தேவனின் பிள்ளைகள் என்று. ஆனால் அவர்கள் சாத்தானின் குழந்தைகளாக மாறி பல ஆண்டுகள் ஆயிபோச்சு" என்று கடுமையாக பேசியிருந்தார்.

இதனையடுத்து இன்றும் பேட்டியளிக்கையில், "மதத்தை விட, ஜாதியை விட, இனத்தைவிட மொழிதான் முக்கியம். மொழி அடையாளம்தான் முக்கியம் . இதில் சிறுபான்மையினர் என்று எங்கு வந்தது. இஸ்லாமியர்கள், கிறிஸ்துவர்கள் தமிழர்கள். அதனால் அவர்கள் பெரும்பான்மையினர், சிறுபான்மையினர் கிடையாது. அவர்கள் பெரும்பான்மை தேசிய இனத்தை சேர்ந்தவர்கள். யார் சிறுபான்மையினர்? செருப்பை கழட்டி அடிப்பேன்" என பேசியிருந்தார்.
இந்நிலையில் இவரது கருத்துக்களுக்கு அரசியல் கட்சியினர் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இது குறித்து திமுகவின் மாணவரணி தலைவர் ராஜீவ்காந்தி கூறுகையில், "இந்திய அரசியல் அமைப்பு சட்டத்தில் சிறுபான்மை என்கிற சட்ட பாதுகாப்பினை பெற அண்ணல் அம்பேத்கர்,ஆசாத்,காயிதே மில்லத் என பல பேர் வாதாடி,போராடித்தான் இந்த உரிமையை பெற்றனர் சீமான் போன்ற தற்குறிகள் தங்களின் சினிமா வசனம் என நினைத்து தன் வயிற்று பிழைப்புக்காக சட்ட பாதுகாப்பு மற்றும் உரிமைகளை நீர்த்து போக செய்கின்றனர்!
சிறுபான்மை மக்களின் உரிமையை தட்டி பறிக்க பார்க்கும் தற்குறி சங்கீ சீமான்!
— R.Rajiv Gandhi (@rajiv_dmk) August 3, 2023
இந்திய அரசியல் அமைப்பு சட்டத்தில் சிறுபான்மை என்கிற சட்ட பாதுகாப்பினை பெற அண்ணல் அம்பேத்கர்,ஆசாத்,காயிதே மில்லத் என பல பேர் வாதாடி,போராடித்தான் இந்த உரிமையை பெற்றனர் சீமான் போன்ற தற்குறிகள் தங்களின் சினிமா…
மதசிறுபான்மை என்கிற சொல் தற்போது அரசியல் அமைப்பு சட்டத்தில் சிறுபான்மையினரின் நலன்களைப் பாதுகாத்தல் தொடர்பான சரத்து 29 மற்றும் சரத்து 30 கல்வி நிறுவனங்களை நிறுவுவதற்கும் நிர்வகிப்பதற்கும் சிறுபான்மையினரின் உரிமை பற்றி கூறுகிறது. கல்வி மற்றும் பொருளாதார பாதுகாப்பினையும் சுதந்திரத்தினையும் தருகிறது அதற்கு மாறாக பிரிவினையும் வேற்றுமையும் தரவில்லை!
இந்திய அரசியல் சட்டத்தில் மதத்தால் சிறுபான்மை என்கிற சிறப்பு சட்ட பிரிவினை நீக்க வேண்டும் சிறுபான்மை என்ற போர்வைக்குள் ஒளிந்து கொண்டு இஸ்லாமியர்,கிறிஸ்தவர்கள் அதிகப்படியான உரிமைகளை அனுபவிக்கின்றனர் எனவே சிறுபான்மை என்ற சொல்லை இல்லாது ஆக்க வேண்டும் என அரசியல் அமைப்பு சட்டம் எழுத தொடங்கிய காலம் தொட்டு நீண்ட நெடிய காலமாக ஆர்எஸ்எஸ் என்கிற மத அடிப்படைவாத அமைப்பு வலியுறுத்தி வருகிறது!
சிறுபான்மை என்கிற வார்த்தை அரசியல் சட்டத்தில் கூடாது என்பதுதான் ஆர்எஸ்எஸின் வாதம் அதே வாதத்தை தான் இன்று சீமான் வைக்கிறார்! சீமானும் ஆர்எஸ்எஸ்ம் ஒன்று தான்" என்று விமர்சித்திருக்கிறார்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications