போஸ்ட் ஆபீஸ்ல அக்கவுண்ட் இருக்கா? இதை செய்யலன்னா "சேமிப்பு கணக்கு" முடங்கிருமாம்..அஞ்சல் துறை அதிரடி
சென்னை: அஞ்சல் துறை மிக முக்கிய அறிவிப்பு ஒன்றை தன்னுடைய வாடிக்கையாளர்களுக்காக அறிவித்துள்ளது. அத்துடன், வார்னிங் ஒன்றையும் வெளியிட்டுள்ளது. என்ன அது?
ஆதார் என்பது இப்போது அனைவருக்கு இன்றியமையாததாகிவிட்டது.. அதேபோல, அனைத்து அரசு துறைகளுமே ஆதார் அட்டையை கட்டாயமாக்கிவிட்டன. ஸ்கூல், காலேஜ் அட்மிஷன் முதல், கல்வி உதவி தொகையை பெறுவது வரை ஆதார் இல்லாமல் எதுவுமே நடைபெறுவதில்லை.

வங்கிகளில் கணக்கு துவங்க வேண்டுமானாலும், சொத்துக்களை பதிய வேண்டுமானாலும், வருமான வரி கட்ட வேண்டுமானாலும், மத்திய, மாநில அரசுகள் வழங்கும் உதவித்தொகைகளை பெற வேண்டுமானாலும், அனைத்துக்குமே ஆதார் கார்டுகள் தேவையாகிவிட்டன.
ஆதார் கட்டாயம்: அந்தவகையில் வங்கிகளும், ஆதாரையே தங்கள் கஸ்டமர்களிடம் முன்னிறுத்துகின்றன. இப்போதுகூட போஸ்ட் ஆபீஸில் கணக்கு வைத்திருப்பவர்களுக்கு முக்கிய அறிவிப்பினை அஞ்சல்துறை வெளியிட்டுள்ளது.
மக்களின் நம்பிக்கையை பெற்றது இந்திய அஞ்சல் துறை.. அதனால்தான், இதில், பெரும்பாலானோர் கணக்கு தொடங்கி சேமித்து வருகின்றனர்... மக்களின் தேவையை கருத்தில் கொண்டு அஞ்சலகமும், ஏராளமான சேமிப்பு திட்டங்களை அறிமுகப்படுத்தி வருகிறது. எனினும், அஞ்சலக சேமிப்பு திட்டத்தின் பாதுகாப்பை உறுதி செய்யவேண்டிய கட்டாயமும், வங்கிக்கு உள்ளது. அத்துடன், கணக்கு வைத்திருப்பவர்களின் வசதியையும் மேம்படுத்த வேண்டியிருக்கிறது.
புதிய அதிரடி: அதனால்தான், வாடிக்கையாளர்கள் கட்டாயம் தங்களின் ஆதார் மற்றும் மொபைல் எண்ணை கணக்குடன் இணைக்க வேண்டும் என அஞ்சல் துறை உத்தரவிட்டுள்ளது.
தங்கள் ஆதார் எண்ணை சம்பந்தப்பட்ட வங்கி அல்லது அஞ்சல் அலுவலகத்தில் கண்டிப்பாக சமர்பிக்க வேண்டும் என்றும் இந்திய அஞ்சல் துறை சேமிப்பு கணக்குடன் கட்டாயம் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளது. இந்த விதிமுறையை அனைத்து வாடிக்கையாளர் கடைபிடிக்க வேண்டும் வேண்டும் என்றும், இல்லாவிட்டால், அவர்களது சேமிப்புக் கணக்குகள் முடக்கப்பட்டு விடும் என்று மத்திய அரசு எச்சரித்திருக்கிறது.
சிறுசேமிப்பு கணக்கு: அஞ்சலக சிறுசேமிப்புக் கணக்குத் திட்டம் வைத்திருப்பவர்கள் பரிவர்த்தனைகளுக்குக் கட்டுப்பாடுகளைத் தவிர்க்க வேண்டுமானால், ஒரு மாதத்துக்குள் அவர்களின் ஆதார் மற்றும் மொபைல் எண்ணை தங்கள் கணக்குகளுடன் இணைக்குமாறும் அஞ்சல் துறை கேட்டுக் கொண்டுள்ளது.
அத்துடன் தங்கள் கணக்கு தொடர்பான விவரங்களை அறியவும் எஸ்எம்எஸ் மூலமாக செய்திகளை பெறவும் கட்டாயம் மொபைல் எண்ணை இணைக்க வேண்டும் என்றும் அஞ்சல்துறை கேட்டுக் கொண்டுள்ளது.
-
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
எடப்பாடி வீட்டிற்கு வந்த எஸ்பி வேலுமணி.. சிவி சண்முகம் மட்டும் மிஸ்ஸிங்.. தனித்துவிடப்படுகிறாரா?












Click it and Unblock the Notifications