2 கேஸ் சிலிண்டர் வெச்சிருக்கீங்களா? அப்ப கஷ்டம்தான்.. கரண்ட் பில்லை ரெடியா வைங்க.. தமிழக அரசு அதிரடி
சென்னை: புதிய ரேஷன் கார்டுகள் குறித்து 2 விதமான தகவல்கள், கடந்த 2 நாட்களாகவே சோஷியல் மீடியாவில் வலம்வந்து கொண்டிருக்கின்றன. இதுகுறித்து கோரிக்கை ஒன்று பொதுமக்களிடமிருந்து எழுந்துள்ளது. அது என்ன?
நம்முடைய தமிழகத்தை பொறுத்தவரை, மகளிர் உரிமைத்தொகை ரூ.1000 வழங்குவதையொட்டி, புதிய ரேஷன் கார்டுகள் பலருக்கும் வழங்கப்படாமல் இருந்தது. ஆனாலும் கடந்த சில மாதங்களுக்கு முன்பு, புதிதாக ரேஷன் கார்டுகளை கேட்டு விண்ணப்பத்தவர்களின் வீடுகளுக்கு, அதிகாரிகள் நேரடியாகவே சென்று ஆய்வு செய்திருந்தனர்.
விண்ணப்பங்கள்: இந்த திடீர் ஆய்வுக்கு காரணம், 2 பேருக்கு ஒரு ரேஷன் கார்டு வேண்டும் என்பதற்காகவே தாய்-தந்தையர் பெயரில் பலர் விண்ணப்பித்து விட்டார்களாம். அதாவது, ஒரே வீட்டில் வசிப்பவர் பெற்றோர் பெயரில் ஒரு கார்டும், மகன்-மருமகள் பெயரில் மற்றொரு கார்டு கேட்டும் விண்ணப்பித்திருக்கிறார்களாம்.

அதனால்தான், விண்ணப்பிக்கும் எல்லாருக்குமே புது ரேஷன் அட்டைகளை தந்துவிடாமல், தங்களுக்கு வந்து சேரும் விண்ணப்பங்களில், தகுதியான அட்டைகளை தேர்ந்தெடுக்க விண்ணப்பத்துடன் இணைத்திருக்கும் ஆவணங்கள் சரியாக உள்ளதா? என்பதையெல்லாம் அதிகாரிகள் ஆய்வு செய்தார்கள். பின்னர், சம்பந்தப்பட்ட விண்ணப்பதாரரின் வீடுகளுக்கே நேரடியாகவே சென்று, அந்த வீட்டையும் ஆய்வு செய்தார்கள்.
நேரடி ஆய்வு: அதன்படி, அவர்களின் கிச்சனில் கேஸ் சிலிண்டர் 1 இருக்கிறதா? அல்லது 2 இருக்கிறதா? கேஸ் அடுப்பு எத்தனை இருக்கிறது? அது யார் பெயரில் பதிவாகி உள்ளது? என்றெல்லாம் ஆய்வு நடத்தியிருந்தார்கள். இந்த ஆய்வுகள் முடிந்ததுமே, புதிய ரேஷன் அட்டைக்கு விண்ணப்பித்து காத்திருக்கும் அனைவருக்கும், கார்டுகள் விநியோகிக்கப்படும் என்று அதிகாரிகள் தரப்பில் சொல்லப்பட்டது.
இந்நிலையில், புதிய ரேஷன் கார்டுகள் குறித்து மற்றொரு புது தகவல் வெளியாகியிருக்கிறது. அதாவது, மகளிர் உரிமைத்தொகை பெற, ஒரே குடும்பத்தில் உள்ளவர்களும், புதிய ரேஷன் கார்டு கேட்டு விண்ணப்பிக்கிறார்களாம். பெற்றோருடன் இல்லாமல், ஒரே வீட்டின் வேறு தளத்தில் அல்லது தனியாக வசிப்பவருக்கு புது கார்டு வழங்குவதில் ஆட்சேபம் இல்லை. ஆனால், விண்ணப்பதாரர்களின் வீடுகளை ஆய்வு செய்ததில், ஒரே முகவரியில் வசிக்கின்றனர். 2, 3, கேஸ் இணைப்புகளும் உள்ளன.
