Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ஒரே ஒரு தொகுதிக்கு 77 பேர் போட்டி.. மார்ச் 2ல் வாக்கு எண்ணிக்கை எப்படி நடக்கும் தெரியுமா?

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் வாக்கு எண்ணிக்கை எப்படி நடக்கும் தெரியுமா?

Subscribe to Oneindia Tamil

சென்னை: ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் மகுடம் சூட்டப்போவது யார் என்பது மார்ச் 2ஆம் தேதி தெரியவரும்.

ஈரோடு கிழக்கு தொகுதிக்கு இன்று நடந்து வரும் தேர்தலில் அதிமுக சார்பில் கே எஸ் தென்னரசுவும் திமுக கூட்டணி சார்பில் காங்கிரஸ் கட்சியின் ஈவிகேஎஸ் இளங்கோவன் போட்டியிட்டுள்ளனர்.

நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர் மேனகா, தேமுதிக சார்பில் ஆனந்த் ஆகியோர் களத்தில் இருக்கிறார்கள். இவர்கள் அல்லாமல் சுயேச்சைகள் 73 பேர் போட்டியிடுகிறார்கள். இந்த தேர்தலுக்காக 1,430 மின்னணு வாக்கு பதிவு இயந்திரங்கள் நிறுவப்பட்டுள்ளன.

52 இடங்கள்

52 இடங்கள்

52 இடங்களில் 238 வாக்குச்சாவடிகள் வைக்கப்பட்டுள்ளன. 5 மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள், 1 கட்டுப்பாட்டு கருவி, 1 வி.வி.பேட் ஆகியவை பயன்படுத்தப்படவுள்ளன. அவற்றில் 32 வாக்குச் சாவடிகள் பதற்றம் நிறைந்தவையாக அடையாளம் காணப்பட்டுள்ளன. நேற்று முன் தினம் மாலை 6 மணியுடன் பிரச்சாரம் ஓய்ந்தது. இந்த பிரச்சாரத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின், எடப்பாடி பழனிசாமி, சீமான், பிரேமலதா விஜயகாந்த், கமல்ஹாசன், அண்ணாமலை உள்ளிட்டோர் பிரச்சாரத்தில் ஈடுபட்டிருந்தனர்.

வேட்பாளர்கள்

வேட்பாளர்கள்

இந்த நிலையில் இன்றைய தினம் வாக்குப் பதிவு காலை 7 மணிக்கு தொடங்கியது. காலை முதல் வேட்பாளர்கள் ஈவிகேஎஸ் இளங்கோவன், நாம் தமிழர் மேனகா ஆகியோர் வாக்களித்தனர். இதையடுத்து தேமுதிக துண்டு அணிந்து வந்த ஆனந்துக்கு வாக்களிக்க அனுமதி மறுக்கப்பட்டது. இதையடுத்து அவர் துண்டை அகற்றிவிட்டு வாக்குச்சாவடிக்கு போய் வாக்கை பதிவு செய்தார்.

ராகு காலம்

ராகு காலம்

சரியாக இன்று 7.30-9.00 ராகுக்காலம் முடிந்தவுடன் வாக்களிக்க வந்தார் அதிமுக வேட்பாளர் தென்னரசு. வாக்குப் பதிவு அமைதியாக நடந்து வருவதாக வேட்பாளர்கள் தெரிவித்துள்ளனர். இதே போல் வாக்குப் பதிவு முடியும் வரை நடைபெற வேண்டும் என மேனகா கேட்டுக் கொண்டார். ஒரு சில இடங்களில் வாக்காளர்களுக்கு வைக்கப்படும் மை அழிந்து விடுவதாக ஒரு தகவல் வெளியானது. இதை தேர்தல் நடத்தும் அலுவலர் சிவக்குமார் மறுத்தார்.

மாலை முடியும் வாக்குப் பதிவு

மாலை முடியும் வாக்குப் பதிவு

இந்த வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெறுகிறது. மொத்தம் 2.20 லட்சம் வாக்காளர்கள் உள்ளனர். வாக்குப்பதிவு முடிந்தவுடன், சித்தோடு ஐஆர்டிடி பொறியியல் கல்லூரியில் வாக்குப் பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டு, மார்ச் 2-ம் தேதி வாக்கு எண்ணிக்கை காலை 8 மணிக்கு நடக்கவுள்ளது.

ஆட்சியர் ஆய்வு

ஆட்சியர் ஆய்வு

இதற்கான முன்னேற்பாடுகளை மாவட்டத் தேர்தல் அதிகாரியும் ஆட்சியருமான கிருஷ்ணன் உண்ணி உள்ளிட்டோர் பார்வையிட்டு ஆய்வு செய்தனர். வேட்பாளர்கள் எண்ணிக்கை அதிகமாக உள்ளதால், ஓட்டு எண்ணிக்கையை அறிவிக்க மிகவும் தாமதமாகும் என்ற கருத்து எழுந்தது.

2 அறைகளில்

2 அறைகளில்

இதனால், தேர்தல் ஆணைய உத்தரவுப்படி, 2 அறைகளில் வாக்கு எண்ணிக்கை நடக்க உள்ளது. ஒவ்வொரு அறையிலும் தலா 14 மேசை என 28 மேசைகளில் வாக்கு எண்ணிக்கை நடக்க உள்ளது. மதியம், 3 மணிக்குள் வாக்கு எண்ணிக்கை நிறைவடைய வாய்ப்புள்ளதாக தேர்தல் அலுவலர்கள் தெரிவித்தனர். ஒவ்வொரு சுற்றுகளின் போதும் யார் யார் எத்தனை வாக்குகளை பெற்றனர் என்பது அறிவிக்கப்படும். வெற்றியாளர் அன்று மாலையே தேர்தல் அலுவலரிடம் வெற்றி சான்றிதழை பெற்றுக் கொள்வார். இதன்பிறகு ஈரோடு கிழக்கு எம்எல்ஏவாக தேர்வு செய்யப்பட்டவருக்கு ஆளுநர் மாளிகையில் பதவிப்பிரமாணம் நிகழ்வு நடைபெறும்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+