பாரத ஸ்டேட் வங்கி.. அதென்ன மிஸ்டு கால் பேங்கிங் சேவை.. எஸ்பிஐன் ஆன்லைன் வசதி.. SBI பேலன்ஸ் தெரியணுமா
சென்னை: எஸ்பிஐ வங்கியில் உங்களுக்கு கணக்கு இருக்கிறதா? அப்படி அக்கவுண்ட் வைத்திருக்கிறீர்கள் என்றால், எஸ்பிஐ மிஸ்டு கால் பேங்கிங் சேவையை எப்படி பதிவு செய்வது தெரியுமா? உங்கள் வங்கி கணக்கு இருப்பை ஆன்லைனில் எப்படி அறிந்து கொள்வது தெரியுமா?
நாட்டின் மிகப்பெரிய கடன் வழங்குநராக, பாரத ஸ்டேட் வங்கி திகழ்ந்து கொண்டிருக்கிறது.. தன்னுடைய சேவையால், ஏராளமான வாடிக்கையாளர்களையும் பெற்றுள்ளது. அதனால்தான், வாடிக்கையாளர்களின் வசதியை கருத்தில்கொண்டு, ஆன்லைன் சேவைகளை எஸ்பிஐ வழங்கி கொண்டிருக்கிறது.

ஆன்லைன்மயம்: எஸ்பிஐயில் அக்கவுண்ட் ஆரம்பிப்பதிலிருந்து, வங்கி கணக்கை டிரான்ஸ்பர் செய்வதுவரை, அனைத்துமே ஆன்லைன்மயமாகிவிட்டது.. இதனால், வாடிக்கையாளர்களுக்கு அலைச்சல் குறைகிறது.. நேரம் மிச்சப்படுத்தப்படுகிறது. வெறும் 5 நிமிடத்திலேயே, தங்கள் தேவைகளை ஆன்லைனில் நிவர்த்தி செய்து கொள்ளலாம்.
உங்கள் எஸ்பிஐ அக்கவுண்ட் குறித்த விவரங்களை அறிய 09223766666 என்ற இலவச எண்ணை வழங்கியிருக்கிறது.. அதேபோல, எஸ்பிஐ கணக்கில், இருப்பு தொடர்பான தகவல்களை பெற விரும்பினால், 09223766666 என்ற இலவச எண்ணுக்கு மிஸ்டு கால் செய்தாலும், உங்களுக்கு எஸ்எம்எஸ் மூலம் அனைத்து விவரமும் அனுப்பப்படும்.
இருப்பு எவ்வளவு: அதேபோல, இருப்பு எவ்வளவு உள்ளது என்பதை அறிய வேண்டுமானால், இதற்கும் ஆன்லைனிலேயே வழியுள்ளது.. மிஸ்டு கால் பேங்கிங் மூலம் எஸ்பிஐ பேலன்ஸை நீங்கள் சரிபார்த்து கொள்ளலாம். எஸ்பிஐ மிஸ்டு கால் பேங்கிங் சேவையை எப்படி பதிவு செய்வது தெரியுமா?
iOS மொபைலில் இருந்து மெசேஜ் அப்ளிகேஷனை ஓபன் செய்து, REGஅக்கௌன்ட் எண் என்பதை டைப் செய்ய வேண்டும்.. இப்போது, வங்கியில் ஏற்கனவே பதிவு செய்யப்பட்டிருக்கும் உங்களது செல்போன் நம்பரிலிருந்து 09223488888 என்ற எண்ணுக்கு மெசேஜ் அனுப்ப வேண்டும்.. இதன்மூலம் எஸ்பிஐ மிஸ்டு கால் வங்கி சேவைக்கு பதிவு செய்ய முடியும்.
பேலன்ஸ்: அதுமட்டுமல்ல, எஸ்பிஐ பேலன்ஸ் மற்றும் மினி ஸ்டேட்மெண்ட் போன்ற கட்டணமில்லா சேவைகளின் மூலமும் பேலன்ஸை சரிபார்க்கலாம். அதேபோல, +919022690226 என்ற நம்பரை வாட்ஸ்அப்பில் சேமித்துகொள்ள வேண்டும்.. பிறகு, chat box-ல் ஹாய் என்று டைப் செய்து, புதிய Chat தொடங்க வேண்டும். இதையடுத்து, Get Balance என்பதை கிளிக் செய்தால், உங்களது எஸ்பிஐ பேலன்ஸ் எவ்வளவு உள்ளது என்ற தகவல்களை பெறலாம்.
நெட் பேங்கிங் மூலமும் எஸ்பிஐ பேலன்ஸை சரிபார்க்கலாம்.. https://www.onlinesbi.sbi/ என்ற அதிகாரப்பூர்வமான வெப்சைட்டிற்குள் நுழைந்து லாகின் செய்து, உங்கள் இருப்பு கணக்கை அறிந்து கொள்ளலாம்.
ஆவணங்கள்: எஸ்பிஐ வங்கியில் உங்களுக்கு கணக்கு வைக்க வேண்டுமானால், விண்ணப்பதாரர் இந்திய குடிமகனாகவும், குறைந்தபட்சம் 18 வயது நிரம்பியவராகவும் இருக்க வேண்டும். பெற்றோர் அல்லது சட்டப்பூர்வ பாதுகாவலர் மைனருக்கான கணக்கை திறக்கலாம்... பாஸ்போர்ட், டிரைவிங் லைசென்ஸ், வாக்காளர் அடையாள அட்டை, பாஸ்போர்ட், பான் கார்டு படிவம் 16, 2 பாஸ்போர்ட் சைஸ் போட்டோ இதெல்லாம் அவசியமாகும்.












Click it and Unblock the Notifications