இந்த 5 விஷயத்தை மறந்துடாதீங்க.. இல்லைன்னா பல லட்சம் அபராதம் கட்ட வேண்டி இருக்கும்.. போச்சு
சென்னை: வருமான வரித்துறை நோட்டீஸ் எந்த மாதிரியான பரிவர்த்தனைகளுக்கு அளிக்கப்படும் என்று வருமான வரித்துறை லிஸ்ட் ஒன்றை வெளியிட்டுள்ளது. வருமான வரி தாக்கல் செய்வதற்கான கால அவகாசம் தொடங்கி உள்ளது. இன்னும் பலருக்கு ITR விண்டோ திறக்கவில்லை என்றாலும் வரும் நாட்களில் கொஞ்சம் கொஞ்சமாக நீங்கள் வருமான வரி தாக்கல் செய்ய முடியும்.
ஏப்ரல் 2ம் தேதி முதல் வருமான வரி ரிட்டர்ன்ஸ் தாக்கல் செய்யும் கால அவகாசம் தொடங்கி உள்ளது. ஆனால் ஏப்ரல் தொடங்கி 1 வாரம் ஆகியும் கூட.. இதுவரை வருமான வரி ரிட்டர்ன்ஸ் தாக்கல் செய்யும் தளத்தில் இந்த நிதி ஆண்டிற்கான அதாவது 2025-26 வருடத்திற்கான ரிட்டர்ன்ஸ் திறக்கவில்லை. இதுவரை சம்பளதாரர்கள் பலரும் வருமான வரி தாக்கல் செய்ய முடியாத சூழல் உள்ளது.

இதில் இந்தியாவில் மாத வருமானம், மற்ற வகைகளில் வருமானம் பெறக்கூடியவர்கள் எல்லோரும் வருமான வரி செலுத்த வேண்டும். இதற்காக ஒவ்வொரு வருடமும் ரிட்டர்ன்ஸ் தாக்கல் செய்ய அவகாசம், நேரம் கொடுக்கப்படும். இந்த வருடம் ஜூலை 31 வருமான வரி செலுத்துவோர் ரிட்டர்ன்ஸ் தாக்கல் செய்ய நேரம் கொடுக்கப்பட்டது . கடந்த ஆண்டு ஜூலை 31ஆம் தேதி வரை சுமார் 5.83 கோடி வருமான வரிக் கணக்குகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. இந்த நிலையில்தான் வருமான வரித்துறை நோட்டீஸ் எந்த மாதிரியான பரிவர்த்தனைகளுக்கு அளிக்கப்படும் என்று வருமான வரித்துறை லிஸ்ட் வெளியிட்டுள்ளது.
1.வங்கி FD களில் அதிக மதிப்புள்ள வைப்புகளை செய்தல்
வங்கி எஃப்டியில் ரொக்க வைப்புத்தொகை ஒரு டிரான்ஸாக்சனில் ரூ.10 லட்சத்துக்கு மேல் இருக்கக்கூடாது. இது தொடர்பாக ஏற்கனவே மத்திய நேரடி வரிகள் வாரியம் (CBDT) ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதில், ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட நிலையான வைப்புகளில் நிர்ணயிக்கப்பட்ட வரம்பை விட தனிநபர் டெபாசிட்கள் இருந்தால் வங்கிகள் கட்டாயம் தெரிவிக்க வேண்டும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளதால் கூடுதல் முதலீடுகளை செய்தால் நோட்டீஸ் கிடைக்கும்.
2. சேமிப்பு வங்கி கணக்குகளில் பண வைப்பு
ஒரே டிரான்சாக்ஸனில் வங்கிக் கணக்கில் டெபாசிட் செய்யக்கூடிய தொகை ரூ. 10 லட்சம். வருமான வரித்துறை, ரூ.100000க்கு மேல் முதலீடு செய்யும் சேமிப்புக் கணக்கு வாடிக்கையாளருக்கு நோட்டீஸ் அனுப்பும். அதேபோல் வங்கிக் கணக்கிலிருந்து 10 லட்சம் ரூபாய்க்கு அதிகமாக எடுத்தாலோ, போட்டாலோ அதற்கு கணக்கு காட்ட வேண்டும். இல்லையென்றால் நோட்டீஸ் வழங்கப்படும்.
3.கிரெடிட் கார்டு பில்களை செலுத்துதல்
கிரெடிட் கார்டு நிலுவைத் தொகைக்கு ரூ.1 லட்சம் கட்டுப்பாடு விதிக்கப்பட்டு உள்ளது. அதற்கு மேற்பட்டவை கண்காணிக்கப்பட வேண்டும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. மேலும், ஒரு நிதியாண்டில் 10 லட்சங்கள் அல்லது அதற்கும் மேல் கிரெடிட் கார்டு பில்களை செட்டில் செய்தால் அதற்கு கணக்கு காட்ட வேண்டும். இல்லையென்றால் அதற்கும் நோட்டிஸ் அளிக்கப்படும். உங்கள் கிரெடிட் கார்டு தகவல் உங்கள் பான் கார்டுடன் இணைக்கப்பட்டுள்ளதால் வரி அதிகாரிகள் உங்கள் கிரெடிட் கார்டு பரிவர்த்தனைகளைக் கண்காணிக்க முடியும். உங்கள் கிரெடிட் கார்டு தகவலுடன் பான் கார்டை இணைப்பதன் மூலம் நீங்கள் ஆன்லைனில் செலவழிக்கும் தொகையை அரசு உடனடியாகக் கண்காணிக்க முடியும். ITR (வருமான வரி அறிக்கை) சமர்ப்பிக்கும் போது இந்த பரிவர்த்தனை விவரங்களையும் வெளிப்படுத்தப்பட வேண்டும்.
4. மியூச்சுவல் ஃபண்டுகள், பங்குகள், பத்திரங்கள் அல்லது கடனீட்டுப் பத்திரங்கள்
இதில் முதலீடு செய்யும் முதலீட்டாளர்கள், இந்த முதலீடுகளில் ரொக்கப் பரிவர்த்தனைகள் 10 லட்சம் ரூபாய்க்கு மிகாமல் இருப்பதை உறுதி செய்ய வேண்டும். ஒரு நிதியாண்டில் 10 லட்சம் மட்டுமே ஆவணம் இல்லாமல் பரிவர்த்தனை செய்ய முடியும். வரி செலுத்துவோரின் அதிக மதிப்புள்ள பணப் பரிவர்த்தனைகளைக் கண்காணிக்க வருமான வரித் துறை உத்தரவிட்டுள்ளது. இதற்கு கணக்கு காட்டவில்லை என்றால் நோட்டீஸ் வழங்கப்படும்.
5. அசையாச் சொத்தை வாங்குதல் அல்லது விற்றல்
நீங்கள் ஒரு சொத்தை ரூ.30 லட்சத்திற்கு வாங்கினால், நீங்கள் வரி அதிகாரிகளின் கண்காணிப்பின் கீழ் வருவீர்கள். 30 லட்சம் அல்லது அதற்கு மேல் பரிவர்த்தனை செய்பவர்கள் இதற்கு கணக்கு காட்ட வேண்டும். சொத்து பதிவாளர், அசையாச் சொத்தின் மீதான முதலீடு அல்லது விற்பனைக்கு கணக்கு காட்ட வேண்டும். இல்லையென்றால் வருமான வரி நோட்டீஸ் வழங்கப்படும்.












Click it and Unblock the Notifications