முக்கிய அறிவிப்பு வெளியிட்ட ரேஷன்.. உடனே போனை எடுத்து.. இந்த நம்பருக்கு டயல் பண்ணுங்க.. செம முடிவு
சென்னை: தமிழ்நாட்டில் ரேஷன் கடைகள் தொடர்பான முக்கியமான அறிவிப்பு ஒன்று வெளியாகி உள்ளது. ரேஷன் கடைகள் தொடர்பான புகார்களை வழங்க உணவுப் பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை அமைச்சகம் தொடர்பு எண்களை வெளியிட்டு உள்ளது.
ரேஷன் உத்தரவு: தமிழ்நாடு முழுக்க புதிய ரேஷன் கார்டு வழங்கும் பணி தொடங்கி உள்ளது. புதிதாக 2 லட்சம் புதிய ரேஷன் அட்டை வழங்கும் பணி தொடங்கியுள்ளது. புதிய ரேஷன் அட்டை கோரி இதுவரை 2 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளனர்.

மக்களவைத் தேர்தல் காரணமாக புதிய ரேஷன் அட்டை வழங்கும் பணி நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. மக்களவைத் தேர்தல் முடிந்த நிலையில் புதிய ரேஷன் அட்டை வழங்கும் பணி தொடங்கப்பட்டுள்ளது என்று உணவுப்பொருள் வழங்கல் துறை தெரிவித்துள்ளது. இன்று முதல் தினமும் புதிய ரேஷன் அட்டைகள் வழங்கப்படும்.
தமிழ்நாடு ரேஷன் கடைகளில் விரைவில் புதிய பொருள் ஒன்றை விற்பனை செய்ய அரசு திட்டமிட்டு வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. அதன்படி ரேஷன் கடைகளில் புதிதாக இனிமேல் தேங்காய் எண்ணெய் விற்பனை செய்ய திட்டம் கொண்டு வரப்பட உள்ளது. தேங்காய் எண்ணெய் நேரடியாக விவசாயிகளிடம் வாங்கி விற்பனை செய்ய திட்டமிடப்பட்டு உள்ளது. கடந்த லோக்சபா தேர்தலில் இதற்கான அறிவிப்புகள் பிரச்சாரத்தில் திமுகவினர் மூலம் கொடுக்கப்பட்டது. தற்போது அதற்கான சாத்திய கூறுகளை தமிழ்நாடு அரசு ஆய்வு செய்து வருகிறதாம்.
தமிழ்நாடு ரேஷன் கடைகள் தொடர்பான முக்கியமான அறிவிப்பு ஒன்றை தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ளது. ரேஷன் கடைகளுக்கு பொருட்களை சப்ளை செய்யும் நுகர்பொருள் வாணிபக்கழகம் சார்பாக முக்கியமான உத்தரவு ஒன்று சென்றுள்ளது.தமிழ்நாட்டில் ரேஷன் பொது விநியோக திட்டம் மிக சிறப்பாக செயல்பட்டு வருகிறது. இந்த திட்டத்தில் செய்யப்படும் பல்வேறு மாற்றங்கள் தேசிய அளவில் பல மாநிலங்களில் கவனம் பெற தொடங்கி உள்ளன.
முக்கிய நம்பர்; அனைவருக்கும் உணவு மற்றும் ஊட்டச்சத்து பாதுகாப்பினை உறுதி செய்யும் பொருட்டு தமிழ்நாடு அரசு பொது விநியோகத் திட்டம் / சிறப்பு பொது விநியோகத் திட்டம் ஆகியவற்றின் மூலம் அத்தியாவசியப் பண்டங்களை குடும்ப அட்டைதாரர்களுக்கு நியாய விலைக் கடைகள் மூலம் விநியோகம் செய்து வருகிறது.
அவ்வாறு, விநியோகம் செய்யப்படும் அத்தியாவசியப் பண்டங்களை சிலர் முறைகேடாக கள்ளச்சந்தையில் விற்று அதிக லாபம் ஈட்டும் நோக்கத்துடன் செயல்பட்டு வருகின்றனர்.
உணவுப் பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை அலுவலர்கள் மற்றும் குடிமைப் பொருள் குற்றப் புலனாய்வுத் துறை அலுவலர்கள் தொடர் ரோந்து பணி மேற்கொண்டு அத்தியாவசியப் பண்டங்கள் கடத்தல் மற்றும் பதுக்கலில் ஈடுபடுவோர் / உடந்தையாக செயல்படுவோர் மீது, இன்றியமையாப் பண்டங்கள் சட்டம் - 1955 மற்றும் தொடர்புடைய கட்டுப்பாட்டு ஆணைகளின் கீழ் வழக்கு பதிவு செய்து உரிய மேல் நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.
மேலும், தொடர் குற்றச் செயல்களில் ஈடுபடும் நபர்கள் கள்ளச்சந்தை தடுப்பு மற்றும் இன்றியமையாப் பண்டங்கள் வழங்கல் பராமரிப்பு சட்டம். 1980-ன் படி அவ்வப்போது தடுப்பு காவலிலும் வைக்கப்பட்டு வருகின்றனர். கடந்த 01.05.2024 முதல் 31.05.2024 வரையிலான ஒரு மாத காலத்தில் கள்ளச்சந்தையில் விற்பதற்காக கடத்த முயன்ற, ரூ.35,30,731/- (ரூபாய் முப்பத்து ஐந்து லட்சத்து முப்பதாயிரத்து எழுநூற்று முப்பத்து ஒன்று மட்டும்) மதிப்புள்ள 3995.67 குவிண்டால் பொது விநியோகத்திட்ட அரிசி, 126 எரிவாயு உருளைகள், 104 லிட்டர் பொது விநியோகத்திட்ட மண்ணெண்ணெய்.
305 கிலோ கோதுமை, 25 கிலோ துவரம்பருப்பு, 24750 லிட்டர் கலப்பட டீசல் ஆகியவையும், மேற்கண்ட கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட 175 வாகனங்களும் கைப்பற்றுகை செய்யப்பட்டுள்ளன. குற்றச்செயலில் ஈடுபட்ட 1032 நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். கள்ளச்சந்தை தடுப்பு மற்றும் இன்றியமையாப் பண்டங்கள் வழங்கல் பராமரிப்புச் சட்டம் 1980- ன் கீழ் 16 நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இன்றியமையாப் பண்டங்கள் கடத்தல் மற்றும் பதுக்கல் தொடர்பாக பொது மக்கள் 1800
599 5950 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண்ணை தொடர்பு கொண்டு புகார் தெரிவிக்கலாம்
என்றும் தெரிவித்துக் கொள்ளப்படுகிறது.












Click it and Unblock the Notifications