'நடிகை'யுடன் தனி விமான பயணம்- போலி அரசியல்வாதி- முதல் மேடையிலேயே விஜய்யை வெளுத்த சத்யராஜ் மகள்!
சென்னை: தமிழ்நாடு துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், சிலரைப் போல (நடிகர் விஜய்) ஏசி கேரவனில், சொகு விமானத்தில் பிரண்ட் கூட, பிரண்ட் கல்யாணத்துக்கு போற போலி அரசியல்வாதி கிடையாது என்று திமுகவில் அண்மையில் இணைந்த அக்கட்சியின் தகவல் தொழில்நுட்ப அணி துணைச் செயலாளரான திவ்யா சத்யராஜ் சாடியுள்ளார்.
நடிகர் சத்யராஜின் மகளான திவ்யா சத்யராஜ் அண்மையில் திமுகவில் இணைந்தார். இதனையடுத்து திமுகவில் அவருக்கு உடனே கட்சிப் பதவி வழங்கப்பட்டது. சென்னையில் நேற்று நடைபெற்ற திமுக கூட்டத்தில் திவ்யா சத்யராஜ் பேசியதாவது: தந்தை பெரியாரின் வரலாறும், திமுகவின் வரலாறும் அண்ணா, கருணாநிதியின் வரலாறுகளும் நான் கல்லூரி நாட்களில் படித்திருக்கிறேன். அதை எழுதி வைத்து இன்று பேசிவிடலாம் என நினைத்தேன். ஆனால் மனதில் உள்ளதைத்தான் இன்று பேசப் போகிறேன்.

கருணாநிதியின் ரசிகை
கல்லூரியில் என்னிடம் கேட்ட போது நான் கருணாநிதியின் ரசிகை என பெருமையாக சொன்னேன். ஒரு பெண்ணாக இன்று நான் மேடையில் பேசுவதற்கு காரணம் கருணாநிதிதான். அப்பா காசில் வாழாமல் சுயமாக சம்பாதிக்க வேண்டும் என்ற தைரியம் தந்ததும் கருணாநிதிதான். சங்கிலிகளை உடைத்துவிட்டு கனவுகள் பின்னால் ஓட வேண்டும் என்கிற தைரியம் வந்ததற்கும் கருணாநிதியே காரணம். தமிழக அமைச்சர் சேகர்பாபு, மாவீரன் சேகர்பாபு.
திமுக வரலாறு படிக்கப்பட வேண்டும்
திமுகவின் வரலாற்றை அனைவரும் படிக்க வேண்டும். அந்த வரலாற்றைப் படித்தால்தான் வாழ்க்கை, வெற்றி, தோல்வி, தியாகம், மனிதநேயம் பற்றி தெரிந்து கொள்ள முடியும். எனக்கு என்னைப் பற்றிய புரிதல் வருவதற்கு திமுகவின் வரலாறுதான் காரணம். கல்லூரி நாட்களில் என் அறையில் தந்தை பெரியார், என் அப்பா சத்யராஜ், கருணாநிதி, மு.க.ஸ்டாலின் படங்கள்தான் இருக்கும்.
நடிகர் விஜய் மீது அட்டாக்
ஏசி கேரவனில், சொகுசு விமானத்தில் பிரண்ட் கூட, பிரண்ட் கல்யாணத்துக்கு போற போலி அரசியல்வாதி கிடையாது உதயநிதி ஸ்டாலின், கடினமாக உழைக்கும் நாயகன். கடமை, கண்ணியம், கட்டுப்பாடு என்ற கோட்பாடுகளின் மீது நம்பிக்கை கொண்டவர். மழை வந்தாலும் வெள்ளம் வந்தாலும் நமக்காக இறங்கி வேலை செய்கிறவர். பாஜக அரசிடம் இருந்து தமிழ்நாட்டை காப்பாற்ற வந்த மாமன்னன். அவரை எதிர்த்து யார் எங்க நின்றாலும் டெபாசிட் பறி போய்விடும். உதயநிதி ஸ்டாலின், யாராலும் வெல்ல முடியாத நாயகன்.
என்றைக்கும் என் தலைவன் ஸ்டாலின்
நேற்று இன்று நாளை.. நான் உயிருடன் இருக்கும் வரை மு.க.ஸ்டாலின் மட்டுமே என் தலைவர். அண்மையில் வாடகை ஆட்டோ ஓட்டும் பெண்களுக்கு சொந்த ஆட்டோ வாங்கி தந்துள்ளார் முதல்வர் ஸ்டாலின். புதுமைப் பெண் உள்ளிட்ட திட்டங்கள் மூலம் உண்மையான பெண்ணியவாதி என்பதை முதல்வர் ஸ்டாலின் நிரூபித்துள்ளார்.