இதனை தடுப்பதற்காகவே, மின் கணக்கீடு அட்டை, சொத்து வரி ரசீது ஆவணங்களை சமர்ப்பிக்க வேண்டும் என்று அதிகாரிகள் உத்தரவிட்டிருக்கிறார்களாம். எனவே, பொது வினியோக திட்ட இணையதளத்தில், புது ரேஷன் கார்டுக்கு விண்ணப்பிக்கும்போது, திருமணச்சான்று, சமையல் காஸ் சிலிண்டர் ரசீது, ஆதார் நம்பர் போன்றவற்றை பதிவேற்றம் செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளார்கள்.
கரண்ட் பில்: அதன்படியே, புதிய கார்டு வழங்கும் பணிகளில் அதிகாரிகள் மும்முரமாக ஈடுபட்டு வருகிறார்கள்.. அவர்கள் ஆய்வுக்கு செல்லும்போது கரண்ட்பில் அட்டை, சொத்து வரி ரசீது போன்றவற்றையும் கேட்டு வாங்கி பரிசோதிக்கிறார்கள்.. புது கார்டுக்கு விண்ணப்பித்த பயனாளிகள் தகுதியான நபர்களா என்பதை உறுதி செய்யவே, இந்த கரண்ட் பில் கார்டு, சொத்து வரி ரசீது ஆவணங்கள் கேட்கப்படுகின்றன.
தனி வீட்டில் வசிப்பவர், கேஸ் ரசீது வழங்கினால் போதுமானது... ஒப்புதல் அளிக்கப்பட்ட பயனாளிகளுக்கு, விரைவில் புதிய கார்டுகள் வழங்கப்படுமாம்.
ஆவணங்கள்: இப்படி ஆவணங்களை பதிவேற்றம் செய்ததுமே, சம்பந்தப்பட்ட விண்ணப்பதாரரின் முகவரியில் உணவு வழங்கல் அதிகாரிகள் ஆய்வு செய்து, தனி கிச்சனில் வசிப்பதை உறுதி செய்து, ரேஷன் கார்டு வழங்க பரிந்துரை செய்வார்கள்.. அதற்கு பிறகே, ரேஷன் கார்டு வழங்க ஒப்புதல் அளிக்கப்படும்.. இந்த பணிகள் அனைத்துமே 30 நாட்களுக்குள் முடிக்கப்பட வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் ரேஷன் கடைகளில் மண்ணெண்ணெய் வாங்கக்கூடிய கார்டுதார்களின் வீடுகளில், உண்மையிலேயே கேஸ் இணைப்பு இருக்கிறதா? இல்லையா என்பதை ஆய்வு செய்யுமாறு, ஏற்கனவே உணவு வழங்கல் துறை அதிகாரிகளுக்கு தமிழக அரசு உத்தரவிட்டிருக்கிறது. இப்போது, விண்ணப்பித்த தகுதிவாய்ந்த அனைவருக்குமே புதிய ரேஷன் கார்டுகள் கிடைக்க வேண்டும் என்பதற்காக, அதிகாரிகள் மேற்கொள்ளும் இந்த அதிரடிகள் பொதுமக்களிடையே நம்பிக்கையை தந்து வருகிறது.
வேண்டுகோள்: எனினும், ஒருசிலர் முறைகேடாக கார்டு பெறுவதை காரணம் காட்டியே, தகுதியான நபர்களுக்கு ரேஷன் கார்டு வழங்குவதை தாமதிக்கக் கூடாது என்றும் பொதுமக்கள் தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்து வருகிறார்கள்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications