ரயிலில் நீங்கள் முன்பதிவு செய்த சீட்டில் யாராவது உட்கார்ந்துகொண்டு சீட் தர மறுத்தால் இதை செய்யுங்க
சென்னை: இப்போது எல்லாம் ரயிலில் 3 மாதம் முன்பே டிக்கெட்டை முன்பதிவு செய்து ஏறினாலும், வேறு யாராவது உட்கார்ந்து கொண்டு இடம் தர மறுக்கிறார்கள். இப்படிப்பட்ட சூழலில் ரயில் பயணிகள் யாரிடம் புகார் அளிப்பது, எப்படி பிரச்சனையை கையாள்வது என்று தெரியாமல் இருக்கிறார்கள். ஒருவேளை ரயிலில் நீங்கள் முன்பதிவு செய்த இருக்கையை யாராவது உட்கார்ந்துகொண்டு சீட் தர மறுத்தால் இதை செய்யுங்கள்.
சென்னையில் இருந்து திருநெல்வேலிக்கோ, அல்லது கன்னியாகுமரிக்கோ, மதுரைக்கோ, தூத்துக்குடிக்கோ, தென்காசிக்கோ ரயிலில் டிக்கெட் முன்பதிவு செய்வது என்பது, பல்லாயிரம் மக்களுக்கு மத்தியில் கடைசி பேருந்தில் ஓடிப்பிடித்து ஏறி தூண்டு போட்டு இடம் பிடிப்பதை போட்டு சவாலானது. முன்கூட்டிய திட்டமிடல் இருக்க வேண்டும். இப்போதுதான் சொந்த ஊர் செல்ல வேண்டும். இந்த நாளில் தான் அலுவலகத்தில் விடுமுறை கேட்க வேண்டும். இந்த நாளில் தான் திரும்ப வர வேண்டும். இந்த நேரத்தில் தான் சென்னையில் இருந்து ரயிலில் ஏற வேண்டும். இந்த நேரத்தில் தான் சொந்த ஊரில் ரயிலில் ஏற வேண்டும் என்பது போட்ட திட்டமிடல்கள் அவ்வளவு எளிதானது அல்ல. ஏன் தமிழ்நாட்டில் வாழும் பலருக்கு சாத்தியமே இல்லாத ஒன்று. ரயிலில் டிக்கெட் கிடைக்கும் நாளில் தான் பலரும் சொந்த ஊர் செல்ல விரும்புகிறார்கள்.

வார விடுமுறை நாட்கள், காலாண்டு, அரையாண்டு, முழு ஆண்டு விடுமுறை நாட்கள், பொங்கல், தீபாவளி, ஆயுத பூஜை, குடியரசு தினம், சுதந்திர தினம், விநாயகர் சதுர்த்தி, கிறிஸ்துமஸ் மற்றும் முகூர்த்த நாட்களில் ரயிலில் டிக்கெட் முன்பதிவு என்பது 4 மாதங்கள் முன்பே முடிந்துவிடும், அதுவும் டிக்கெட் முன்பதிவு வெறும் சில நிமிடங்களில் முடிந்துவிடும். இதனால் ரயிலில் டிக்கெட் கிடைக்காமல் அவதிப்படுவோர் அதிகமாக உள்ளனர்.
முன்பு ரயிலில் பொதுப்பெட்டி பயணிகள் ஏறினால் அடுத்த ரயில் நிலையத்தில் இறக்கிவிடப்படுவார்கள். அத்துடன் அபராதமும் விதிக்கப்படும். அதேபோல் சர்வசாதாரணமாக பொதுப்பெட்டி பயணிகள் முன்பதிவு பெட்டிகளில் ஏற மாட்டார்கள். ஆனால் இப்போது அபபடி இல்லை.. சர்வ சாதாரணமாக முன்பதிவு செய்த பெட்டியில் அன்ரிசர்வ்டு பயணிகள் ஏறுகிறார்கள். அத்துடன் ஏற்கனவே முன்பதிவு செய்த பயணிகளின் இருக்கையில் உட்கார்ந்து கொண்டு, சீட் தரவும் மறுக்கிறார்கள்.
அப்படி ரயிலில் நீங்கள் முன்பதிவு செய்த இருக்கையை யாராவது உட்கார்ந்துகொண்டு உங்களுக்கு சீட் தர மறுத்தால் நீங்கள் உடனடியாக உங்கள் செல்போனில் 139 என்ற ரயில்வே உதவி எண்ணுக்கு அழைக்கலாம். அதேநேரம் செல்போனில் SEAT என்று டைப் செய்து ஸ்பேஸ் விட்ட சீட் நம்பரை டைப் செய்யுங்கள், அடுத்ததாக PNR என்று டைப் செய்து ஸ்பேஸ் விட்டு பிஎன்ஆர் நம்பரை டைப்செய்யுங்கள். முடிவில் OCCUPIED BY ANOTHER PASS என்று டைப் செய்த 139 என்ற எண்ணிற்கு எஸ்எம் எஸ் அனுப்புங்கள். அப்படி அனுப்பினால், 10 நிமிடத்தில் பிடிஆர் வந்து அவரை துரத்திவிடுவார்..












Click it and Unblock the Notifications