கொரோனா கால சவால்
கொரோனா உச்சியில் இருந்த காலத்தில்தான் தமிழ்நாட்டின் முதல்வராக மு.க.ஸ்டாலின் பதவியேற்றார். அது சவாலான தருணம். யார் உயிரோடு இருப்பார்கள் என தெரியாத காலத்தில் முதல்வராக பொறுப்பேற்ரு கொரோனாவை கட்டுப்படுத்தினார் முதல்வர் ஸ்டாலின்.
விளக்கு பிடிக்க சொன்ன மோடி
ஆனால் பிரதமர் மோடியோ, பால்கனியில் ஜாலியாக நின்று விளக்கு புடிக்கலாம் என்றார். விளக்கு பிடிப்பதற்கான நேரமா அது? எல்லோரும் செத்துக் கொண்டிருக்கும் தருணத்தில் இப்படித்தான் செய்தார் பிரதமர் மோடி.
திராவிட மாடல் ஆட்சியே காப்பாற்றும்
அனைத்து மதங்களுக்கும் ஒரே மரியாதை தரக் கூடிய ஒரே தலைவர் முதல்வர் ஸ்டாலின் மட்டும்தான்.விவசாயிகளுக்கும் மீனவர்களுக்கும் ஆரோக்கியத்துக்கும் மரியாதை தரக் கூடிய ஒரே தலைவர் முதல்வர் ஸ்டாலின். திராவிட மாடல் ஆட்சிதான் பெண்களையும் இந்த நாட்டையும் காக்கும். இவ்வாறு திவ்யா சத்யராஜ் பேசினார்.
-
வீரமணி ஒரே போடு.. திருச்சியில் முதலமைச்சர் விஜய் பேசிய அந்த பேச்சால் மொத்த பேருக்கும் முகச்சுளிப்பு? -
எடப்பாடியை பார்க்க விஜய் டைம் கேட்கவில்லை.. ஆதவ் ஒரு சந்தர்ப்பவாதி! போட்டுத் தாக்கிய கேபி முனுசாமி! -
நிலத்தை உடனே கைப்பற்ற வேண்டும்.. விஜய் வெளியிட்ட புது உத்தரவு.. 15 திட்டங்கள் 'Waiting'! -
உங்க வயசு என் அனுபவம்.. சீனியருக்கு மரியாதையில்லை! ஆனந்த் - ஆதவ் - அருணுக்கு அடுத்து செங்கோட்டையன்! -
தலைமைச் செயலகமா? தவெக தலைமை அலுவலகமா? வானதி சீனிவாசன் கேள்வி -
ஸ்டாலினை ஓரங்கட்டிவிட்டு விஜய்யை வாரி அணைத்த ராகுல் காந்தி! பின்னணியில் டெல்லி மாஸ்டர் பிளான் -
மகள் கல்யாணத்திற்காக முதல்வர் விஜய்யை சந்தித்த குஷ்பு குடும்பம்.. வெளியே வந்ததும் உருக்கமான பதிவு -
அதிமுக பெயரையே தவிர்க்கும் விஜய்?.. தவெக வியூகத்தால் அதிருப்தியில் தொண்டர்கள்! -
"6 மாத இலக்கு நிர்ணயித்த முதல்வர் விஜய்".. நகர்ப்புறங்களில் சுகாதாரம், பசுமைக்கு முக்கியத்துவம் -
ரீல்ஸ் போட்டு ஆட்சிக்கு வந்து.. ரீல் விட்டு ஆட்சியை தொடரலாமா? விஜய் கனவு பலிக்காது! டிடிவி அட்டாக்! -
ஃப்ரண்ட்ஸ் இப்போ என்னாச்சுன்னா.. போலீஸ் ஸ்டேஷனையும் விடாத தவெகவினர்.. ரீல்ஸ் அலப்பறையால் அலறும் காவலர்கள் -
இன்ஸ்டாவில் பொய் செல்லி.. ஆட்சிக்கு வந்துட்டாரு விஜய்! யாரும் கலங்க வேண்டாம்.. ஆறுதலாக பேசிய கேடிஆர்












Click it and Unblock the Notifications